
திருவரங்கம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு...