சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

ஞாயிறு, 11 ஜூலை, 2010

திராவிட மொழிகள்

திராவிட மொழியினை திருந்திய மொழிகள் என்றும், திருந்த மொழிகள் என்றும் இருவகை பாகுபாடு செய்கிறார் கால்டுவெல் அவர்கள்.
தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, என்னும் 6  ம்  இலக்கியம் பெற்ற மொழிகள். மற்ற திராவிட மொழிகள் எழுதும் இலக்கியமும் அற்றனவாய் உள்ள திராவிட மொழிகள்.

தமிழ் 
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்  தமிழ்கூறும் நல்லுலகு (தொல்ல்காப்பியம்) என்று பழங்காலத்திலேயே தமிழ் வழியே நாட்டின் எல்லை கூறப்பட்டுள்ளது.
இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், முதலிய கிழக்குத் தீவுகளிலும் தமிழ் மிகப் பலரால் பேசப்பட்டு வருகிறது.
திராவிட மொழிகளில் பிறமொழிக் கலப்புக் குறைந்த மொழி, இலக்கிய வளம் மிகுந்த மொழி இதுவே.

தெலுகு.
தமிழ் நாட்டின் வடக்கே உள்ள ஆந்திர நாட்டு மொழி இது. பழநதமிழிலக்கியம் ஆந்திரரை வடுகர் என்றும் அந்நாட்டை மொழி வேறுபட்ட நாடு என்றும் கூறுகிறது.

கன்னடம்.
மைசூர் மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும், பேசப்படும் மொழி. நீலகிரியில் உள்ள பாடகர் என்பவர் பேசுவது பழைய கன்னடம். கர்நாடகம் திரிந்து கன்னடம் ஆயிற்று என்றும் அது வடசொல் என்றும் கூறுவார் வடமொழி மோகம் உள்ளவர். டாக்டர் குண்டர்ட் என்பவர் கரு+நாடு+அகம்=கருநாடகம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்பர்.

மலையாளம் :
தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டின் மொழி இது.
இதனை தமிழ்நாடு ஓத மொழி என்பதை விட தமிழின் (மிகத்திரிந்த) கிளை மொழி என்பதே பொருந்தும் என்கிறார் கால்டுவெல்.
சிலப்பதிகாரம், பதிற்று பத்து, புறநாநூற்றின் பல பாடல்களும் சேர நாட்டில் இயற்ற்றபட்டதே மலையாளமும் தமிழும் ஒன்றே என துணியலாம்.
வடமொழி சார்பு மிகுந்து மிகமிகத் திருப்பு உற்று வேறொரு மொழியாக வளர்ந்துவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More