சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 31 ஜூலை, 2010

டௌ கெமிக்கல்ஸ்

டௌ கெமிக்கல்ஸ்













2001 -இல் இன்னொரு அமெரிக்க ரசாயனக் கம்பெனியான டௌ கெமிக்கல்ஸ் கார்பைடு கம்பனியை வாங்கிவிட்டது.  வியத்நாமில் மக்களை எரித்துக் கொள்வதற்கான நாபாம் என்ற பாஸ்பரஸ் குண்டுகளையும், காடுகளை எரித்துப் போட்டலாக்குவதர்கான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு ரசாயனத்தையும் அமெரிக்கவுக்கு தயாரித்துக் கொடுத்தான், சதாம் உசேனுக்கு பேரழிவு ரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்ததும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இந்தக் கொலைக்கார நிறுவனம் தான்,  போபால் ஆலையில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்றிருக்கும் கொடிய ரசாயனக் கழிவுகளை அரசாங்கம் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று கூறுகிறது டௌ கெமிக்கல்ஸ். ரசாயன கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்கி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் பல புதிய நோய்களுக்கு ௨௬ ஆண்டுகளாகப் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, யூனியன் கார்பைடு நடத்தி வந்த மருத்துவமனைக்கும் தான் செலவு செய்ய முடியாது என்று கூறுகிறது டௌ.

ஒரு நிறுவனம் கை மாறும்போது, சொத்தும் கடனும் சேர்ந்துதான் கைமாறுகின்றன. வீட்டை வாங்கியவன் பழைய வீட்டு வரி பாக்கிக்கு நான் பொறுப்பில்லை என்று கூற முடியாது.  ஆனால் டௌ கெமிக்கல்ஸ் கூறுவதை ஏற்று அலையை சுத்தம் செய்வதற்கு, மருத்துவமனையை நடத்துவதற்கும் மன்மோகன் அரசு பொறுப்பேற்றுக் கொண்டு விட்டது இதற்கான செலவு சில நூறு கூடி ரூபாய்கள். அதுமட்டுமல்ல, போபால் தொடல்பான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற்றுக் கொண்டால் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு செயத் தயார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே டௌ கெமிக்கல்ஸ் பேரம் பேசியிருக்கிறது. இதற்க்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மணி சிங்வி. இவர் தான் இன்று டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வழக்குரைஞர். வழக்கையெல்லாம் மூட்டை கட்டி விடலாம் என்று இரண்டு ஆண்டுகள்ளுக்கு முன்னரே அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.  ப.சிதம்பரம் அமல்நாத் ஆகிய அமைச்சர்கள், சென்ற ஆண்டு போபாளுக்குச் சென்ற மதிய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஆலையின் மண்ணை கையில் அள்ளி எடுத்து என்ன நடந்து விட்டது, நான் செத்தா பொய் விட்டேன் என்று பாதிக்கப்பட்ட மக்களை நக்கலடித்திருக்கிறார். போபால்கள் நடக்கலாம், அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறி இருக்கிறார் மன்மோஹன்சிங்.

இறந்துபோன பூபால் மக்களின் உடல்களில் சயனைட் உள்ளிட்ட 21 நச்சு ரசாயன பொருட்கள் இருந்தததாக சவப் பரிசோதனை அறிக்கை  கூறுகிறது. அந்த ஆலைக்குள் நடந்த ரகசிய சோதனை என்ன, என்பது இந்த வலக்கை விசாரித்த சி.பி.ஐக்கே தெரியாது.  நாடு ஊரில் நச்சு ஆலையை அமைக்க அனுமதி கொடுத்த இந்திராவின் அரசு முதல், ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாக சான்றிதல் அளித்த தொழிற்சாலை இன்ஸ்பெக்டர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வரை யார் மீதும் வழக்கு இல்லை.விசாரணையும் இல்லை. மீண்டும் ஒரு போபால் போடுகோளை நடைபெறாமல் தடுக்கவும் மக்களைக் காப்பாற்றவும் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் மன்மோகன் அரசு கவலைப்படவில்லை.

மாறாக மீண்டும் ஒரு போபால் நடந்தால் நிவாரணம் கொடுக்காமல் குற்ற வழக்குகளில் சிக்காமல் அமெரிக்க முதலாளிகளைக் காப்பாற்றுவது எப்படி என்பது தான் இந்த அரசின் கவலையாக இருக்கிறது.  இந்திய அமெரிக்க அனுசக்க்தி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க கம்பெனிகளிடம் இந்திய அரசு வாங்கவிருக்கும் அணு உலைகளில் எந்திரக் கோளாறு காரணமாக விபத்து நடந்தாலும், அதற்க்கு அமெரிக்கக் கம்பெனிகளிடம் நட்ட ஈடு கேட்கவோ, வழக்கு தொடரவோ முடியாது என்று கூறும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாராக வைத்திருக்கிறார் மன்மோகன்சிங்.

நீதி!
போபால் தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இழைக்கப் பட்ட அநீதி என்று நாம் குமுறுகிறோம். அந்த அநீதிதான் இனி நீதி என்று ஆகிவிட்டது.  போபாலில் எதெல்லாம் சட்டமீறல் என்று கூறுகிறோமோ அவையே இப்போது சட்டங்கழகி வருகின்றன.  பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம் ஏழை நாட்டு மக்களைக் கொள்வது அவர்கள் உரிமை.  முதலாளிகள் கொழுப்பதே தோல் வளர்ச்சி என்று கூறும் கார்ப்பரேட் பங்கரவதத்தைத்தான்  காங்கிரசு, ப.ஜ.கா. தி.கு.கா அ.இ.அ.தி.மு.க போன்ற ஒட்டுக் கட்சிகளும் முன்மொழிகின்றன.
26 ஆண்டுகளுக்கு முன்  போபாளைப் பினக்காடாகிய நச்சுக்காற்று இன்று நாடெங்கும் சுழன்றடிக்கிறது.  விவசாயத்தை நாசமாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது.  காடுகலைப் பிடுங்கிக் கொண்டு பழங்குடி மக்களை வேட்டையாடுபிறது.  மீனவர்களை கடலை விட்டும், பழங்குடி மக்களை காட்டைவிட்டும் , சிறுவணிகர்களை சில்லறை வணிகத்திளிருந்தும் துரத்துகிறது.  தொழிலாளிகளின் உரிமைகளை வெட்டிஎரிந்து அவர்களுடைய உழைப்பைப் பிழிந்து சக்கையாக்கி துப்புகிறது.  எல்லாத்தரப்பு மக்களின் மூச்சையும் நிறுத்துகின்ற இந்த நச்சுக்காற்று சயனைட் வாஉ அல்ல இந்தன் பெயர் மறு காலனியாக்கம்.

வெள்ளி, 30 ஜூலை, 2010

காதுக்கள் கேட்க மகிமைகள்‏

1. "நான் சொல்வதை காது கொடுததுக் கேட்கிறானா?" பிரச்சினைகள் வரும்போது இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் கூறும் வார்த்தை இது. உலகில் கேட்பதில்தான் அதிக ஞானம் பெறமுடியும். வளளுவரும் "செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" எனறு கூறி இருககிறார்.

கண்கள் மனிதனுக்கு 80 சதவீத அறிதலைத் தருகிறதாம். ஆனால் கண்ணிருநதும், காது இலலாவிட்டால் நமக்கு உலகத் தொடர்பே அற்றுப்போகும். ஆமாம், எல்லாமே பேசாத உலகமாகத்தான் தெரியும். ஒரு நிமிடம் காதைப் பொத்திப் பாருங்கள். உண்மை புரியும். கேட்க முடியாவிட்டால் பேச்சும் வராது தெரியுமா?

2. ஒலி "டெசிபல்" எனற அலகால் அளக்கப்படுகிறது. மனிதனால் 20 முதல் 2,000 ஹெர்ட்ஸ் அலைநீளம் உள்ள ஒலியைக் கேட்க முடியும். டெசிபல் அளவில் 80 டெசிபல் ஒலியை ஆபத்தில்லாமல் கேட்கலாம்.  அதிக ஒலி உள்பட பல்வேறு காரணங்களால் காது கேட்பதில் கோளாறு ஏற்படும்.

சிலருக்கு பிறவியிலேயே காது கேட்காமல் போவதும் உண்டு. இதற்கு கர்ப்பிணி உண்ணும் மாத்திரையும் ஒரு காரணமாக இருக்கிறது. மற்றபடி பாரம்பரியம் காரணமாக இருக்கலாம். 

காதில் அழுக்கு சேருவது, செவிப்பறையில் ஓட்டை விழுவது, எலும்புகளில் அரிப்பு ஏற்படுவது என வேறு சில காரணங்களும் காது கேட்கும் திறனைப் பாதிக்கும்.

3. வெளிக்காது, நடுக்காது, உள்காது என 3 பகுதிகளாக காதை பிரிக்கிறார்கள். நடுக்காதில் இருக்கும் செவிப்பறை மற்றும் எலும்புகள் கேள்திறனில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உள்காதில் ஒலியுணர் நரம்புகளும், அதற்கு துணைபுரியும் திரவங்களும் இருக்கின்றன. பெரும்பாலான காது பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் வேறு நரம்புகளில் இருந்து பிரித்தெடுத்து புது நரம்பு வளர்த்துப் பொருத்தும் அளவுக்கு மருத்துவதொழில் நுட்பங்ஙகள் வளர்ந்துவிட்டன.

4. மூக்கு, தொண்டை, தாடையில் ஏற்படும் பாதிப்புகள் கூட காதில் பிரச்சினையை உருவாக்கலாம். இது மூளையின் தவறாமல் நடக்கிறது. காது நரம்புகள் மூளைக்கு அருகில் இருப்பதாலும், மற்ற நரம்புகளுடன் தொடர்பு இருப்பதாலும் மூளையின் தகவல்கள் இடம்மாறி வருவதால் காது பாதிப்பதாக உணரப்படுகிறது.

காதில் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் உடனே காது குடையக் கூடாது. வெளிச்சம் வரும் திசையில் காதைத் திருப்பினாலே பூச்சிகள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் அல்லது எண்ணெயை காதில் விட வேண்டும். இது பலன் தராவிட்டால் டாக்டரை அணுக வேண்டும்.

5. சீழ் வடிவது காதுகேட்கும் திறனைப் பாதிக்கும். இது ஊட்டச்சத்து குறைவு, காது மாசடைவதால் வரக்கூடியதாகும். தூர்நாற்றம் வீசாமல் வரும் சீழ் ஆபத்தில்லாதது. நாற்றம் அதிகமாக இருக்கும் சீழ் கேட்டல் திறனைப் பாதிக்கும்.

இதனால் நடுக்காதில் சதை வளர ஆரம்பிக்கும். இதை கவனிக்காமல் விட்டால் காது மொத்தமாக கேட்காமல் போய்விடும். இந்த பாதிப்பு "கொலஸ்டியட்டோமா" எனப்படுகிறது. ஆபரேஷன் செய்தாலும் (சிலவேளைகளில்) காதுகேட்கும் திறன் திரும்புமா? என்பது சந்தேகம்தான்.

6. குரும்பி எடுக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குச்சி, பின், சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ் என கையில் கிடைப்பதை வைத்து குரும்பியை எடுக்கிறார்கள். உண்மையில் குரும்பி இருப்பது காதுக்கு அவசியமானது. அது காதைப் பாதுகாக்கும். அதிகமான குரும்பி தானாகவே வெளியேறிவிடும்.

பட்ஸ் உபயோகிப்பது குரும்பியை உள்ளே தள்ளத்தான் செய்யும். சொட்டுமருந்து, அல்லது தேங்காய் எண்ணை மூலம் குரும்பியை வெளியில் எடுக்கலாம். சிறு கல், பாசி போன்ற பொருட்கள் உள் காதில் விழுந்தால் உடனே டாக்ரை அணுகுவது நல்லது.

7. காதில் ஈரத்தன்மை இருந்தால் தானாகவே பூஞ்சை வளர ஆரம்பித்துவிடும். இதனால் காது அடைக்கும், சீழ் வடியும். இதுபோன்ற பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்ட வேண்டும். சுயமாக சொட்டுமருந்து வாங்கி பயன்படுத்தக்கூடாது.

 எண்ணைவிடுவது, சொட்டுமருந்து விடுவதெல்லாம் பூஞ்சையை வளர்க்கும் உரம்போலத்தான் செயல்படும். இதை தடுக்க பூஞ்சையை சுத்தம் செய்துவிட்டு பூஞ்சைக்கு எதிரான சொட்டுமருந்தை பயன்படுத்த வேண்டும். பூஞ்சை ஒருமுறை வந்தால் மீண்டும் வளரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

8. கேட்கும் வேலையை மட்டும் காது செய்வதில்லை. உடல் வெப்பநிலையை சமநிலைபபடுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. காது, மூக்கு, தொண்டை மூன்றும் நெருங்கிய தொடர்பு உடையவை. காது கேட்பதில் தொண்டைக்குப் பங்கு உண்டு.

மனிதர்களைவிட விலங்குகள் காதை நுட்பமாக பயன்படுத்துகின்றன. பூகம்பம் முதலான இயற்கைச் சீற்றங்களையும் முன்கூட்டியே அவை கண்டுகொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மன்னர்கள் காலத்தில் மனிதர்களும் பூமியில் காதை வைத்து எதிரியின் படை எவ்வளவு தூரத்தில் வருகிறது, எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணித்தார்களாம்.

9. காது பிரச்சினைகளுக்கு உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான "காது கேட்டல் உதவி உபகரணங்கள்" கிடைக்கின்றன. இதில் சிலவற்றை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். இந்த வகைக் கருவிகள் பின்விளைவு ஏற்படுத்துவதில்லை. காதுகேட்கும் திறன் பெருமளவு பாதிக்கப்படடவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கருவிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

மிகச்சிறிய கருவிகள் பல உள்ளன. பி.டி.இ. கருவி (காதின் பின்னால் அணிவது), ஐ.டி.இ. கருவி (காதுக்குள் பொருத்தி விடுவது), ஐ.டி.சி., கருவி (உட்காதில் பொருத்துவது), சி.ஐ.சி., கருவி (கண்ணுக்கே தெரியாத ஆழத்தில் பொருத்துவதுஆகியவை குறிப்பிடத்தக்கவை.

10. இப்போதெல்லாம் எங்கும் சத்தம் அதிகமாக இருக்கிறது, இது காதுகளை வெகுவாகப் பாதிக்கும். ரெயில் இயங்கும் டெசிபல் அளவுக்கு மேல் ஒலிவரும் இடங்களில் காது பாதுகாப்புக் கருவி இல்லாமல் பணி செய்யக்கூடாது.

காதில் பஞ்சைவைத்துக் கொள்வது ஓரளவு பாதுகாப்பு தரலாம். 140 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் கேட்கக் கூடாது. அதிக ஒலிகள் காதை மட்டும் பாதிக்காமல் மனபாதிப்புகளையும் உருவாக்கும். வயிற்றில் புண், அஜீரணம் போன்ற கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். பார்வையும், கருவையும்கூட பாதிக்கும்.

வெளியீடு: தினத்தந்தி இலவச இணைப்புடன் குடும்ப மலர்-25.07.2010

நன்றி: ரங்கநாத் ஜ.

திங்கள், 26 ஜூலை, 2010

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!



சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று இந்திய தேசபக்தி பீரிட்டு வழிந்தது. இந்த முனையத்தில் வந்திறங்கிய விமானங்களை தூறல் பொழிந்து வரவேற்றார்கள்.
ஆனால் இதே தில்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏற முயன்ற நெரிசலில் சிலர் மிதிபட்டு இறந்தனர். ஏழைமக்கள் பயன்படுத்தும் ரயிலில் இடமில்லை. பிசினஸ் கிளாசில் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் கனவான்களுக்கு 13,000 கோடி செலவு.
புது தில்லியில் விரைவில் ஆரம்பிக்கப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப்பணிகள் மும்மூரமாக நடந்த வண்ணம் உள்ளன. உலக அளவில் மதிப்பே இல்லாத இந்த போட்டிக்காக பல ஆயிரம் மக்களது சேரிப்பகுதிகள் இரக்கமின்றி துடைத்தெறியப்பட்டு நகரத்திற்கு வெளியேதூக்கி எறியப்பட்டுள்ளன. தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கூட ஏமாற்றி இந்த விளையாட்டுப் போட்டிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவமாடுகிறது என்றால் செல்பேசி, வாகனங்கள், டி.வி என்று திசைதிருப்பும் அறிவாளிகளுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஏழைகள் தற்போது அதிகம் பெருகியிருக்கிறார்கள்.
ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த “ வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி” என்ற அமைப்பு, “பன்முக வறுமைக் குறியீடு ” என்ற அறிக்கையின் மூலம் ஒரு உண்மையைக் கூறியிருக்கிறது.
அதன்படி இந்தியாவில் உள்ள பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சேர்த்து 42 கோடியே  பத்து இலட்சம் மக்கள் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் வாழும் 41 கோடி ஏழைகளைக் காட்டிலும் அதிகம் என்று சொல்கிறது அந்த அறிக்கை.
ஆகவே இனி ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஆப்ரிக்காவை சொல்லாமல் இந்தியாவைச் சொல்வதே பொருத்தமானது. வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?
தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று கொடுமைகளின் சாதனைதான் இந்த 42 கோடி ஏழைகள். இனியும் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்பேசி வைத்திருக்கிறார்கள் என்பதால் ஏழைகளே இல்லை என்று கூசாமல் பொய் சொல்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு கட்டுரை விரைவில் வரும்.
இந்தியாவின் ஏழ்மை விகிதம் விரைந்து வளர்வதைப் போலவே பில்லியனர்களின் வருமானமும் அதிகரித்தே வருகிறது. ஒன்றின் இழப்பில் மற்றது பெருக்கிறது. பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் ஏழ்மையில் உழலும்போதுதான் சிறுபான்மை முதலாளிகள் கொழுக்க முடியும். இந்த விதியை என்று அடித்து நொறுக்குகிறோமோ அதுவரை ஏழைகளுக்கு விடிவு இல்லை.
இதுபற்றி ஹிந்து  நாளிதழில்  பேப்பரில் வந்துள்ள நேர்காணல்: Media hype and the reality of “new” India 





 
நன்றி வினவு 


சமயபுரம் மாரியாத்தா

வினவிலிருந்து........

சமயபுரம் மாரியாத்தா ! 

இந்த பிராடு வேலை எதுக்காத்தா?


சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கேட்டேன்.
திருப்பதி லார்டு வெங்கட்டின் மனைவி நாச்சியார் கழுத்திலிருந்து தாலி தவறி விழுந்து விட்டதாம். இதனால் சுமங்கலிப் பெண்களின் கணவன்மார்களுக்கு  ஆபத்தாம். பரிகாரத்திற்கு புது தாலி கட்ட வில்லை என்றால் கணவன் தலை சாயுமாம். இந்த மின்னஞ்சலையும் பத்து பேருக்கு அனுப்ப வேண்டுமாம். பிறகு இந்த தகவல் பலரது எஸ்.எம்.எஸ்ஸூக்கும் பரவியதை அறிந்தேன்.
பிறகென்ன? தி.நகரை மொய்த்த மக்கள் குறிப்பாக பெண்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுத்து தாலிகளை துய்த்து ஆபத்தை கடந்தார்கள். இப்படி அடிக்கடி நடப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.
தங்க நகை வியாபாரிகள் சிலர் வதந்திகளை உருவாக்கும் கம்பெனிகளை தொடர்பு கொண்டு இது போன்ற மிரட்டல்களை உருவாக்கி, பரப்பி, ஆதாயம் அடைகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் புலனாய்வு செய்து அம்பலப்படுத்த வேண்டும் என்று யோசித்தோம். கைகூடவில்லை.
தற்போது தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்!
“ மைத்துனன், மைத்துனிகள் அண்ணிக்கு தாலி கயிறு – புடவை வாங்கிக் கொடுத்து நூதன பரிகாரம்: சமயபுரம் மாரியம்மன் தாலி கீழே விழுந்ததாக பரபரப்பு! ”
இந்தச் செய்தியின் படி சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள மைத்துனிகளும், கொழுந்தன்களும், அண்ணன்களின்  மனைவிகளான அண்ணிகளுக்கு சிகப்பு புடவை, தாலி கயிறு, ஜாக்கெட் துணி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி தாம்பூலத் தட்டில் வைத்து கொடுத்து பரிகாரம் செய்கிறார்களாம்.
இந்த தகவல் நாளுக்கு நாள் அருகாமை கிராமங்களுக்கும் பரவி வருகிறதாம். இதனால் தாலி, புடவை, மங்களப் பொருட்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாம்.
திருட்டுபதி லார்டு லபக்தாஸூ போன்ற காஸ்ட்லியான சாமியார்களை வைத்து மட்டுமல்ல மாரியம்மன் போன்ற லோ கிளாஸ் சாமிகளையும் வைத்து இந்த வதந்தி மோசடிகள் திட்டமிட்டு பரபரப்பாக பரப்பப்படுகிறது. மிஸ்ஸஸ் வெங்கட்சலபதியை வைத்து தி.நகரின் தங்க நகை கொள்ளை நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தது போல சேலத்தின் சிறுவியாபாரிகள் ஆத்தாவை வைத்து ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.
காசுக்கேத்த தோசை, விரலுக்கேத்த வீக்கம், வெங்கிக்கு தி.நகர், மாரியாத்தாளுக்கு ஆத்தூர் கிராமங்கள். அர்பன் மார்க்கெட்டுக்கு அய்யா, ரூரல் மார்க்கெட்டுக்கு  ஆத்தா. இதில் பாமர மக்கள் மட்டும் ஏமாறுவதில்லை. மிகப்பெரும் பணக்காரர்களும் இந்த தெய்வக்குத்த மேனியாவுககு தப்புவதில்லை.
கர்நாடக பா.ஜ.க அரசில் அமைச்சர்களாய் அங்கம் வகிக்கும் ரெட்டி சகோதரர்கள் சட்ட விரோதமாக தாது கனிமத்தை 20,000 கோடி ரூபாய்க்கு வெட்டி எடுத்து மோசம் செய்திருக்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் சவுண்டு விட்டு வருகின்றன. ரெட்டி சகோதரர்களின் பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பா.ஜ. க அரசும், ரெட்டி காருக்களை கைவிட மாட்டோம் என்று அறிவிததிருக்கிறது.
லவுகீக உலகில் உள்ள கட்சிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட அதிகார பீடங்கள் அனைத்தையும் பெட்டிக்குள் அடக்கியிருந்தாலும், ஆன்மீக உலகத்தின் அதிகாரமான ஆண்டவனுக்கும் பவுசு கொடுத்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது ரெட்டிகாருக்களின் அபிப்ராயமாக இருக்கக் கூடும்.அதன் படி தமிழ்நாட்டின் தென்காசி நகரத்திலிருககும் மௌனசாமி மடத்தில் பெரும் யாகம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த யாகத்தில் ரெட்டியின் மனைவி கலந்து கொள்வதற்காக பெல்லாரியிலிருந்து தனி விமானத்தின் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தென்காசி போவதாகத் திட்டம். காலநிலை காரணமாக பறக்க முடியவில்லை என்பதால் யாகத்திற்கு செல்ல முடியாமல் பின்னர் கர்நாடகம் திரும்பினாராம்.
புரட்சித் தலைவி ஜெயலலிதா எதில் புரட்சி செய்தாரோ இல்லையோ யாகங்கள் நடத்துவதில் மட்டும் மாபெரும் புர்ரட்சி செய்தவர். மிளகாய் யாகம், கஜமுக யாகம், என்று அடிக்கடி செய்து பலன்களை ஸ்விஸ் வங்கியில் சேமித்து வருகிறார். புதுடெல்லியில் இருக்கும் தலைவர்கள் பலர் சாமியார்களின் காலில் விழுந்து தமது அரசியல் வினைகளுக்கு அங்கீகாரம் தேடுகின்றனர். கதவைத்திற புகழ் நித்தியானந்தா கூட இப்போது தினசரி நெருப்பு தியானம் செய்கிறாராம். உடலில் உள்ள காம நெருப்பை பேலன்ஸ் செய்வதற்கு இந்த மண்ணெண்ணெய் ஊற்றிய நெருப்பு. நெருப்பை நெருப்பால் அணைப்பது என்பது இதுதான் போலும். அந்த மண்ணெண்ணெய் கூட ரேசன் கடைகளில் ஏழை மக்கள் வாங்கும் ஒதுக்கீட்டிலிருந்து சுடப்பட்டிருக்கிறது.
இப்படி இந்தியாவின் சுவாசமே மூடநம்பிக்கைகளின் வழியாக இயங்கிக் கொண்டிருப்பதால் முதலாளிகள், வியாபாரிகள் அதை அறுவடை செய்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் அட்சயத் திரியை என்றால் யாருக்குத் தெரியும்?
எனவே எதிர்காலத்தில் கடவுள் மாம்ஸ்களை வைத்து என்னென்ன வதந்திகள் உருவாக்கப்பட்டு என்னென்ன பொருட்கள் திடீரென்று விற்கப்படும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த புனித பால் என்ற ஆக்டோபசின் உதவியால் கண்டு பிடித்திருக்கிறோம்.

1.    அமர்நாத்தில் சிலமாதம் மட்டும் புடைக்கும் ஜஸ் குச்சி லிங்கத்திற்கு கட்டப்பட்ட பட்டுத் துணி, ஜஸ் உருகிய போது கீழே விழுந்து விட்டதாம். இது அம்மாக்களுக்கு ஆகாதாம். இதனால் மகன்களும், மகள்களும், அப்பாக்களும் பனாரஸ் பட்டுச்சேலை எடுத்து கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டுமாம்.

2.    காசி விஸ்வநாதருக்கு போடப்பட்டிருந்த உருத்திராட்ச மாலையிலிருந்து ஒரு முத்து கீழே விழுந்து உடைந்து விட்டதாம். இது வழுக்கைத்தலை உடைய ஆண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துமாம். முடி பிளான்டிங் ஆபரேஷன் செய்தால்தான் தப்பிக்க முடியுமாம்.

3.    வங்கத்து காளிக்கு போடப்பட்டிருந்த குங்குமப் பொட்டில் சாயம் வெளுத்துவிட்டதாம். இதனால் சகோதரிகளுக்கு திருமணம் நடக்காதாம். பரிகாரமாய் லாக்மே மேக்கப் கிட் வாங்கி குடும்பத்தினர் கொடுக்க வேண்டுமாம்.

4.    பூரி ஜெகன்னாதரின் தேர் இந்த வருசம், ஒரு பள்ளத்தில் இறங்கி ஜாம் ஆகி நின்று விட்டதாம். இதனால் பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுமாம். பரிகாரமாய் குழந்தைகளுக்கு நீட் ஃபார் ஸ்பீட் வீடியோ கேம் – லேட்டஸ்ட் எடிசன் வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.

5.    திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட லட்டுவில் உள்ள முந்திரிப் பருப்பை எலி ஒன்று கடித்து விட்டதால் சாமி கடும் கோபத்தில் இருக்கிறாராம். இதற்காக இருநூறு நாட்களுக்கு  முந்திரிப் பருப்பை சமையலில் சேர்க்காவிட்டால் இல்லத்தரசிகளுக்கு ஆபத்தாம்.

6.    மயிலை கபாலியின் வஸ்திரத்தில் பல்லி கக்கா போய்விட்டதாம். பரிகாரமாக மயிலாப்பூர் குளக்கரையில் கும்பல் கும்பலாக நிற்கும் புரோகிதப் பெருமக்களுக்கு ராம்ராஜ் காட்டனில் ஒரு வேட்டியும், மினிஸ்டர் காட்டனில் ஒரு சட்டையும் எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்.

7.    திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்த போது அது தயிராகிவிட்டதாம். இதனால் தாய்மார்களுக்கு புத்திர பாக்கியம் ஆபத்தாம். புத்திர தோஷ பரிகாரமாக இன்னும் ஒரு மண்டலத்துக்கு தாய்மார்கள் பாலில் உறை ஊற்றி தயிராக்கக் கூடாதாம். டப்பா தயிர் வாங்கி பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டுமாம், அதிலும் நெல்லே தயிர் என்றால் ரொம்ப விசேசேமாம்

8.    ஸ்ரீரங்கத்தில் ஹாயாக படுத்திருக்கும் ரெங்கநாதன் வேலை வெட்டி இல்லாமல் தினசரி அக்கார அடிசலையும், வெண் பொங்கலையும் வெளுத்துக் கட்டியதில் கடும் கேஸ்டிரிக் பிராபளமாம். இறைக்கு வந்த இந்த பிரச்சனையால் பக்தர்களின் இரைப்பைக்கு ஆகாதாம், பரிகாரமாய் ரங்கனுக்கு ஜெலுசில் லிக்விட் தினசரி ஒரு பாட்டில் ஒரு மண்டலத்துக்கு படைக்கவேண்டுமாம்.

9.    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பழனியில் நிலை கொண்ட முருகனின் கோவணம் திடீரென விழுந்து விட்டதாம். திருமணமாகாத இளைஞர்களுக்கு இதனால் ஆண்மைக்குறைவு பிரச்சினை வருமாம். தப்பிக்க வேண்டுமென்றால், சிவராஜ் சித்தவைத்திய சாலைக்கு செல்வதுடன், ஜாக்கி உள்ளாடைகளை ஐந்து வருடத்திற்கு பயன்படுத்த வேண்டுமாம்.

10.    குருவாயரப்பனுக்கு போடப்பட்ட வைரமாலை திடீரென கீழே விழுந்து விட்டதால், ஓராண்டில் நடக்கும் திருமணங்களுக்கு பிரச்சினை ஏற்படுமாம். ஜாய் ஆலுக்காசில் வைர மாலை வாங்கி மூகூர்த்தமன்று போட்டுக் கொண்டால் ஆபத்தை கடந்து விடலாம்.

இதுக்கு மேல முடியல. கஷ்டமாக இருக்கிறது. மிச்சத்தை நீங்களே சொல்லுங்கள்! சிறந்தவைகளுக்கு பாண்டி பஜார் வியாபாரிகள் நிச்சயம் பரிசளிப்பார்கள்.

திங்கள், 19 ஜூலை, 2010

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!














சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது. அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.
அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளாய் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.
சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்கமுடியாது. சொந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கூட சுற்றுமுற்றும் பார்த்து தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.
இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்?
குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது. நிறுவனத்திற்கேற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலையைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிடமுடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.
துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள் (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.
ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையை தரகனிடம் தந்துவிட்டு அதைவிட பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாய் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.
ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது, போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்ட்பூர்வமாக கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர எனையவை இதை கண்டு கொள்வதில்லை.
சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும், அந்த வெயிலில் காலைமுதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால் போய்வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.
சாலைகளில், வீதிகளில் துப்புறவுத் தொழிலாளர்களோ, பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பர்தாவை பிசகாமல் பின்பற்றுகிறவர்களாய் இருப்பார்கள். கண்களையும், கைகளையும் தவிர ஏனைய அனைத்தையும் துணிகளால் சுற்றி மூடி மறைத்திருப்பார்கள். வெயிலின் தாக்கம் அப்படி.
யார் எங்கு வேலை செய்தாலும் அந்தந்த சூழலைப்பொருத்து சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சௌதியில் நேரிடுபவைகளை இந்த ரீதியில் வகைப்படுத்திவிட முடியாது. எந்த உரிமையும் இன்றி வேலையை மட்டும் செய் என்பதுதான் இங்குள்ள நிலை. தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் பதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.
துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களை தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள் தான் என்றாலும் இவைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் போராடி பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களின் பொறுப்பிலிருக்கும் தொழிலாளர்கள் குறித்து அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை.
லேபர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்கு பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.
அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை லேபர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (லேபர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால் அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவனது சொந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்கவேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்கு அனுப்பப்பட்டான்.
தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்திய தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும், அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இது இந்திய தூதரகத்திற்கு மட்டுமல்ல இங்கு தொழிலாளர்களாக இருக்கும் எந்த ஆசிய நாட்டு தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.
ஓவர்டைம் என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் எத்தனை மணி நேரம் உபரி வேலை செய்திருக்கிறோம் என்பது மாதக் கடைசியில் மகிழ்வையும் நிம்மதியையும் தரக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். சம்பளம் மட்டும் தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச்செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. இங்கு வேலை செய்யும் அனேகம் பேர் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்துவிடாமல் அப்படியே ஊருக்கு அனுப்பவேண்டும் என்று வைராக்கியமாகவே இருப்பார்கள். அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலை தான் ஒரே வழி. உபரி வேலைக்கு சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள் என்பன போன்ற எதுவும் அவர்களைப் பாதிக்காது.
ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் உபரிவேலைக்கு செல்ல ஆயத்தமாய் இருப்பார்கள். இதில் இன்னொரு உளவியல் காரணமும் இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலியல் தேவைகளை அசட்டை செய்துவிட்டு வந்தவர்கள் தாம். கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் இளம் மனைவியிடம், முகம் பார்க்கா குழந்தையிடம் தொலைபேசியில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தாம். அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.
ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்று தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தருணங்களைத்தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் டபுள் டூட்டி எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.
அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட மாதத்தில் எல்லா நாளும் வேலை இரட்டைச் சம்பளம் என்று கூறி சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால் முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச்சம்பளம் மட்டுமே. நிரந்தரமான உபரி வேலைக்கு வழி செய்கிறோம் என்று எட்டு மணி நேரம் வேலை வாங்கி விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஊதியம் கொடுக்கிறார்கள் (முழு ஊதியமே அவர்களின் வேலைக்கு போதுமானதாக இருப்பதில்லை என்பது வேறு விசயம்)
இதுபோன்ற உபரிவேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும் வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்) ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு.
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன.
வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத்தொட்டிகளைக் கூட வீடு வைக்காமல் கிளறித்தேடி பெப்ஸி டப்பாக்களை சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையாய் அலைபவர்கள் தாம். யாரும் பெப்ஸி குடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் சற்று தூரத்தில் இவர்களும் நின்று விடுவார்கள். ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்தது போலும் ஆகிவிடும், ஒரு பெப்ஸி டப்பா கிடைத்தது போலும் ஆகிவிடும். ஒரு பெப்ஸியின் அடக்கவிலையில் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் டப்பாவுக்காக 60 விழுக்காட்டை வசூலிக்கும் பெப்ஸி நிறுவனம், சாதாரணமாக 50 டிகிரியைத் தாண்டும் தகிக்கும் வெயிலில் அலைந்து சேகரிக்கும் பெப்ஸி டப்பாக்களை கிலோ ஒன்றரை ரியாலுக்கு வாங்கிக் கொள்வதை மெய்யாகவே கொல் வதை என்று சொல்லவேண்டும்.
இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுனர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் யாரையும் சந்தித்து நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களின் சூழ நிகழ்பவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்பு “ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே” என்பதுதான் பதிலாக இருக்கும்.
மொழி தெரியா ஒரு அன்னிய நாட்டில் பதினெட்டு மணி நேரம் வரை உழைத்தாலும், அந்த உழைப்பின் பலனில் பெரும் பகுதி உழைப்பவனைச் சேர்வதில்லை என்பதற்கு சொந்த நாடு அன்னிய நாடு என்பதெல்லாம் பேதமில்லை. உழைப்பவன் சுரண்டப்படவேண்டியவன் என்பதே பொது மொழி. சில கோடியே மக்கள் தொகையுள்ள இந்த நாட்டில் எண்ணெய் வளத்தின் மூலம் செல்வம் கொழித்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.
சௌதிகள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான வித்தியாசம் படு வேகமாக அதிகரிப்பதையடுத்து முதலில் எந்த நிறுவனமும் 7 விழுக்காடு அளவில் கட்டாயம் சௌதிகளுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும் பின்னர் இது 15 விழுக்காடாகவும் இது உயர்த்தப்பட்டது. அதையே வாய்ப்பாகக் கொண்டு இங்குள்ள நிறுவனங்கள் சௌதிகளுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பள வரம்பான 3000 ரியால் என்பதை நீக்கிவிட்டன. சௌதி பெண்கள் இப்போது துப்பறவு பணியாளராக 1800 ரியாலுக்கு பணி புறிகிறார்கள்.
அண்மைக் காலங்களில் இந்தியாவில் அறிமுகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெரு நிறுவனக்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட நகரியங்கள் ஆகிய அனைத்தும் நீண்ட காலமாகவே சௌதியில் செயல் பட்டு வருகின்றன. விளைவு வர்க்கக் கோடு தன்னை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை(முத்தவ்வா) அமைத்த அரசு அவர்கள் வளமாக வாழுகிறார்களா என்பதை கண்காணிக்க எதையும் செய்யவில்லை.
முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.



-    வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.
(நன்றி வினவு )

 

புலவர்களின் மானம்

சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி இயற்கையை கூர்ந்து நோக்கி உணர்ந்து அழகிய காட்சியை பாடினார்கள்.
புலவர்கள் மானம் நிறைந்தவர்கள். வறுமையால் வாடிய நிலையிலும் பிறர்க்குத் தாழ்ந்து பணிந்து போக முடியாத பெருமித மனநிலை பெருஞ்சித்தனார் முதலான புலவர் பலருக்கு இருந்தது. அதனால் புலவர்கள் செல்வர்களின் முன்னே நின்று கெஞ்சி கேட்பதாகப் பாட்டுகள் இல்லை.

மொசீகரனார் என்ற புலவர் கொண்கானத்து தலைவனை அணுகி போருனுதவி கேட்டபோது, எனக்குப் பொருண் கொடு என்று இறந்து கேட்க என்னால் இயலாது. ஆனால் உன்னுடைய மலையைப் புகழ்ந்து படுவது எனக்கு விருப்பமான செயல் எளிமையான  செயல் என்று கூறி அவன் மலையைப் பாடினார்.
ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு.  காசுக்காக எதைவேண்டுமானாலும் 
செய்யுமளவிற்கு மாறியுள்ளனர் இக்கால புலவர்கள் (சிலர் விதி விலக்காக உள்ளனர்)
முழுமதி இல்லாத நாடு இரவில் சென்று சிறுநீர் கழிக்கக் கூட வீரம் இல்லாதவர்களுக்கு "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட' என்று பாடல் எழுதும் அளவிற்கு இன்றைய புலவர்கள் மானம் கெட்டுள்ளனர்.
சங்க காலத்தில் புலவர்கள் காதல், வீரம், கோடை முதலியவற்றை பற்றி கூறும்போது சற்று கற்பனையையும் கலந்து இயற்கையை உவமையாக கொண்டு பாடுவார். வீரத்தினையும் கொடையும் பற்றி பாடும் பொழுது உண்மையை மட்டுமே பாடியுள்ளனர்.
ஆனால் தற்பொழுது எழுதும் தனிமனித விமரிசனப் பாடல்கள் பொய்யும் புரட்டுகலுமே நிறைந்திருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'தமிழ் படம்' என்ற திரைப்படத்தின் முதல் பாடலே இதற்க்கு சான்று. இந்தப் பாடலைப் பார்த்த பிறகாவது தனக்கு இனிமேல் இது போல் பாடல்கள் எழுத வேண்டாம் என்று போல்வார்களா நடிகர்கள். அல்லது இனிமேல் என்னால் இதுபோல் எழுத முடியாது என்று சொல்வர்களா    புலவர்கள் (பாடலாசிரியர்கள்)

சனி, 17 ஜூலை, 2010

கடவுள்

கடவுள் என்றால் என்ன என்றே தெரியாமல் பல கோடி பேர் இன்றளவும் பல கோவில்களுக்கும், பல பரதேசிகளிடமும் சென்று தனது பொன்னான வாழ்வு நேரத்தையும், செல்வங்களையும் வீணடித்து கொண்டிருக்கின்றனர். (எனது அம்மா உட்பட)
இன்றைக்கும் நாம் தெய்வங்கள் என்று கூருபவைகள் யாவும் பொய்யானதே. தெய்வம் என்பதே ஆதிகாலத்தில் நம் நாட்டில் (தமிழ் நாட்டில் ) இல்லை எனலாம். கி.மு 3 நூற்றாண்டில் இயற்ற்றப்பட்ட தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்த முதுபெரும் தமிழ் நூலாகும். 
பழக்கங்கள் தான் வழக்கங்கலாயின. அதுபோல் தான் தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த இலக்கியங்களை ஆராய்ந்த பிணிபு தான் அவர் அந்த இலக்கண நூலினையே இயற்றினார்.  இதற்கு அவர் முன்னோர் கூறியது, என்பர். எனக் குறிப்பிடுவதே சான்றாகும்.
அப்படிப்பட்ட அந்த நூலில் "ஞாயிறு போற்றதும்" என்று கூறினாரே தவிர வேறு தெய்வங்களையோ அதன் பெயர்களையோ அவர் குறிப்பிடவில்லை. தமிழின் கடவுள் நூல் எனவும், உலக மக்கள் அனைவருக்கும் பொது நூலான திருக்குறளிலும் 
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
என்று குரிபிடுகிறாரே ஒழிய இன்ன கடவுள் என்று எதனையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆக கடவுள் என்பது ஒன்றே என இவ்விரண்டு நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 
இந்த உலகத்திற்கு நன்மை பயப்பவை இயற்கை மட்டுமே. எனவேதான் தொல்காப்பியம் இயற்றுவதற்கு கடவுள் வாழ்த்து பாடலாய் ஞாயிறு போற்றதும் என்று சூரியனை வணங்குகி எழுதுகிறார். தற்பொழுது வழங்கப்படும் தெய்வங்களும் அதன் கதைகளும் கதையும், கற்பனையும் மட்டுமே.
கடவுள் என்பது என்ன?
கடவுள் என்பது கட+வுள் தன்னுள் கடந்து செல்லும் நிலை. தன்னை புரிந்து கொள்வது. இயற்கை போன்று பிறர்க்காக வாழ்பவர்களே கடவுள் ஆவார். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.

விளம்பரங்கள் (advertisement)

விளம்பரங்கள்

ஆரம்பகலங்களில் குறிப்பாகா சொன்னால் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பமான நேரங்களில் நிகழ்ச்சிக்கு இடையில் தான் விளம்பரங்கள் ஒளிப்பரப்புவார்கள். ஆனால் தற்போது நிலைமையே வேறு. விளம்பரங்களுக்கு இடையில்தான் நிகழ்ச்சியே ஒளிப்பரப்புகிரார்கள். அது சரி காசு வந்தால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்புவார்கள் (நித்தியானந்தா - ரஞ்சிதா படுக்கையறை ஒளிப்பதிவு காட்சி) இன்றைக்கு உள்ள தனியார் தொல்லைக்காட்சி நிலையத்தார்கள்.

அப்படி நான் பார்த்து ரசித்த விளம்பரங்கள் உலக பார்வைக்கு.

காப்பீடு நிறுவன விளம்பரம் :
நண்பர்கள் நிகழ்ச்சிக்கு மாறுவேடத்தில் சென்று வேடத்தினை கலைக்காமலேயே மகிழுந்தில் (car) வந்து கொண்டிருப்பார்கள். மகிழுந்து ஒட்டிக்கொண்டு வரும் நபர் மான் வேடம் அணிந்திருப்பார். சிறுது தூரம் போனபிறகு சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்திவிட்டு ஒரு புதருக்குள் செல்வார். அச்சமயம் சற்று தூரத்தில் ஒருவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு விலங்குகளை வேட்டையாட கத்து கொண்டு இருப்பார். தூரத்தில்,  இருந்து பார்ப்பதற்கு உண்மையான மான் போலவே வேடமிட்டவர் காட்சியளிப்பார். அதனால் வேட்டையடுபவர் வேடமிட்டவரை சுட்டு விட வண்டியில் உள்ளவர்கள் தூக்கம் விழித்து ஒலி வந்த இடத்தை நோக்கி காண்பார்கள். அப்போது திரையில் அந்த நிறுவனத்தில் ஈர்ப்பு வாரத்தில் வரும்
அது
துன்பங்கள் பலவகையில் வரும்.
............... காப்பீடு இருக்க பயமேன்.
......................................................................................

பால் விளம்பரம்
ஒரு சிறுவன் தன் தந்தையின் மகிழுந்தில் (car) உட்கார்ந்து கொண்டு வண்டி ஓட்டுவதை போல் செய்வன். அதற்க்கு அவன் தந்தை ஆக இதற்க்கு நீ இன்னமும் வளர வேண்டும் என்று சொல்வார். கோபமாகி வீட்டின் உள்ளே சென்று ஒரு தம்ளர் பாலினை குடிதிவிட்டு அவன் அப்பாவிடம் சாவியை கேட்பான். அவன் அப்பா திகைத்து நிற்பார். அந்த பால் தயாரிக்கும் நிறுவனம் அப்போது உபயோகிக்கும் வார்த்தை.
வேகமாக வளர .............. பால் குடிங்க.
.......................................................................... ...........

நகைக்கடை விளம்பரம்
நகை கடை விளம்பரத்துக்கு ஒரு பெண் அழகாய் கான்பிக்கபடுவாள்.  அதன் பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கப்படும். காட்சியமைப்புகளும் அழகாய் அமைத்திருப்பார்கள்.
அந்தப் பாடல்.........
அழகழகாய்....
அற்புதமாய்....
விதவிதமாய்.....
வித்தியாசமாய்....
.................. ஜுவல்லரி , திருநெல்வேலி.
என்று வரும்.
.........................................................................................
தேயிலை தூள் விளம்பரம்.
கணவன் மனைஒய் இருவரும் தேநீர் அருந்தி கொண்டிருப்பார்கள். அப்போது கணவர் மனிவியிடம் நான் உன்னிடல் ஒன்று சொல்லணும் என்று ஆரம்பிக்க 
மனைவி அவரிடம் அதுவா இதுவா என்று கேட்க, அதற்க்கு கணவர் மறுக்க
இறுதியில் மனைவி கோபத்தின் உச்சிக்கு செல்ல கணவர் மவுனமாக i love U என்று
சொல்லுவார். அப்போது இருவரும் ஒரு மாதிரி சிரிப்பார்கள். அந்த காட்சி பார்பதற்கு அழகாய் இருக்கும்.
.........................................................................................

மீண்டும் ஒரு விளம்பரத்தில் சந்திப்போம்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

கேலி சித்திரம் Cartoon

என்னை மிகவும் சிரிக்க (சிந்திக்க) வைத்த  
கேலி சித்திரம்.











































நன்றி : வினவு. 

புதன், 14 ஜூலை, 2010

தமிழ் இலக்கிய பாகுபாடு.

தமிழ் இலக்கிய பாகுபாடு.

பழங்காலம்
சங்க  இலக்கியம்:
கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையில் அகம் புறம் பற்றிய பாடல்கள்.
நீதி இலக்கியம் :
கி.பி. 100 முதல் கி.பி.500 வரையில். திருக்குறள் முதலிய நீதி நூல்கள், கார் நாற்பது முதலிய வெண்பா, முத்தொள்ளாயிரம்  நூல்கள்.

இடைக்காலம் :
பக்தி இலக்கியம் : கி.பி 600 முதல் கி.பி 900 வரை நாயன்மார், ஆழ்வார் பாடல்கள்.
பலவை நூல்கள் : கி.பி. 700 - 1300
காப்பியங்கள் : கி.பி. 500 முதல் கி.பி.1200 .
பெருங்கதை, சீவகசிந்தாமணி, முதலிய சமண, பௌத்த நூல்கள்.
செகிளார், கம்பர், ஒட்டக்கூத்தன், ஒளவையார் முதலியவர்கள்.
உலாபரணி பிள்ளைத் தமிழ் இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
உரைநூல்கள்: கி.பி 1200 முதல் கி.பி. 1500 வரையில் ; இளமபூரனார் பேராசிரியர் முதலியவர்கள்.

தமிழ் இலக்கியம் :  வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சரித்திர நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
புராண இலக்கியம் : கி.பி. 1500 முதல் கி.பி.1800 வரையில் புராணங்கள், தல புராணங்கள், இசுலாமிய இலக்கியம், கிறித்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள் உரைநடை வளர்ச்சி.
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறித்தவ இலக்கியம், இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள், நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.

இக்காலம் :
இருபதாம் நூற்றாண்டு:
பாரதி, கல்கி, புதுமைபித்தன், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆராய்ச்சி முதலானவை.


சொற்களின் பாகுபாடும் அமைப்பும்

சொற்களின் பாகுபாடும் அமைப்பும்
தமிழில் உள்ள சொற்கள் நான்கு வகை. அவற்றுள் உரிச் சொல் என்பவை வழக்கு இலந்தனவாய்ப் பழைய செய்யுளில் உள்ள அடிச் சொற்கள் அவை நீக்கிப் பார்த்தல் 
பெயர்ச்சொற்கள்
வினைச்சொற்கள்
இடைச்சொற்கள்
என் மூவகைப் படும்.


பெயர்ச்சொற்கள்

பெயர்ச்சொற்கள் திணை, பால், எண், இடம் உணர்த்தும்,
திணை : உயர்திணை அக்றிணை என இருவகைப் படும். பகுத்தறிவு உடைய மனிதர் உயர்திணை. மற்ற எல்லாம் (உயிர் உள்ளவை இல்லாதவை) அக்றிணை.
பால் : ஆண் பால், பெண்பால், பலர்பால் என உயர்திணை-இல்  பால் மூன்று. அக்றிணை-இல் ஒன்றன் பால், பலவின்பால் எனப் பால் இரண்டே.
எண் : எண் ஒருமை, பான்மை என இருவகையே.  (இருமை கிடையாது.)
இடம் : தன்மை முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று.

வினைச்சொற்கள்:

வினைச் சொற்கள் முற்றுவினை எச்சவினை என இருவகைப்படும்.
முற்றுவினை : முற்றுவினைகளில் பெரும்பாலானவை திணை, பால் உணர்த்தும் விகுதிகளோடு சேர்ந்து அமையும்.
எச்சவினை:  பெயரச்சங்களிலும், பண்பை உணர்த்தும் சொற்களிலும், பால் வேறுபாடு இல்லை.

இடைச்சொற்கள்:
தமக்கென்று  தனியே பொருள் இல்லாமல், சார்ந்த சொற்களின் பொருளை வேறுபடுத்த உதவும் சொற்களும் பொருளற்ற மற்றச் சொற்களும் இடைச்சொற்கள்.

சொற்கள்:
தமிழ் மொழியின் சொற்கள், அடிச் சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்கள். அகவே சொற்களின் அமைப்பு தெளிவாகத் தோன்றும். மிகப் மிகப் பழைய இலக்கியங்களில் உள்ள சொற்களும் அவ்வாறு அமைந்தவைகளே. அவற்றின் அடிச் சொற்களும் இக்காலத்துச் சொற்களின் அடிச்சொர்களும் ஒரே வகையானவை. உணா என்பது பழைய சொல். ஊண். உண்டி, என்பன இடைக்காலச் சொற்கள். உணவு என்பது இக்காலச் சொல். அடிச் சொல் உண் என்பது மூன்றிலும் தெளிவாக உள்ளது. விகுதி முதலியன மட்டுமே வேறுபடும்.

வாக்கிய அமைப்பு:வாக்கிய அம்மைப்பு மிகப் பழங்காலம் முதல் இன்றுவரை ஏறக்குறைய ஒரே தன்மையாகவே இருந்து வருகிறது.  சொற்களின் வடிவங்கள் மற்றைய திராவிட மொழிகளிலும் மாறிய போதிலும், வாக்கிய அமைப்பு மாறாமலே ஒரே வைகைய இருந்து வருகிறது. 

வாடா இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், முதலியவற்றின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கவில்லை. தமிழ் முதலான திராவிட மொழிகளின் வாக்கிய அமைப்புகளோடு ஒதுதிருக்கிறது. இந்த ஒற்றுமை, தென்னிந்திய மொழிகளில் நான்கையும் ஆராயும்போது மேலும் தெளிவாக விளங்குகிறது. இந்தப் பழங்கால வாக்கிய அமைப்பில் பழைய தமிழ் இலக்கியம் முதல் இன்றைய சிறுகதை வரையில் தொடர்ந்த வளர்சியினுடே காணத்தக்க உண்மையாகும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்


இரண்டாம் உலகப்போர் அல்லதுஉலகப்போர் 2 என அறியப்படுகிறதுஇருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல், போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டுஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில்செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள்நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்[1].
இப்போரில் தான் முதன்முதலாகஅணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்காசின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fat man) என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின்ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.

பின்னணி


முதல் உலகப் போரின் விளைவாக ஜெர்மனி வெர்சாய் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டது.[2]. இது 14% நிலப்பரப்பை ஜெர்மனி இழப்பதற்கு காரணமாக இருந்தது; மற்ற நாடுகளை கைப்பிடிப்பதை தடுத்தது. ஜெர்மனியின் ராணுவ பலத்தை முட்டு கட்டியது. மேலும் பெரிய தொகையாக நட்டஈட்டை ஜெர்மனி மேல் திணித்தது.இரசியாவின் உள்நாட்டு போர் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கத்தை கொடுத்தது. சோவியத் யூனியன் ஜோசப் ஸ்டாலினின் சர்வாதிகாரம் கீழே பணிந்தது. இத்தாலியில்பெனிட்டோ முசோலினி பதவியை பாசிஸ்டு சர்வாதிகாரியாக கைப்பற்றி, புதிய ரோம இராச்சியத்தை உறுதிப்பாடு செய்தார்[3].
சீனாவில் கோமிங்டாங் கட்சி பிராந்திய போராண்டைகளுக்கு (warloads) எதிராக ஐக்கிய இயக்கத்தை ஆரம்பித்து. பேச்சளவில் சீனத்தை 1920களில் ஒன்று படுத்தியது. ஆனால் விரைவிலேயே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உள்நாட்டுப் போரில் இறங்கியது. 1931இல், போர் மனப்பான்மை கொண்ட சப்பானிய அரசு, ஆசியாவில் தன் அதிகாரத்தை அதிகரிக்க[4] முதல் படியாக முகடன் நிகழ்வைப் பயன்படுத்தி மஞ்சூரியாவைஆக்கிரமித்தது. அதனால் சீனாவும், ஜப்பானும் சாங்காய், ரேஹே, ஹீபை முதலிய இடங்களில் பல சிறிய போர்களில், 1933ல் ஏற்பட்ட டங்கு போர்நிறுத்தம் வரை ஈடுபட்டன

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராக 1933ல் ஆனார். அவர் மக்களாட்சியை ஒழித்து, இன வாரியான புது உலக அடைவை வற்புறுத்தினார். அதனால் ஜெர்மனியைப் புனரமைக்க ஊக்கத்தில் ஈடுபடுத்தினார்[5]. இது பிரான்சையும்,பிரித்தானியாவையும், இத்தாலியையும் கவலைக்குள்ளாக்கின[6]. பிரான்சு, இத்தாலியுடன் நட்பைப் பேணும் முகமாக, இத்தாலி கைப்பற்ற விரும்பிய எதியோப்பியாவில் தன்னிச்சையாக நடந்து கொள்ள அனுமதித்தது.
1935 இல் ஜெர்மனி சார்லாந்தை ஒருங்கிணைத்த போதும், அதன் பின் ஹிட்லர் வெர்சாய் ஒப்பந்தத்தைக் கைவிட்ட போதும் நிலைமை இன்னும் மோசமாகியது. அது மட்டுமல்லாது ஹிட்லர் கட்டாய இராணுவ சேவையையும், புனராயுதமாக்குதலையும் புகுத்தினர். ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரித்தன், இத்தாலிஸ்ட்ரேசா முன்னணியை வைத்தன. ஜெர்மனியின் கிழக்கு ஐரோப்பிய ஆக்கிரமிப்பு எண்ணங்களினால் கவலைப்பட்டு,சோவியத் ஒன்றியம் பிரான்சுடன் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் கூட்டு நாடுகள் உடன்பாட்டை நம்பி இருந்ததால், அது பலனில்லாமல் போயிற்று[7][8].
ஜூன் 1935 இல், பிரித்தானியா ஜெர்மனியுடன் கடற்படை ஒப்பந்தத்தை செய்து, ஜெர்மனியின் கடற்படை மீதான கட்டுப்பாடை தளர்த்தியது. அமெரிக்க நாடுகள் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களின் மோசமாகும் நிலை கண்டு, நடுநிலைமைச் சட்டத்தைஇயற்றியது[9]. அக்டோபரில் இத்தாலி எதியோப்பியாவை ஆக்கிரமித்த போது, ஜெர்மனி மட்டுமே அதற்கு ஆதரவு கொடுத்தது. அதனால் இத்தாலி ஜெர்மனியின் குறிக்கோளானஆஸ்திரியாவை கைப்பற்றுதலுக்கு, தன் ஆட்சேபங்களை கைவிட்டது[10].
வெர்சாய் மற்றும் லொசார்னோ ஒப்பந்தகளுக்கு எதிர்மாறாக , 1936ல் ஹிட்லர்ரைன்லாந்தை புனராயுதமாக்கினார்[11]. ஜூலையில், ஸ்பானிய உள்நாட்டுப்போர் தொடங்கிய போது, ஹிட்லரும், முசோலினியும் பாசிசத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவை ஆதரித்தனர், சோவியத் ஒன்றியம் ஸ்பானியக் குடியரசை ஆதரித்தது. இரு தரப்புகளும் போரை புது ஆயுதங்களையும், புது போர் முறைகளையும் பரீட்சை செய்ய உபயோகித்தன[12]. பிராங்கோவின் தேசியவாதிகள் 1939 இல் வெற்றி பெற்றனர்.
சச்சரவு அதிகரிக்கையில், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எத்தனங்கள் செய்யப்பட்டன. அக்டோபரில், ஜெர்மனியும், இத்தாலியும் ரோம்-பெர்லின் அச்சைஉண்டுபண்ணின. ஒரு மாதம் கழித்து ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் ஒன்றியம் பெரிய உரப்பு எனக் கருதி, கோமிண்டன் எதிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்தன, அதில் இத்தாலியும் சேர்ந்து கொண்டது. சீனாவில் கோமிங்டாங்கும், கம்யூனிஸ்டுகளும்ஜப்பானுக்கு எதிராக ஒருமுக அணியை ஏற்படுத்துவதற்காக, போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தனர்[13].

காலநிரூபணம்

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் பொதுவாக செப்டம்பர் 1, 1939 இல் நடந்த போலந்தின் மீதான் ஜெர்மன் ஆக்கிரமிப்பு என கருதப் படுகிறது. மற்ற தேதிகள்செப்டம்பர் 13, 1931ல்,[14][15] நடந்த மஞ்சூரியா மீது நடந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ஜூலை 7, 1937ல்,[16][17] நடந்த இரண்டாவது சீன-ஜப்பானிய போர் அல்லது மற்ற சம்பவங்கள். சிலர் பிரித்தானிய சரித்திரவியலாளர் ஏ.ஜே.பி.டெய்லர் கருத்தான ஒரே சமயத்தில் கீழ் திசையில் சீன-ஜப்பனிய போர், இரண்டாவது ஐரோப்பிய போர் அகியவை நடந்தன - ஆனால் அவை 1941ல் ஐக்கியமாகும் வரை உலக யுத்தமாகவில்லை என்று கருதுகிறனர். இக்கட்டுரை பழக்கமான தேதிகளை பயன்படுத்துகிறது.[18]
போர் முடிவும் பல நாட்களை கொடுக்கிறன. சிலர் ஆகஸ்ட் 14, 1945 முடிவு ஒப்பந்தத்தை எடுக்கிறனர், சிலர் செப்டெம்பெர் 2, 1945ல் அதிகாரபூர்வமான ஜப்பானிய சரணாகதியைஎடுக்கிறனர். சில ஐரோப்பிய நாடுகளில், மே 8, 1945 ஐ.வெ. நாள் (ஐரோப்பாவில் வெற்றி)முடிவு என கருதப் படுகிரது. 1951 வரை ஜப்பானுடன் சமாதன ஒப்பந்தம் கையெழுத்துப் படவில்லை.

போரின் போக்கு

சீனப்போர்

1937 மத்தியில், மார்கோ போலோ பாலம் சம்பவத்தை அடுத்து, ஜப்பான் சீனத்தின் மேல் முழு ஆக்கிரமிப்பு தொடங்கிற்று.. சோவியத்துகள் உடனே சீனத்திற்கு ஆதரவு கொடுத்தனர், அதனால் சீன-ஜெர்மனிய கூட்டும் முறிந்தது. ஷாங்காயில் ஆரம்பித்து, ஜப்பான் சீன துருப்புகளை பின் தள்ளி, நாங்கிங்கை டிசம்பரில் கைப்பற்றியது. ஜூன் 1938ல் சீனர்கள் ஜப்பானிய முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆறு அணைப்புகளை உடைத்து, வெள்ளமாக்கினர். அதனால் வூஹான் நகரத்தின் பாதுகாப்பை அதிகரித்தாலும் , வூஹன் அக்டோபரில் ஜப்பானியருக்கு விழுந்தது..[19] அச்சமயம், ஜப்பானும் சோவியட் யூனியனும் கசான் ஏரி அருகே, சண்டையிட்டன. அது 1939ல், தீவிரமான எல்லைப் போரக மாறிற்று. [20]அது செப்டெம்பெர் 15 ஒப்பந்தப் படி முடிவுற்று பழைய நிலையை கொண்டு வந்தது..[21]

ஐரோப்பாவில் போர்
ஐரோப்பாவில் ஜெர்மனியும், இத்தாலியும் தைரியமாயின. மார்ச் 1938ல், ஜெர்மனி ஆஸ்திரியாவை கைப்பற்றினாலும், மற்ற ஐரோப்பிய சக்திகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரவில்லை..[22] அதனால் ஹிட்லர் செகோஸ்லாவகியாவின், ஜெர்மன் இனத்தவர்நிரைந்திருந்த சூடடன் பகுதியை இணைக்க கோரிக்கையை முன்வைத்தார். பிரான்சும், பிரித்தனும் செகோஸ்லாவகிய அரசின் எதிர்ப்புகள் இடையே, ஹிட்லரின் கோரிக்கைக்கு இனிமேல் ஆக்கிரமிப்பு நடக்காது என்ற சொல்லுறுதி மேல் ஒப்புக்கொண்டனர்..[23]. அதன்பிறகு, ஜெர்மனியும், இத்தாலியும், செகோஸ்லாவாகியாவை இன்னும் பிரதேசங்களை போலந்து, ஹங்கேரி நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என வற்புரித்தன. மார்ச் 1939ல், ஜெர்மன்ய் மீதம் இருந்த செகோஸ்லாவிகாயை ஆக்கிரமித்து, ஜெர்மன் காப்பு பொஹீமியா, மொரேவியாஎனவும், ஜெர்மன் சாய்வுள்ள ஸ்லோவாகிய குடியரசு எனவும் பிளந்தன.
ஹிட்லர் டான்சிக் பற்றி போலந்து மேல் கோரிக்கைகளை வைத்ததை பார்த்து பயந்த பிரான்சும், பிரித்தனும் போலந்தின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் கொடுத்தன. ஏப்ரல் 1939ல் இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதன் நிமித்தம், அதே உத்தரவாதம் கிரீஸ்,ருமேனியாவிற்கும் கொடுக்கப் பட்டது.]].[24] இதன் பிறகு ஜெர்மனியும், இத்தாலியும்,எஃகு இணைவு என்று தங்கள் கூட்டுரவை வலுப்படுத்துனர்]].[25]

ஆகஸ்ட் 1939ல், ஜெர்மனியும் சோவியட் யூனியனும் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தைசெய்தன. .[26]இவ்வொப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகள் படி, இரு நாடுகளும் போலந்தை பிளப்பதற்கும், கிழக்கு ஐரொப்பாவை தஙகள் அதிகார பிராந்தியங்களாக ஆக்குவதற்கும் வித்திட்டது..[27]

செப்டெம்பெர் 1, 1939ல், அடால்ஃப் ஹிட்லர் தன் போலந்து ஆக்கிரமிப்பை தொடங்கினார், பிரான்ஸ், பிரித்தன் மற்றும் பிரித்தானிய கூட்டியம் ஹிட்லர் மேல் போர் அறிவித்தாலும், போலந்துக்கு பெரிய உதவி செய்யவில்லை..[28] செப்டெம்பெர் 17, 1939ல் ஜப்பானியருடன் சமாதான ஒப்பந்தம் பிறகு , சோவியத் யூனியன் போலந்தின் மீது தன் ஆக்கிரமிப்பை தொடங்கிற்று..[29] போலந்து அதிகார பூர்வமாக சரணாகதி அடையாவிட்டாலும், அக்டோபர் முதலில் போலந்து போர் முடிந்தது - அதனால் போலந்து ஜெர்மனி, சோவியத் யூனியன், லித்வேனியா, ஸ்லோவாகியா இடையே பாக பிரிவினை செய்து கொள்ளப் பட்டது.[30]
போலந்து போரின் அதே சமயத்தில், ஜப்பான் பாதுகாப்பு நோக்கில் முக்கிய நகரானசங்க்‌ஷா நகரின் கைப்பற்ற முயன்றாலும், அது தோல்வி அடைந்து பின் வாங்கிற்று..[31]

போலந்து ஆக்கிரமிப்பு பிறகு, சோவியத் யூனியன், பால்டிய நாடுகளில் தன் துருப்புகளை முன்னேற்றியது. சோவியத் யூனியன் முன்னேற்றங்களுக்கு ஃபின்லாந்து தீவிர தடங்கல் கொடுத்ததால் நான்கு மாத பனிகாலப் போர் ஏற்பட்டு, அது ஃபின்லாந்து, சோவியத்துக்கு விட்டுக் கொடுப்பதில் முடிவடைந்தது.[32] பிரான்சும், பிரித்தனும் ஃபின்லாந்து மீதான ஆக்கிரமிப்பை ஜெர்மனி ஆதரவுப் போர் என கருதி, சோவியத் யூனியனை கூட்டுநாடுகளிடமிருந்து வெளியேற்ற முயன்றன. சீனத்திற்க்கு, மேற்கத்திய நாடுகள், சோவியத் யூனியன் இருவரும் வேண்டியவர்கள் ஆனதால், இருதலைக் கொள்ளியாகி, இந்த வெளியேற்ற முயற்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கோபமுற்ற சோவியத் யூனியன், சீனத்திற்கு தன் எல்லா தளவாட ஏற்றுமதிகளை சஸ்பெண்ட் செய்தது..[33]. ஜூன் 1940ல், சோவியத் யூனியன் பால்டிக் நாடுகள் ஆக்கிரமிப்பை பூரணப்படுத்தியது.]].[34]

மேற்கு ஐரோப்பாவில், பிரித்தன் தன் ராணுவத்தை ஐரோப்ப கண்டத்திற்கு அனுப்பி வைத்தது , ஆனால் அச்சமயம் நேச நாடுகளும் ஜெர்மனியும் நேராக மோத வில்லை. சோவியத் யூனியனும், ஜெர்மனியும், பெப்ருவர்ய் 1940ல், ஒரு வணிக ஒப்பந்தம் செய்த்தனால், சோவியத் யூனியன் ஜெர்மனியிடமிருந்து ராணுவ, பொறி தளவாடங்களைப் பெற்று, பதிலுக்கு கச்சா பொருள்களை கொடுத்து, பிரித்தனின் தடுப்பு முயற்சிகளை முறியடிக்க உதவியது..[35] ஏப்ரலில், ஜெர்மனி சுவீடனிடமிம் இருந்து இரும்பு கச்சாப் பொருள் இறக்குமதியை பாதுகாக்க டென்மார்க், நார்வேயை ஆக்கிரமித்தது. டென்மார்க் உடனே கீழ்படிந்து விட்டது. ஆனால் நார்வேயை கைப்பற்ற 2 மாதங்கள் ஆயின..[36] நார்வே போரில் பிரித்தனின் செய்கைகளில் பிரித்தானிய மக்களும், மக்களவையும் அதிருப்தி அடைந்ததால், பிரித்தானிய பிரத மந்திரி நெவில் சேம்பர்லின் பதவி இறக்கப் பட்டு வின்ஸ்டன் சர்ச்சில் மே 10, 1940ல் பதவி ஏற்றார். .[37]

[தொகு]அச்சு நாடு முன்னேற்றங்கள்

ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் கீழ் நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு ஒரே நாளில் தொடங்கியது, நெதெர்லாந்தும், பெல்ஜியமும் சில வாரங்களில் பிளிட்ஸ்கிரீக் முறைகள் செய்த ஜெர்மனியால் கைப்பற்றப் பட்டன. ;[38]பிரான்சின் பாதுகாப்பிற்க்கு கட்டப் பட்டமாகினோ கோடு பிரான்சால் நுழையமுடியாதது என கருதப்பட்ட ஆர்டீன் காடுகளின் வழியே சென்று , அதனால் சுற்றப்பட்டு ஜெர்மானிய ராணுவத்தினால் கைப்பற்றப் பட்டது. பிரித்தானிய துருப்புகள் டங்கர்க் துறைமுகம் வழியாக, தங்கள் கனரக தளவாடங்கலை பின்னால் விட்டு விட்டு , ஐரோப்பிய கண்டத்திலிருந்து [[தப்பி ஓடினர். 10 ஜூன் அன்று, இத்தாலி பிரான்சின் மீது ஆக்கிரமிப்பு செய்து, பிரான்ஸ், பிரித்தன் இரண்டின் மேலும் யுத்தப் பிரகடனம் செய்தது. 12 நாள் கழித்து, பிரான்ஸ் ஜெர்மனிக்கு சரணடைந்து, ஜெர்மனிய, இத்தாலிய கைப்பற்று பகுதிகளாகவும், ஜெர்மன் கட்டுமைக்கு கீழிருந்த விசி அரசு எனவும் பிரிக்கப் பட்டது.]],[39] ஜூலை 14ம் நாள், பிரிதானிய கடற்படை அல்ஜீரியாவில் இருந்த பிரென்க்சு கப்பல்களையை, ஜெர்மனி கையில் விழாதிருக்கும் பொருட்டு, .[40] தாக்கியது.
பிரான்சு அடங்கியவுடன், ஜெர்மனி பிரித்தன் மீது ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யும் பொருட்டு, ஆகாயத் தாக்குதல்களை தொடங்கிற்று..[41] இந்த தாக்குதல்கள் தோல்வியில் முடிவுற்று, 1940 செப்டம்பரில் ஜெர்மனி பிரித்தன் மீது ஆக்கிரமிப்பை ரத்து செய்தது. புதிதாக கைப்பற்றப்பட்ட பிரென்சு துறைமுகங்களில் இருந்து ஜெர்மனி பிரித்தனின் அட்லாண்டிய கடற்படைக்கும், வணிகக் கப்பல்களுக்கும் எதிராக யு-படகுஎன்ற நீர்மூழ்கி அணிகளை அனுப்பி துவம்சம் செய்தது.[42] இத்தாலி மத்தியதரையில் தன் ஆக்கிரமிப்பு செயல்களை மால்டா தீவு மீது முற்றுகையுடன் தொடங்கிற்று; மேலும் பிரித்தானிய சோமாலிலாந்தை கைப்பற்றி, பிரிட்டன் வசம் இருந்த எகிப்து மேலும் ஆக்கிரமித்தது.. செப்டெம்பரில் ஜப்பான், இந்தொ-சீனாவின் வடக்கு கரையில் இருக்கும் பல துறை முகங்களை கைப்பற்றி, சீனாவை தடுப்பு வட்டத்திற்குள் வைத்தது..
அப்பொழுது, நடுநிலைமை அமெரிக்கா சீனத்திற்கும், மேற்கு நேச நடுகளுக்கும் ஓரளவு உதவி செய்தது.[43]. நவம்பர் 1939ல், அமெரிக்க நடுநிலைமை சட்டம், நேச நாடுகள்அமெரிக்கவிடன் தளவாடங்களை பணம் கொடுத்து வாங்க , மாற்றப் பட்டது.. 1940 ஜெர்மனி பாரிசை கைப்பற்றிய பிறகு, கடற்படை அளவை பெருமளவில் அதிகமாக்கியது. ஜப்பான் இந்தொ-சீன நாடுகளின் மீது ஆக்கிரமித்தவுடன், அதன் மேல் இரும்பு, எஃகு, பொறிகள் முதலியவற்றின் வணிகத்தை தடை செய்தது..[44]. செப்டம்பரில், பிரித்தனுடன் கடற்படை நிலயங்களுக்கு அழிகப்பல்கள்களை பதிலுக்கு கொடுத்தது..[45] இருந்தும் 1941 வரை அமெரிக்க பொது மக்கள் அபிப்பிராயம் அமெரிக்காவின் போர் பங்கு ஏற்றலை, எதிர்த்தது.
செப்டெம்பர் 1940 முடிவில், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி இடையே ஏற்பட்ட மூவர் உடன்பாடு அச்சு நாடுகள் ஒன்றாக செயல்படுவதை வலுப் படுத்தியது. அந்த உடன்பாடின் படி, எந்த நாடாவது மூவரில் ஒருவரை தாக்கினால், அந்த நாடு மூன்று நாடுகளின் எதிரியாகிவிடும்.[46]. அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியத்தை லெண்ட்-லீஸ் கொள்கை வழியாக ஆதரவு கொடுத்து வந்தது; மேலும் அட்லாண்டிக் சமுத்திரத்தில்பாதியை காப்பு பிரதேசம் என சொல்லி, இப்பிரதேசத்தில், பிரித்தானிய கடற்படைக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தது[47].[48]. அதனால் ஆத்திரமடைந்த ஜெர்மனி, அமெரிக்காவுடன் ஒரு பிரகடம் செய்யப் படாத கடல் போரில் ஈடு பட்டது..[49]

அச்சு நாடுகள் நவம்பர் 1940ல், ஹங்கேரி, ஸ்லோவாகியா, ருமானியா ஆகிய நாடுகளை சேர்த்து விரிவடைந்தது..[50] இந்நாடுகள் பிறகு ஜெர்மனியுடன் சோவியத் யூனியன் மீதான ஆக்கிரமிப்பில் கூட்டு சேர்ந்தன. மேலும் ருமானியாவின் சர்வாதிகாரி இயோன் அண்டோனெஸ்கு கம்யூனிச மேல் காழ்ப்பினால் அந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டர்.[51]
அக்டோபரில் இத்தாலி கிரீஸை ஆக்கிரமித்தது, ஆனால் சில நாட்களூல்லேயே, திருப்பி அடிக்கப் பட்டு அல்பேனியாவிற்குள் அனுப்பப் பட்டு, போர்மந்தம் ஆகியது..[52] இதற்கு பிறகு, பிரித்தானிய கூட்டமைப்பு படைகள் இத்தாலி எதிர்ப்பாக எகிப்திலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் ஆக்கிரமிப்பு நடத்தினர். 1941ல். இத்தாலிய துருப்புகள் லிபியாவிற்குள் தள்ளப் பட்டனர். இத்தாலிய கடற்படையும் பெரும் சேதத்திற்குள்ளாகியது, ஏனெனில் அரசு கடற்படை மூன்று இத்தாலிய போர் கப்பல்களை டரண்டோ கடல்நிலையத்தை தாக்கி அழைத்தது, பல இத்தாலிய கப்பல்கள்மடபன் முனையில் அழிக்கப் பட்டன.
ஜெர்மனி இத்தாலிக்கு உதவுவதற்கு முன் வந்தது. பெப்ருவரியில், ஹிட்லர் ஜெர்மன் துருப்புகளை லிபியாவிற்கு அனுப்பினார்; மார்ச் முடிவில் பிரித்தானிய கூட்டமைப்பு படைகளை விரட்டி அடித்ததில், நேச படைகள் எகிப்திக்கு உள்ளெ வந்தன. டொப்ருக்துறைமுகம் தான் கூட்டமைப்பு நாடு வசம் இருந்தது. கூட்டமைப்பு முயற்சிகள் மறுபடியும் மே, ஜூன் மாதங்களில் அச்சு நாடுகளை விரட்ட மேற்கொண்டாலும், அவை தோல்வியுற்றன. ஏப்ரலில் ஜெர்மன்ய் பால்கனிலும் கிரீஸ், யுகோஸ்லாவியா மீது ஆக்கிரமித்து உள்ளிட்டது. அவர்கள் அங்கு வேகமாக முன்னேறி, மேயில் கிரீஸின் கிரீட்தீவை கைப்பற்றினர்..[53]
நேச நாடுகளுக்கு சில வெற்றிகள் ஏற்பட்டன. கூட்டமைப்பு துருப்புகள் இராக்கில் ஒரு அரசாங்க கவிழ்ப்பு திட்டத்தை முறி அடித்தனர்,,[54]ஏனெனில் அத்திட்டம் ஜெர்மனியின் ஆதரவ்ய் பெற்றது. விடுதலை பிரான்சு துருப்புகளுடன் சேர்ந்து, சிரியா, லெபனான்நாடுகளை ஆக்கிரமித்து ஜெர்மன் சாதகமான அரசு கவிழ்ப்புகளை முறியடித்தனர்..[55]எல்லாவற்றிர்கும் மேலாக, பிரித்தானிய போரில், ராஜாங்க விமானப் படைலுஃப்ட்வாஃபின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது. [56]மே11, 1941 ஹிட்லர் பிரித்தன் குண்டடிப்பு போரை விலக்கிக் கொண்டார்..[57]

ஆசியாவில் சீனாவும், ஜப்பானும் ஆக்ரோஷத்துடன் பல ஆக்கிரமிப்பு நடத்தினாலும் போர்மந்தம் ஏற்பட்டது. சீன கம்யூனிஸ்டுகள் மத்திய சீனத்தில் ஜப்பான் எதிராக பெரும் போரை துவக்கினர். அதற்கு பதிலடியாக ஜப்பான் கொடுமையான சீரழிவுகளை செய்து, கம்யூனிஸ்டுகளின் ஆள், தடவாள வலுவை முறைக்க முயற்சித்தது..[58] சீன கம்யூனிஸ்டு - சீன தேசீயவாதிகளின் சச்சரவும் அதிகமாகி, அவர்கள் கூட்டுரவு முறிந்து ஒருவரை ஒருவர் போர் செய்யத் தொடங்கினர்..[59]

ஆசிய, ஐரொப்பிய நிலவரங்கள் ஓரளவு மந்தம் அடைய, ஜெர்மனி, ஜப்பான், சோவியத் யூனியன் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்து கொண்டன. ஜெர்மனி மேல் சந்தேகம் கொண்டதால், சோவியத் யூனியன் ஜப்பானுடன் சோவியத்-ஜப்பான் நடுநிலைமை உடன்படிக்கையை செய்தன..[60] அதே சமயம், சோவியத் யூனியன் மேல் ஆக்கிரமிக்க ஜெர்மனி தயார் செய்து கொண்டு, மிகப் பெரும் சேனைகளை சோவியத் எல்லையில் ரகசியமாக குவித்தது [61]

]யுத்தம் உலகமயமாகிரது

ஜூன் 22, 1941 அன்று, ஜெர்மனி மற்ற அச்சு நாடுகளுடன், 'பர்பரோசா இயக்கம்` என்று அழைக்கப் பட்ட படையெடுப்பில், சோவியத் யூனியன்குள் புகுந்தது. இந்த திடீர் படையெடுப்பின் முக்கிய இலக்குகள் [62]பால்டிய பிரதேசம், மாஸ்கோ, யுக்ரெயின், படையெடுப்பின் நோக்கம் 1941 முடிவிற்க்குள் போரை வெற்றியுடன் காண்பியன் - வெள்ளை கடல்கலை இணைக்கும் ஒரு கோடுவரை சென்று முடிப்பது. ஹிட்லரின் குறிக்கோள்கள் சொவியத் யூனியனை ராணுவ சக்தியாக முறித்தல், கம்யூனிஸத்தை அழைத்தல், மற்றும் ஜெர்மானியர்களுக்கு அங்கு வாழ் மக்களையும், இனங்களையும் விரட்டி அல்லது அழைத்து `வசிக்கும் இடத்தை` பிடித்தல்[63]]][64]. யுத்தத்திற்கு முன்செஞ்சேனை `திருப்பி அடித்தலுக்கு` ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும்,[65], பர்பரோசா சோவியத் உயர் ராணுவ அதிகாரத்தை `யுக்தியான பாதுகாப்பு` முறைக்கு தள்ளியது. வெய்யில் காலத்தில் ஜெர்மனி சோவியத் யூனியனில் மாபெரும் வெற்றிகளை கொண்டு, சோவியத் ராணுவம் மேல் மாபெரும் ஆள், தளவாட சேதங்களை உண்டாக்கியது. ஆகஸ்டு நடுவில் ஜெர்மன் ராணுவ உயர் அதிகாரம் மத்திய ராணுவ இனத்தின் முன்னேற்றத்தை நிறுத்தி, இரண்டாவது பான்சர் இனத்தை மத்திய யுக்ரெயின், லெனின்கிராட் வழி முன்னேறிச் செல்லும் துருப்புகளுக்கு உதவியாக அனுப்ப முடிவு செய்தது..[66] கீவ் தாக்குதல் பெரும் வெற்றியில் முடிந்து, 4 சோவியத் படைகளை அழித்து, கிரைமியாவிலும், தொழில் முன்னேற்றம் அடைந்த கிழக்கு யுக்ரெயினிலும் உள் செல்வதற்கு சாதகமாக இருந்தது.
பிரான்சில் இருந்த முக்கால்வாசி அச்சுத் துருப்புகள் கிழக்கு யுத்தத்திற்கு அனுப்பப் பட்டுது [67][68]ஐக்கிய ராஜ்ஜியத்தை தன் `பெரிய யுக்தி`யை பரிசீலனை செய்ய தூண்டியது. .[69] ஜூலையில் சோவியத் யூனியனும் ஐக்கிய ராஜ்ஜியமும் ஜெர்மனிக்கு எதிராக ராணுவ கூட்டு செய்தன.]][70] உடனே இரானை ஆக்கிரமித்து இரானின் எண்ணை வளங்களை தன் வசம் செய்தன,.[71] பாரச்சிக குறுவழியையும் தன் வசம் செய்தன. ஆகஸ்தில் அமெரிக்க நாடுகளும் ஐக்கிய ராஜ்ஜியமும் அட்லாண்டிக் பிரகடனம்செய்தன.]].[72] நவம்பரில் கூட்டு நாடுகள் வடக்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனி எதிராக எதிரடி கொடுக்க குரூசேடர் இயக்கம் ஆரம்பத்து , ஜெர்மனி, இத்தாலி செய்த எல்லா ஆதாயங்களையும் திருப்ம்பி பிடுங்கினர். [73]

ஜப்பான் முந்தைய வருடம் தன் மேற்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ வலுவை அதிகரிக்க இந்தோ-சீனத்தை கைப்பற்றியது..[74] அமெரிக்கா, பிரித்தன், மற்ற மேலை நாடுகள் இந்தொ-சீனத்தின் புடுங்கதலுக்கு எதிர் பதிலாக ஜப்பனிய செல்வம், பொருள்கள் மேல் தடை வைத்தனர்; ஜப்பானின் 80% எண்ணை இறக்குமதிகளை கொடுத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எல்லா எண்ணை ஏற்றுமதிகளை தடை செய்தது.[75] .[76]அதனால் ஜப்பான், ஆசியாவில் அதன் ஆசைகளை கைவிடுவதா அல்லது இயற்கை வளைங்களை வலுக் கட்டாயமாக மற்ற நாடுகளிடம் பிடுங்குவதா என்ற தீர்மானத்தை செய்ய வேண்டியிருந்தது. ஜப்பானிய தரைப் படை முதல் தீர்மானத்தை வெறுத்தன, மேலும் எண்ணை தடைகளை பேசாத போர் முழக்கமாக கருதின..[77] அதனால் ஜப்பானிய சாம்ராஜ்ய ராணுவ தலைமையகம் வேகமாக ஆசியாவில் ஐரோப்பிய காலனீய நாடுகளை கைப்பற்றி , மத்திய பசிபிக் சமுத்திரம் வரை பரவிய ஒரு பாதுகாப்பு வளையத்தை திட்டமிட்டது. தென்கிழக்கு ஆசிய இயற்கை வளங்களை ஜப்பான் சுரண்டி, நேச நாடுகளை பாதுகாப்பு போரில் ஈடுபட வைக்கலாம்.. அமெரிக்க உள்ளீட்டத்தை தடுக்க, அமெரிக்க நாடுகள் பசிபிக் கடற்படையை முதலிலேயே அழிக்க தீர்மானித்தனர்..[78]

அக்டோபரில், அச்சுவின் இலக்குகள் யுக்ரெயினிலும், பால்டிய பிரேசத்திலும் பூர்த்தி ஆயின; லெனின்கிராட் [79]மற்றும் செவஸ்தாபோல் முற்றுகைகள்தான் முடியவில்லை,[80]மாஸ்கோ நோக்கி மாபெரும் படையெடுப்பு புதுப்பிக்கப் பட்டது.. 2 மாதமான கொடும் போர்களுக்கு பிறகு, ஜெர்மன் ராணுவம் மாஸ்கோவின் புறநகரப் பகுதியை அடைந்தது, அங்கு சோர்வையுற்ற ஜெர்மானிய துருப்புகள் படை எடுப்பை தள்ளி வைத்தனர்.[81] .[82]பிரமிக்க வைக்கும் பிரதேச பிடுங்கல்கலை செய்தாலும், இரு முக்கிய இலக்குகள் அச்சுக்கு இன்னும் கைக்கெட்ட வில்லை - இரு நகரங்களும் (மாஸ்கோ, லெனின்கிராட்) சோவியத் கைகளில் இருந்தன; சோவியத் யூனியனின் தடுப்பு சக்தி குறையவே இல்லை, சோவியத்தின் ராணுவ பலம் அழிக்கப் படாமல் இருந்தது..[83]

டிசம்பர் முதல் நாட்களில், புதிதாக செய்யப்பட்ட துருப்புகள்[84] அச்சு ராணுவத்துடன் எண்ணிக்கை சமன்பாட்டை ஏற்படுத்தியது. மேலும் சோவியத் ராணுவ உளவின் கணிப்பில், கீழ் திசையில் ஜப்பானின் துருப்புகள் குறைவினால், அங்கு போர் பயம் அதிகமில்லை.[85] அதனால் சோவியத் யூனியன் அச்சு ராணுவம் மேல் மாபெரும் எதிரை கொடுக்க தீர்மானித்து, அது டிசம்பர் 5ம் நாள் 1000 கிமி அகலத்தில் தொடங்கி, ஜெர்மன் துருப்புகளை 100-250 கிமி பின் தள்ளீயது..[86]

2 நாள் பிறகு, டிசம்பர் 7ம் நாள், ஜப்பான் அமெரிக்க கடற்படையை பேர்ல் ஹார்பர் துறைமுகத்தில் தாக்கி, அதே சமயம் மத்திய பசிபிக்கிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் படையெடுத்தது. மலாயா, தாய்லாந்து முதலியவற்றில் துருப்புகளை இறக்கியது.
அதனால் அமெரிக்க நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம், ஆஸ்ட்ரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஜப்பான் மேல் போர் அறிவிப்பு செய்தன. ஜெர்மனியும், மற்ற மூவர் உடன்பாடு நாடுகள் பதிலுக்கு அமெரிக்க நாடுகள் மேல் போர் அறிவிப்பு செய்தன. ஜனவரியில், அமெரிக்க நாடுகள், பிரித்தன் உள்ளிட்ட 26 மற்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தை வெளியிட்டு அட்லாண்டிச் பிரகடனத்தை ஊர்ஜிதம் செய்தன.[87]
ஏப்ரல் 1942 வாக்கில், ஜப்பான் தோராயமாக மொத்தமாக பர்மா, பிலிபீன்ஸ், மலாயா,டட்சு ஈஸ்ட் இண்டீஸ், சிஙகபூர், முக்கிய கடல் தளமான ரபௌல் முதலிவற்றை கைப்பற்றி [88] , நேச நாடுகளுக்கு பெரும் சேதத்தையும் அழிவையும் கொடுத்து, பெருமளவு போர் கைதிகளை பிடித்தது.. ஜப்பனிய கடற்படை தென்சீன கடல், ஜாவா கடல், இந்துமகா சமுத்திரம் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை கொண்டு,[89]ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுக நேச கடல்முகாமை குண்டு போட்டு தாக்கியது. அந்த மாதஙக்ளில் நேச நாடுகளின் ஒரே வெற்றி ஜப்பானியரை சங்க்‌ஷாவில் ஜனவரி 1942ல் தோற்கடித்ததாகும்..[90] தயாரில்லாத நேச நாடுகளின் மீதான சுலப வெற்றிகள் ஜப்பானுக்கு அதி-சுயநம்பிக்கையை கொடுத்து கெட்டன. மேலும் அப்போது ஜப்பானின் ராணுவ சக்திகள் அதிவிரிவடைந்தன.
ஜெர்மனியும் பல வெற்றிகளை கண்டது. ஜெர்மானிய கடற்படை பல அமெரிக்க கப்பல்களை அட்லாண்டிக்கில் மூழ்கடித்தது..[91] பலத்த சேதம் அடைந்தாலும், அச்சு நாடுகள் சோவியத்தின் முக்கிய எதிரடியை தெற்கு, மத்திய ரஷ்யாவில் நிறுத்தினர். வட ஆப்பிரிக்காவில், ஜனவரியில் ஜெர்மனி பெரும் படையெடுப்பை ஆரம்பித்து, பெப்ருவரி முதலில்,[92] பிரித்தானிய ராணுவத்தை கசால கோடு வரை பின் தள்ளியது[93]

போர் தசையின் திருப்பம்

மே முதலில் ஜப்பான் மாரிஸ்பி துறைமுகத்தை நிலநீர் தாக்குதலில் கைப்பற்ற எத்தனித்தது.; அதனால் அமெரிக்க ஆஸ்திரேலிய போக்குவரத்தை துண்டிக்க நினைத்தது. ஆனால் நேச நாடுகள் ஜப்பானிய தாக்கு படையை அடித்து திருப்பி, ஆக்கிரமிப்பை தடுத்தனர்.[94] ஜப்பானின் அடுத்த திட்டம் மிட்வே அடோலை கைப்பற்றி, அமெரிக்க தூக்குகப்பல்களை அழிப்பது.; இதை மறைக்க ஒரு படையை அலூஷியன் தீவுகளை கைப்பற்ற அனுப்பிற்று[95]. மே முதலில் திட்ட செயல்பாட்டில் ஜப்பான் இறங்கிற்று; ஆனால் அமெரிக்கா ஜப்பானிய கடற்படை சங்கேத மொழியைகண்டுபிடித்ததால் , ஜப்பானிய திட்டத்தையும் படை விரிப்புகளையும் நன்றாக அறிந்து கொண்டு,[96] அவ்வறிவை ஜப்பானிய சாம்ராஜ்ய கடற்படையின் மேல் ஆணித்தரமாக ஒரு தோல்வியை செலுத்தினர். மாரிஸ்பி துறைமுக கைப்பற்று திட்டம் தோல்வி அடைந்ததால், அதை தரை வழியாக பாபுவாவில் சண்டையிட்டு கைப்பற்ற முயன்றனர்.[97] ஜப்பானிய பசிபிக்கின் முக்கிய தளமான ரபௌலை கைப்பற்றுவதற்கு முதல் அடியாக[98], அமெரிக்கர்கள் ஜப்பானை சாலமன் தீவுகளில் , குறிப்பாககவுடல்கனாலில் தாக்க திட்டமிட்டனர். இருவர் திட்டமும் ஜூலை முதலில் தொடங்கப் பட்டன; கவுடல்கனால் போர் ஜப்பானியருக்கு முக்கியமாக தெரிந்தது; அதனால் தன் புது கினீ துருப்புகளை மாரிஸ்பீயிலிருந்து விலகி, தீவின் வட பகுதிக்கு வர ஆணையிட்டனர்; அங்கு ஜப்பானியர் அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டு துருப்புகளைபூனா-கோனா போரில் சந்தித்தனர்[99] . கவுடல்கனால் இரு தரப்புக்கும் மிக முக்கியமாகி, பல துருப்புகளும், கப்பல்களும் போரில் எரியப் பட்டன. 1943 தொடக்கத்தில், ஜப்பான் புது கினீ தீவில் தோற்கடிக்கப் பட்டு, வெளியேற்றப் பட்டனர்.[100]

பர்மாவில் காமென்வெல்து படைகள் இரு போர்களை இயக்கின. முதலாவது, அராகன்பிராந்தியத்தில் படை எடுப்பு பெரும் சேதத்தில் முற்றி, இந்தியாவிற்குள் பின்வாங்க நேரியது.[101] இரண்டாவது , ஜப்பானிய அணிகளின் பின்புறம் கொரில்லா வீரரகளைஅனுப்பியது, விளக்கமற்றதாக முடிந்தது.[102]

ஜெர்மனியின் கிழக்கு போர் முனைகளில், அச்சு சோவியத் படையெடுப்புகளை கெர்ச்பீடபூமியிலும், கார்காவிலும் தோற்கடித்து[103], தெற்கு ரஷ்யாவில் வெய்யில் கால படையெடுப்புகளை ஜூன் 1942ல் தொடங்கினர். சோவியத்துகள் ஸ்டாலின்கிராடில்ஜெர்மானியர்களை எதிர்து, தடுக்க முடிவெடுத்தனர். நவம்பர் நடுவில் ஜெர்மனி கிட்டத்தட்ட எல்லா ஸ்டாலின்கிராடையும், தெருவுக்கு தெரு போரின் பின்பு கைப்பற்றிவிட்டனர். அப்போது சோவியட்டுகள் பனிகால எதிர்-படையெடுப்பைதொடங்கி, ஸ்டாலின்கிராடில் இருந்த ஜெர்மன் துருப்புகளை சுற்றி வளைத்தனர்[104]. பெப்ருவரி 1943ல். ஜேர்மானியர்களுக்கு மிகப் பெரும் ஆள் அழிப்பு நடந்து, சோவியத் ராணுவத்திற்கு சரணாகதி அடைந்தனர். ஜெர்மானியர், மிகவும் பின் தள்ளப்பட்டலும், கர்காவ் மீது தாக்கி, குர்ஸ்க் என்ற இடத்தில் ஒரு வலுவான முகாம் போட்டனர்.[105]
மேற்க்கே, ஜப்பான் விசி அரசு வைத்திருந்த மடகாஸ்கர் தீவை கைப்பற்றி விடுமோ என அஞ்சி, பிரித்தன் மே 1942ல், மடகாஸ்கரை கைப்பற்றியது[106] . ஆனால் இந்த வெற்றி லிபியாவில் அச்சு படையெடுப்பினால் திருத்தப்பட்டது. அச்சு படையெடுப்பினால் நேச படைகள் எகிப்திற்குள் தள்ளப் பட்டன. ஐரோப்பாவில் நேச படைகள் குறிப்பிட்ட அச்சு முகாம்கள் மீது கமாண்டோ படைகளை அனுப்பியன.[107]. ஆகஸ்தில், நேச நாடுகள் வட ஆப்பிரிக்காவில் எல்-அலாமின் மீதான ஜெர்மன் தாக்குதலை திருப்பி அடித்தனர், மேலும் முற்றுகையில் இருந்த மால்டா தீவிற்கு அவசிய பொருள்களை அனுப்பினர்[108]. சில மாதங்களில் நேச துருப்புகள் ஜெர்மானிய துருப்புகளை வட ஆப்பிரிக்க பாலவனங்களின் வழியாக துரத்தி[109], லிபியாவை கைப்பற்றினர். விரைவிலேயே, பிரித்தானிய-அமெரிக்க துருப்புகள் பிரெஞ்ச் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்தனர், அதனால் பிர்ஞ்ச் வட ஆப்பிரிக்கா நேச நாடுகள் பக்கம் சேர்ந்தது.. பிரெஞ்ச் காலனிகளில் கட்சி மாற்றத்தை கண்டு கோபப்பட்ட ஹிட்லர், விசி பிரான்சை படையெடுத்து கைப்பற்றுமாறு ஆணையிட்டான். விசி பிரென்சு ஹிட்லரை தடுக்காவிட்டாலும், தங்கள் போர் கப்பல்களை, ஹிட்லர் கையில் விழாதவாறு தாங்களே மூழ்கவைத்தனர்[110] . அச்சு படைகள் டுனீசியாவிற்கு பின்வாங்கின; அதையும் நேசப் படைகள் மே 1943ல் கைப்பற்றின.[111]

[தொகு]நேச நாடுகள் வேகமடைகின்றன

ஆசியாவில், ஜப்பானியர் இரு முந்தாக்குதல்களை தொடங்கினர். முதலாவது, மார்ச் 1944ல் தொடங்கிற்று. அதன்படி அஸ்ஸாமில் இருந்த பிரித்தானிய படைகளை தாக்கி[112], விரைவில் காமன்வெல்த் படைகளை இம்பாலிலும் கொஹிமாவிலும்முற்றுகை இட்டனர்[113]; ஆனால் மேயில் 1943ல் பர்மாவில் உள்ளே புகுந்த சீன துருப்புகள் ஜப்பானியரை மிகினாவில் முற்றுகை இட்டனர்[114]. இரண்டாவது முந்தாக்குதல் சீனத்தில் நடத்தப்பட்டது. அதன் இலக்குகள் சீனத்தின் படைகளை அழிப்பது, ஜப்பானியர் வசம் இருந்த பிரதேசங்களினிடை ரயில் போக்குவரத்தை துவங்குவது மேலும் நேச நாடுகளின் ஆகாய விமான தளங்களை கைப்பற்றுவது ஆகியவை[115]. ஜூன் மாதத்தில், ஜப்பானியர் ஹேனான் மாகாணத்தை தன் கைவசம் கொண்டனர், மேலும் ஹுனான் மாகாணத்தில் சங்க்‌ஷா நகரை தாக்கினர்.[116]

கவுடல்கனால் செயல்களுக்கு பிறகு, நேச நாடுகள் ஜப்பானுக்கு எதிராக, பசிபிக்கில் பல செயல்களை ஆரம்பித்தனர். மே 1943ல், அமெரிக்க பட்டாளம் ஜப்பானியரைஅலூஷியன் தீவுகளிலிருந்து வெளியேற்றுவதற்கு அனுப்பபட்டது[117], அப்பட்டாளம் ரபௌலை அதன் சுற்றுமுற்று தீவுகளை கைப்பற்றி அதனை தனியாக்குவதிலும்,கில்பர்ட், மார்ஷல் தீவுகளில் ஜப்பானிய மத்திய பசிபிக் அதிகாரத்தை உடைப்பதிலும் ஈடுபட்டனர்[118]. ஜனுவரி 1944ல், நேச நாடுகள், இந்த இலக்குகளையும் தாண்டி,கரோலின் தீவுகளில் இருந்த முக்கிய ஜப்பானிய ராணுவ தளத்தை அழித்தனர். ஏப்ரலில், மேற்கு புது கினீயை கைப்பற்றுவதற்கு ஒரு செயலை தொடங்கினர்.[119]

மத்தியதரை கடல் பகுதியில், நேச நாடுகள் ஜூலை 43ல், சிசிலி மீது படை எடுத்தன. இத்தாலிய மண் மீது போர் துவங்கியதாலும், ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்ததாலும், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பதவியில் இருந்து தள்ளப் பட்டு, கைது செய்யப்பட்டார்[120]. செப்டெம்பெரில் இத்தாலி நேசநாடுகளுடன் போர்நிருத்த உடன்பாடு செய்ததை அடுத்து[121], நேச பாட்டாளங்கள் இத்தாலிய நாட்டில் குதித்தன. செப்டெம்பெர் 8 அன்று, இந்த உடன்பாடு பொதுமக்கள் அறிவிப்பு செய்யப்பட்ட உடன் ஜெர்மானிய துருப்புகள் பதிலுக்கு இத்தாலிய துருப்புகளை ஆயுதமிலி ஆக்கி[122] , இத்தாலிய ராணுவ பகுதிகளை கைப்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்[123]. செப்டெம்பெர் 12ம் தேதி, ஜெர்மானிய விசேஷ பட்டாளங்கள் முசோலினியை தைரியமான செயலில் விடுவித்து, இத்தாலியில் ஜெர்மனிக்கு அடிபடியும் அரசு ஒன்றை நிறுவினர்[124]. நேசப்படைகள் பல சண்டைகளிட்டு, நவம்பர் மத்தியில் ஜெர்மனியின் முக்கிய பாதுகாப்புக் கோடை அடைந்தனர்[125]. ஜனவரி 1944ல், நேசபட்டாளங்கள்,மாண்டி கசீனோ அருகில் இந்த கோடை தாக்கி, உடைக்க முயன்றனர்; அதே சமயம்அன்சியோவில் கடலிலிருந்து துருப்புகளை இறக்கினர்.. மே கடைசியில் இவ்விரு நேச செயல்களும் வெற்றியாகி, ஆனால் பல ஜெர்மன் டிவிஷன்களை தப்பவிட்டு, ரோம்ஜூன் 4 அன்று கைப்பற்றப் பட்டது[126] .

அட்லாண்டிக்கிலும் ஜெர்மன் செயல்கள் ஸ்தம்பித்தன. மே, 1943 வாக்கில் ஜெர்மானியநீர்மூழ்கி கப்பல்களின் நஷடங்கள் முகவும் அதிகமானதால், நேச நாடுகளின் எதிர் யுக்திகள் பல வெற்றிகள் பெற்றதால், கடல் செயல்களை தாற்காலிகமாக ஒத்திவைத்தது.[127]

சோவியத் யூனியனில், 1943 இளவேனிர் காலத்தையும், வெய்யில் காலத்தையும்குர்ஸ்க் பகுதியில் பெரும் முன்னடி செய்ய தயார் செய்து கொண்டிருந்தனர்; சோவியத்துகள் இதை எதிர்பார்த்து, ஜெர்மானியரை முறியடிப்பதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர் [128]. ஜூலை 4ல், ஜெர்மானியர் தன் முன்னடிப்பை தொடங்கினர், ஆனால் சீக்கிரமே ஹிட்லர் இச்செயலை ரத்து செய்து விட்டார்[129]. சோவியத்துகள் இதன் பிறகு பெருமளவு திருப்பி அடித்தலை தொடங்கினர், அதன் பிறகு, ஜூன் 1944ல், எல்லா ஜெர்மானிய துருப்புகளையும் சோவியத் நாட்டிலிருந்து வெளியேற்றி[130] ,ருமானியா மீதும் தாக்கத் தொடங்கினர்.
நவம்பர் 1943ல், ஃப்ராங்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் இருவரும், சீன அதிபர்சியாங்கைஷெக்கை கெய்ரோவிலும், அதன் பிறகு ஜோசப் ஸ்டாலினை தெஹரானிலும்சந்தித்தனர். முதல் சந்திப்பில் போருக்கு பின்பு நாட்களில் ஜப்பானிய பகுதிகளை திருப்பி எடுப்பது பேசப்பட்டது; இரண்டவது சந்திப்பில் மேற்கு நேச நாடுகள் ஐரோப்பாவை 1944 படையெடுக்கும் திட்டமும், சோவியத் யூனியன் ஜெர்மனியின் தோல்விக்கு 3 மாதங்களுக்கு முன் ஜப்பான் மீது போர் தொடுக்கும் தீர்மானிக்கப் பட்டன.
ஜனவரி 1944ல். சோவியத் பட்டாளம் ஜெர்மானியரை லெனின்கிராட் பகுதியிலிருந்து வெளியேற்றி, அது சரித்திரத்தில் மிக நீண்ட, மிகக் கொடிய முற்றுகையைமுறித்தது[131].

[தொகு]நேசநாடுகள் உடும்புப் பிடி

ஜூன் 6, 1944(டி-டே எனவும் அறியப் படும்) மேற்கு தோழர்கள் வடக்கு பிரான்சில் படையெடுத்தனர், அது பல டிவிஷஙள் தெற்கு இத்தாலியில் இருந்து கொண்டுவரப் பட்டவை[132]. இந்த கரையிறக்கங்கள் வெற்றியாகி, பிரான்சில் ஜெர்மானிய பட்டாளங்களின் தோல்விக்கு வித்திட்டன. பாரிஸ் ஆகஸ்து 25ம் தேதி விடுதலை செய்யப் பட்டது[133]. பிறகு நேச நாடுகள் ஜெர்மனியை பிரான்சிலிருந்து வெளியேற்ற முயலும் செயல்களை மேற்கொண்டன. ஹாலந்து நாட்டிர்க்குள் ஒரு பெரும் ஆகாயவிமான செயல்கள் தோல்வியுற்றன[134]. நேச நாடுகள் இத்தாலியுள்ளும் முன்னேறி, பெரிய ஜெர்மன் தடுப்பை சந்தித்தனர்.
ஜூன் 22 அன்று, சோவியத்துகள் பெலாருச்சில் யுக்தி முன்னடிப்பை (பக்ராசியான் செயல்)தொடங்கி, ஜெர்மன் மத்திய ராணுவ குரூப்பை முழுமையாக அழித்தனர்[135]. சீக்கிரமே, இன்னொரு சோவியத் யுக்தி முன்னடிப்பு ஜெர்மன் துருப்புகளை மேற்குயுக்ரெயின், மற்றும் கிழக்கு போலந்திலிருந்து முழுமையாக வெளியேற்றியது. சோவியத் துருப்புகளின் முன்னேற்றத்தினால், போலந்து மக்கள் ஜெர்மனிக்கு எதிராக பல கலகங்களை செய்தனர். ஆனால் வார்சா கலகம் சோவியத் ராணுவத்தினால் ஒரு உதவியும் பெறவில்லை.அதனால் வார்சா எழுச்சி ஜெர்மனியரால் மிகக் கொடூரமாக அடக்கப்பட்டு, வார்சா தரைமட்டம் ஆக்கப் பட்டது[136].கிழக்கு ருமானியாவில்சோவியத்தின் யுக்தி முன்னடிப்பு பல ஜெர்மனிய ராணுவங்களை துண்டித்து, அழித்து, ருமானியாவிலும் பல்கேரியாவிலும் வெற்றிகரமாக அரசு கவிழ்ப்பு செய்யப் பட்டது. இவ்விரண்டு நாடுகளும் நேசநாடுகள் பக்கம் சேர்ந்தன. செப்டெம்பர் 1944ல்.யுகோஸ்லாவியாவினுள் சோவியத் துருப்புகள் புகுந்ததை அடுத்து, ஜெர்மானியர் வேகமாக கிரீஸ், அல்பேனியா, யுகோஸ்லாவியாவில் இருந்து துண்டிப்பில் இருந்து காப்பதற்கு தஙகள் பட்டாளங்களை வாபஸ் செய்தனர். அப்பொது தெற்கு யுகோஸ்லாவியாவில் ஜோசிப் பிராஸ் டீடோவின் தலைமையில் போரிட்டகம்யூனிஸ்ட் கொரில்லாக்கள், ஜெர்மானியர் மீது பலத்த சேதம் விளைவித்தனர். வடக்கு செர்பியாவில், சோவியத் செஞ்சேனை, யுகோஸ்லாவிய கலகக் காரர்களின் உதவியுடன் தலைநகர் பெல்கிரேடை அக்டோபர் 20ம் நாள் விடுதலை செய்தனர். சில நாட்களில் ஆரம்பித்த ஹங்கேரிக்கு எதிரான சோவியத் முன்னடிப்பு பெப்ருவரி 1945 வரை நீண்டு, தலைநகர் புடாபெஸ்டின் விடுதலையில் முடிந்தது.[137]
பால்கனில் செம்மையான வெற்றிகளுக்கு மாறாக, சோவியத் ராணுவம் கரேலிய குறுதரையில் ஆணித்தரமான ஃபின்லாந்து எதிர் தடுப்பால் தடுமாறியது. அதனால் சோவியத்துகள் ஃபின்லாந்தை கைப்பற்ற முடியாமல் போய், சோவியத்-ஃபின்லாந்திய போர்முடிப்பு உடன்பாட்டில் முடிவுற்றது[138][139]. பிறகு ஃபின்லாந்து நேசநாடுகளில் சேர்ந்தது.
ஜூலை ஆரம்பத்தில், காமன்வெல்த் பட்டாளங்கள் அஸ்ஸாமில் ஜப்பனிய முற்றுகையை உடைத்து, ஜப்பனியரை சிண்ட்வின் நதிக்கு தள்ளினர்[140]. சீனத்தில் ஜப்பனியர்களுக்கு வெற்றிகள் கிடைத்தன. சங்க்‌ஷாவை ஜூன் மத்தியிலும்,ஹெங்யங்கை அகஸ்திலும் கைப்பற்றினர்[141] . மேலும் குவான்சி மாகானத்தை படையெடுத்து, சீனர்களுக்கு எதிராக கூலின், லூசௌ ஆகிய இடங்களில் நவம்பரில் வெற்றி கண்டு[142] , சீனாவிலும் இந்தோ-சீனாவிலும் இருந்த பட்டாளங்களை டிசம்பரில் இணைத்தனர்[143] .
பசிபிக் சமுத்திரத்தில், அமெரிக்கர்கள் ஜப்பானின் வெளிவேலியை பின்னுக்கு தள்ளிக் கொண்டே இருந்தனர். ஜூன் 1944 மத்தியில், ஜப்பானியருக்கு எதிரான மரியானா, பலாவுதீவுகளில் முன்னடிபப்பு செய்து, சில நாட்களுள்ளேயே ஃபிலிபின் கடலில்ஆணித்தரமான வெற்றியை கண்டனர். இந்த தோல்விகளால் ஜப்பனின் பிரதமர்டோஜோ ராஜினாமா செய்தார். அமெரிக்கர்களுக்கு ஜப்பானின் முக்கிய பகுதிகளூக்கு எதிராக குண்டடிப்பு நடத்துவதற்கு,இவ்வெற்றிகள் பல ஆகாய விமான தளங்களைகொடுத்தன. அக்டோபரில், அமெரிக்கர்கள் பிலிப்பீனின் லெய்தே தீவின் மீது படை எடுத்தனர், சீக்கிரமே லெய்தே வளைகுடா போரில் மாபெரும் வெற்றி கண்டனர். அப்போர், சரித்திரத்திலேயே, மிகப் பெரிய கப்பல் போர் ஆகும்.[144].

அச்சு வீழ்வு,நேச நாடுகள் வெற்றி

டிசம்பர் 16, 1944ல், ஜெர்மன் துருப்புகள் நேச நாடு சக்திகள் எதிராக ஆர்டீன் பகுதியில் பதிலடி கொடுத்தன. நேசப் பட்டாளத்திற்கு அதை முறியடிக்க ஆறு வாரங்கள் ஆயிற்று. சோவியத்துகள் ஹங்கேரியை தாக்கினர், அதே சமயம் ஜெர்மானியர் கிரீஸ், அல்பேனியாவை கைவிட்டு ஓடினர். தெற்கு யுகோஸ்லாவிலும் கொரில்லா போராளிகள் ஜெர்மானியர்கலை துரத்தி வெளியேற்றினர்.[145] இத்தாலியில் ஜெர்மன் பாதுகாபு கோடு அருகில் நேச சக்திகள் மந்தமாயின.. ஜனுவரி 1945 நடுவில், சோவியத்துகள் போலந்தில் தாக்குதலை ஆரம்பித்து, விஸ்தூலா ஆற்றிலிருந்து ஓடர்நதிக்கு முன்னேற்றம் தொடங்கினர், கிழக்கு பிரஷ்யாவை கைப்பிடித்தனர்[146] .
பெப்ருவரி 4ம் நள், அமெரிக்க, பிரித்தானிய, சொவியத் தலைவர்கள் யால்டாவில்சந்தித்து, போருக்கு பின்பு ஜெர்மனியை அதிகாரம் செய்வது பற்றி தீர்மானம் செய்தனர்[147], மேலும் எப்பொழுது சோவியத் யூனியன் ஜப்பான் எதிரான போரில் பங்கேற்கும் எனவும் பேசப் பட்டது.[148] .
பெப்ருவரியில் சோவியத்துகள் சைலீசியாவையும் பொமரேனியாவையும்ஆக்கிரமித்தனர், அதே சமயம் மேற்கு தோழர்கள் மேற்கு ஜெர்மனியுள் புகுந்தனர். மார்ச்சில், நேச துருப்புகள் ரைன் நதியை ரூர் பகுதியில் வடக்கிலும், தெற்கிலும் தாண்டி பெரும் ஜெர்மானிய ராணுவங்களை வளைத்தனர். சோவியத் பட்டாளம் வியன்னாவைநோக்கி சென்ர்றது. கடைசியாக ஏப்ரல் முதலில், நேச பட்டாளம் இத்தாலியில் ஜெர்மன் துருப்புகளை அகற்றி, மேற்கு ஜெர்மனிக்குள் படையெடுத்தனர். ஏப்ரல் கடைசியில் சோவியத்துகள் பெர்லினை பிடித்தனர். இரு ராணுவங்களும் ஏப்ரல் 25ம் தேதி, எல்புஆற்றின் கரையில் சந்தித்தனர்.
அக்காலத்தில், பல தலைமை மாற்றங்கள் ஏற்பட்டன. ஏப்ரில் 12ம் நாள், அமெரிக்க ஜனாதிபதி ரூசவெல்டு இறந்தார், ஹாரி ட்ரூமன் பதிவியேற்றார். பெனிடோ முசோலினி கலகக் காரர்களால் ஏப்ரல் 26ம் தேதி கொல்லப்ப்பட்டார்[149]. 2 நாள் கழித்துஹிட்லர் தற்கொலை செய்தார். அவருக்கு பின் கிராண்ட் அட்மிரல் காரல் டோனெட்ஸ்தலைமை ஏற்றார்[150] .

இத்தாலியில் ஜெர்மானிய துருப்புகள் ஏப்ரல் 29ல் சரணடைந்தனர்; மேற்கு ஐரோப்பாவில் மே 7 அன்று சரண் அடைந்தனர்[151]. ஆனால் சண்டை கிழக்கில் தொடர்ந்து, மே 8ல் சோவியத்திடம் ஜெர்மன் துருப்புகள் சரண் அடைந்தனர். பிராகில்மே 11ல் சரணடைந்தனர்.
பசிபிக்கில், 1944 முடிவில், பிலிபீன்சீல் அமெரிக்கர்கள் முன்னேறி, ஜப்பானியரை துரத்தினர். ஜனுவரி 1945ல் லுசானிலும், மார்ச்சில் மிண்டநாவிலும் தரையிறங்கினர்[152]. அக்யோபரில் இருந்து மார்ச் வரை சீன-பிரித்தானிய படைகள் ஜப்பானிய்ரை வட பர்மாவில் தோற்கடித்தன்ர், மே 3ல், பிரிட்டிஷர் ரங்கூனை கைப்பிடித்தனர்[153]. அமெரிக்கர்களும் ஜப்பானை நோக்கி முன்னேறி, மார்ச்சில் இவோ ஜிமாவையும், ஜூனில் ஓகினாவாவையும் பிடித்தனர்.[154]. ஜப்பானிய நகரங்ஜ்களை அமெரிக்கரகள்குண்டடி விமானங்களால் குண்டடித்து பயங்கர சேதம் செய்தனர், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் படை ஜப்பானியரின், இறக்குமதிகளை முழுமையாக தடுத்தது.[155] .ஜூலை 11ம் நாள், நேச நாட்டுத் தலைவர்கள் ஜெர்மனியில் பாட்ஸ்டாமில் சந்தித்தனர். அது பழைய உடன்பாடுகளை ஊர்ஜிதப் படுத்தி[156], ஜப்பானின் நிர்பந்தனையற்ற சரணாகதியைகோரிக்கையாக வைத்தது"[157]. அந்த சந்திப்பின் போது, பிரித்தானிய பொது தேர்தல்களில் கிளெமெண்ட் அட்லீ பிரதமர் ஆனார்.
ஜப்பான் பாட்ஸ்டம் கோரிக்கைகளை நிராகரித்தது. அமெரிக்க நாடுகள் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டுகளை ஆகஸ்து ஆரம்பத்தில் வீசியது. இரு குண்டுகளுக்கு இடையில் சோவியத் யூனியன் ஜப்பானின் மேல் படை எடுத்தது. ஆகஸ்து 15ம் நாள், ஜப்பான் சரணடைந்தது

பின்விளைவுகள்

உலக அமைதியை காக்க நேசநாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை தொடங்கியன, அது அதிகாரபூர்வமாக அக்டோபர் 24, 1945 அன்று அரம்பித்தது.

மேற்கு நேசநாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் உறவு போர் முடிவதற்கு முன்பே கெட ஆரம்பித்தது[158]. விரைவில், இரு சக்திகளும் தஙகள் அதிகார மண்டலத்தைநிறுவத் தொடங்கியன[159].ஐரோப்பாவில் இரு சக்திகள் பிளவு இரும்பு சுவர் என்றழைக்கப் பட்டது. இந்த ‘சுவர்’ ஆதிக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா வழியாக பாய்ந்தது.ஆசியாவில், அமெரிக்க நாடுகள் , ஜப்பானை கைப்பற்றி, தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்து, ஜப்பானின் பசிபிக் தீவுகளை நிர்வகித்தது; அதே சமயம் சோவியத் யூனியன் ஜப்பானின் சகாலின் மற்றும் குரில் தீவுகளை தனதாக்கியது.கொரியாவில்இருந்த முன்னாள் ஜப்பானிய அதிகரம், இரண்டாக பிளக்கப்பட்டு ஆதிக்கம் செய்யப்பட்டது. அமெரிக்க சோவியத் சச்சரவுகள் அமெரிக்க தலைமையில் நேடோ(வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) மற்றும் சோவியத் தலைமையில் வார்சா உடன்பாடு அமைப்புகளில் முடிந்து, பனிப் போருக்கு ஏதுவாயிற்று[160].

உலகின் பல பாகங்களில் உலகப் போர் முடிந்து சில காலங்களில் சண்டைகள் அதிகரித்தன. சீனாவில் தேசீயவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் உள்நாட்டு போரில்ஈடுபட்டனர். கடைசியில் கம்யூனிஸ்டுகள் வென்று சீன மக்கள் குடியரசுஅமைப்புங்கால், தேசீயவாதி ராணுவம் தய்வான் தீவில் தஞ்சம் புகுந்தது. கிரீஸில் மேற்கு நாட்டு ஆதரவு பெற்ற ராஜாவாதி ராணுவமும், கம்யூனிஸ்ட் எழுச்சியாளர்களும் போர் துவங்கினர். கொரியாவில், சோவியத் ஆதரவு பெற்ற வடகொரியாவிற்கும், மேற்கு ஆதரவு பெற்ற தென் கொரியாவிற்கும் போர் மூண்டது.
உலகப் போரின் முடிவு ஐரோப்பிய காலாநீய சக்திகள் தங்கள் காலனீய ஆதிக்கங்களை கைவிடுமாறு ஆக்கியது. இந்தோ-சீனம், மடகாஸ்கர், இந்தோனேசியா, அல்ஜீரியா தவிற மற்ற நாடுகளில் காலனீய ஒழிப்பு சமாதான மாக முடிந்தது[161]. இன, மத வேறுபாடுகளால் சில இடங்களில் போர்கள் ஏற்பட்டன. பாலஸ்தீனின் ஐநா அதிகாரம் முடிந்தது, இஸ்ரேல் நாட்டை பிறப்பித்தது. அது மேற்காசியாவில் சச்சரவுகளுக்கு வித்திட்டது.
பொருளாதார புனர்வாழ்வு பல நாடுகளில் பல வேகங்களில் நிறைவேரியது. மேற்கு ஜெரம்னி வேகமாக பொருளாதார சக்தியாக எழுந்தது[162]; இத்தாலி போரினால் பாதிக்கப்பட்டாலும், 10 வருடங்களில் பெறும் முன்னேற்றங்களை கண்டது[163] [164] . ஐக்கிய ராஜ்ஜியம் போரில் மிகச் சேதமடைந்து, புனர் எழுச்சி அடைய பல தசாப்தங்கள் ஆயின்[165].ஃபிரான்சும், சோவியத் யூனியனும் வேகமாக குதித்தன[166]. ஜப்பான் பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் அசுர வேகத்தில் சென்று, ஜப்பானைபொருளாதார சக்தியாக்கின.உள்நாட்டுப் போர் முடிவில், சீனம் திவால் நிலையில்இருந்தது. பிறகு அங்கும் வேகமாக தொழில், பொருளாதாரம் முன்னேறியன.[167]. போரின் முடிவில் அமெரிக்க நாடுகள் உலக உற்பத்தியில் பாதி பங்கை கொடுத்தன[168] .

போரின் தாக்கங்கள்


மனித இழப்புகளும், போர்க் குற்றங்களும்

எவ்வளவு பேர் மடிந்தனர் என்ற கணிப்பு வேறுபடுகிறது. ஆனால் பொதுவாக 60 மில்லியன் சாவுகள், இவற்றில் 20 மில்லியன் படையினர், 40 மில்லியன் பொதுமக்கள் என கணக்கிடப்படுகிறது.[169][170][171]. பல சிவிலியஙள் நோய், பசி, குண்டடிப்பு,படுகொலைகள் மற்றும் வேண்டுமென்றே செய்த இன அழிப்பில் மாண்டனர். சோவியத் யூனியன் 27 மில்லியன் மக்களை இழந்தது.[172] , அது தோராயமாக எல்லா நாட்டு இழப்பில் பாதி ஆகும்.மொத்த இழப்புகளில் , 85% நேசநாடுகள் (சோவியத் யூனியன், சீன உட்பட) பக்கம்.15% அச்சு நாடுகள் பக்கம்.ஒரு கணக்கின் படி 12 மில்லியன் மக்கள் நாஜிகுவிப்பு முகாம்களில் மாண்டனர்,[173]. 1.5 மில்லியன் மக்கள் குண்டடிப்புகளில் இறந்தனர், ஐரொப்பவில் 7 மில்லியன் இதர காரணங்களினாலும், சீனாவில் 7.5 மில்லியன் இதர காரனங்களினாலும் மடிந்தனர்[174]. கணிப்புத் தொகைகள் ஏன் மாறுபடுகின்றன என்றால், பெரும்பாலான் இறப்புகள் ஆவணம் செய்யப்படவில்லை.
இதில் பெரும்பான்மை இறப்புகள் ஜெர்மானியரின், மற்றும் ஜப்பனியரின் இன அழிப்பு கொள்கைகளால் ஏற்பட்டவை. ஜெர்மன் அட்டுழியங்களில் மிகப் பெரிதுஹோலோகாஸ்ட், அதாவது திட்டமிட்டு செயல்பட்ட யூதர்களின் மொத்த இன அழிப்பு; அதாவது ஜெர்மனியின் அதிகாரங்கள் கீழ் வந்த நாடுகளின் மொத்த யூத மக்களையும் கொல்ல , செய்யப் பட்ட திட்டம். நாஜிக்கள் ரோமா (குறுவிக்காரர்), ஸ்லாவியர்இனங்களையும் ஒருபால் சேர்க்கையாளர்களையும் கூட இன அழிப்பு செய்து, அவ்வாறு 5 மில்லியன் மக்களை கொன்றனர்.[175]. அச்சுநாடு சேர்ந்த உஸ்தாசா அரசின் கொலை இலக்குகள் முக்கியமாக செர்பியர்கள்[176]. மிகவும் தெரியப்பட்ட ஜப்பானிய அட்டூழியம் , பல லக்ஷம் சீனர்களை கொன்றும், கற்பழிப்பும் செய்த நாங்கிங் படுகொலைஆகும்[177].ஜப்பானிய ராணுவம் 3 முதல் 10 மில்லியன் சீன சாதாரண மக்களை கொன்றது[178].
சிறிய அளவு ரசாயன, உயிரிய ஆயுதங்களையும் அச்சு நாடுகள் பயன்படுத்தின. இத்தாலியர்கள் அபிசீனியா போரின் போது வாயுக் குண்டுகளை உபயோகித்தனர்[179].ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் அவ்வித ஆயுதங்களை மக்கள் மீதும், போர் கைதிகள் மீதும் பிரயோகித்தனர்.)[180][181][182] [183]

இப்படி அச்சு நாடுகளின் அட்டுழியங்கள் சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தாலும்,[184], நேச நாடுகள் செய்த பிரயத்தினங்கள் நீதிக்குள் கொண்டுவரப்படவில்லை. உதாரணமாக, சோவியத் யூனியனில் மக்கள் கூட்டங்களும், இனங்களும் வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப் பட்டன]],[185], சோவியத் கட்டாய பணி முகாம்கள் (குலக்)[186] இருந்தன. போலந்து சிவிலியஙள் சோவியத்துகளால் படுகொலை செய்யப் பட்டர்கள், மேலும் டோகியோ, டிரெஸ்டன்[187] போன்ற நகரங்கள் நேசநாடுகளின் குண்டடி விமானங்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு , படும் மக்கள் அழிப்பு நடந்தது.


குவிப்பு முகாம்களும், அடிமைப் பணியும்

நாஜிக்கள் ஹோலோகாஸ்ட் என்றழைக்கப் படும் திட்டமிட்டு செய்யப் பட்ட 6 மில்லியன்யூதர்களின் கொலை, மற்றும் 2 மில்லியன் போலந்து இனத்தவர், 4 மில்லியன் ’வாழ்க்கைக்கு தகுதியற்றவர்’ என அழைக்கப்பட்ட மற்றவர்கள் (இதில் உடல், மனம் ஊனமுற்றோர், சோவியத் போர்கைதிகள், ஒருபால்சேர்க்கையாளர், ஃப்ரீமேசன்கள்,ஜெஹோவாவின் சாட்சிகள், ரோமா என்ற குறுவிகாரர்கள் அடங்குவர்). 12 மில்லியன் மக்கள், பெரும்பான்மையாக கிழக்கு ஐரோப்பியர், ஜெர்மனியின் போர் பொருளாதாரத்தில் அடிமைகளாக வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்பட்டனர்]][188] . இதைத் தவிர குலக் எனப்படுகிற சோவியத் கட்டாய பணி முகாம்கள்களில் போலந்தினர், லாட்வியர், எஸ்டோனியர், லிதுவேனியர், மற்றும் ஜெர்மன் போர் கைதிகள், ஜெர்மனிக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சோவியத் குடிமகன்கள் கொல்லப் பட்டனர்[189] .ஜெர்மானியர் கையில் 60% சோவியத் போர் கைதிகள் மடிந்தனர். 5.7 மில்லியன் சோவியத் போர் கைதிகள் இருந்ததாக கணக்கு.[190]. அதில் 57% அல்லது 3.6 மில்லியன் கொல்லப் பட்டனர்.[191]. அதிலிருந்து எப்படியோ பிழைத்த போர்கைதிகள் சோவியத் யூனியனுக்கு திரும்பி போகும் போது , ஸ்டாலினால் ‘துரோகிகள்’ எனக் கருதப்பட்டு சிட்சை வாங்கினர் [192] .
ஜப்பானிய போர் கைதி முகாம்களிளும் கட்டாய வேலைகளினால் இறப்பு வேகம் அதிகம். தொலைகிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் கைதிகளில் இறப்பு எண்ணிக்கை 27.1% (அமெரிக்க கைதிகளுக்கு 37%)[193] seven times that of POWs under the Germans and Italians[194]என கணக்கிட்டது. ஜப்பானிய கைதி முகாம்களில் சீனர்களின் இறப்பு வேகம் இன்னும் அதிகம். ஒரு ஜப்பானிய அரசு ஆணை சீன கைதிகளுக்கு சர்வதேச நீதிகளின் கீழ் பாதுகாப்பு கிடையாது என்று சொல்லிற்று[195]. போர் முடிந்தவுடன், 37583 மேற்கத்திய கைதிகளை ஜப்பான் விடுதலை செய்தது, ஆனால் 56 சீனர்கள் தான் அப்படி விடுதலை ஆயினர்[196]. 10 மில்லியன் சீன மக்கள் கட்டாய வேலைக்கு ஜப்பானிய ராணுவத்தால் பிடித்து வைக்கப் பட்டனர் என ஒரு கணக்கு[197]. அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ஜாவாவில் ஜப்பானியர் 4 முதல் 10 மில்லியன் மக்களை கட்டாய பணிக்கு இழுத்துச் சென்றனர் என சொல்கிறது.
பெப்ருவரி 19, 1942 அன்று ரூசவெல்ட் ஆணை 9066 க்கு கையெழுத்திட்டார். அதன்படி அமெரிக்காவில் இருந்த ஜப்பானியர்கள், ஜெர்மானியர், இத்தாலியர் முதலானோர்அடைப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.


போர்கால உற்பத்தி நிலைகள்

ஐரோப்பாவில், போருக்கு முன், நேசநாடுகள் மக்கள் தொகையிலும், உற்பத்தி திறனிலும் கை ஓங்கி இருந்தனர். 1938ல் ஐரோப்பிய நேச நாடுகள் அச்சு நாடுகளைவிட 30% அதிக மக்கள் தொகையும், 30% அதிக உற்பத்தியும் செய்தனர். ஐரோப்பிய காலனிகளை சேர்த்துக் கொண்டால் , நேச நாடுகள் 5:1 விகிதத்தில் அச்சின் மேல் பலம் கொண்டிருந்தனர்[199]. 1939-41 அச்சு நாடுகளின் மின்னலடி தாக்குதல்களால், இந்த பலங்கள் பெருமளவு குறைந்தன. ஆனால் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேசநாடுகள் பக்கம் செர்ந்தவுடம், மறுபடியும் ஒப்பு பலம் அவர்கள் பக்கம் திரும்பியது. அதற்கப்புரம், போர் அழிவு போராக மாறியது.[200]. நேச நாடுகளுக்கு அதிக இயற்கை வளங்கள் இருந்தாலும், அச்சு நாடுகள் பெருமளவில் அடிமை வேலையை வாங்கின. ஆனால் அச்சு நாடுகள் ஓரளவு பெண்களை தொழிலாளர்களாக்குவதற்கு மனம் கொடுக்கவில்லை]],[201][202] ஆதலால், அவர்கள் தொழிலாளர் பலம் அதிகரிக்கவில்லை. ஜெர்மனியோ[203], ஜப்பானொ பல வருடம் இழுத்து அடிக்கக்கூடிய போருக்கு திட்டமிடவில்லை, அவர்களுக்கு அப்படிப்பட்ட திறனும் இல்லை.[204][205] தங்கள் உற்பத்தியை பெருக்க ஜப்பானும், ஜெர்மனியும் பல மில்லியன் அடிமை தொழிலாளர்களை உட்படுத்தியது. ஜெர்மனி 12 மில்லியன் கட்டய தொழிலாளர்களையும்[206] , ஜப்பான் 18 மில்லியன் கட்டாய தொழிலாளர்களையும் வைத்திருந்தது.[207].


போர்க்கால நாடுபிடிப்பு அதிகாரங்கள்

ஐரோப்பாவில், நாடுபிடிப்பு 2 உருவங்களில் வந்தது. மேற்கு, வடக்கு, மத்திய ஐரோப்பாவில், தான் கைப்பற்றிய இடங்களில் (பிரான்ஸ், நார்வே, டென்மார்க், பெல்ஜியம், ஹாலந்து) பொருளாதார கொள்கைகளால் , ஜெர்மனி 70 பில்லியன் ரைக்மார்க்கை உருவியது. இதில் பெருமளவு தொழிலுற்பத்திப் பொருட்கள், தளவாடங்கள், கச்சா, இதர பொருள்கள் கொள்ளை சேர்த்தி இல்லை. பிடித்த நாடுகளிடமிருந்த கிடைத்த ஆதாயம், ஜெர்மனியின் உள்நாட்டு வரி போன்ற வருமானத்தில் 40% ஆகியது[208].[209] .சோவியத் கிழக்கில் நிறைய வருமானம் கிடைக்க்வில்லை; ஏனெனில் கடும் போர்கள் ஏற்பட்டன, மற்றும் சோவியத் மக்கள்எரிந்த பூமி கொள்கை - அதாவது பின்னேறும் போது எல்லா பொருள்களையும், வளங்களையும் எரிப்பது - கடைப்பிடித்தார்கள். ஜெர்மானிய இனக் கொள்கைகளினால் ஜெர்மானிய ராணுவ வெற்றிகள் பின்னால் சுட்டு கொலை செய்யும் குழுக்கள் செயல்பட்டன[210]. தத்தம் நடுகளில் ‘தடுப்பு சக்திகள்’ செயல் பட்டாலும், அவை ஜெர்மானிய போர் பணிகளை ரொம்பவும் குறைக்க 1943 கடைசி வரை தவறினர் until late 1943. . ஆசியாவில் ஜப்பானியர் தாம் பிடித்த நாடுகளை ஜப்பானிய அகண்ட ஆசியா சுபிட்ச மண்டலம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி[213], ஐரோப்பிய காலனீயத்திற்கு எதிர்நேர் என பிரசாரம் செய்தனர். ஜப்பானியர்கள் கொடுங்கோல், ஆசிய மக்களை அவர்களுக்கு எதிரில் திருப்பியது..[214]


பொறியியல், போர்முறை முன்னேற்றங்கள்

போரின் போது, விமானங்கள் வேவு பார்த்தல், சண்டையிடுதல், குண்டடித்தல், தரைப்படை ஆதாரம் முதலிய வேலைகளை முதல் யுத்தத்திலிருந்து செய்து வந்தாலும், இவை கணிசமாக முன்னேறின, விமானங்களுக்கு மேலும் இரு முக்கிய பணிகள் விமானதூக்கல், அதாவது ஆட்களையும், தளவாடங்களையும் துரிதமாக வேண்டிய இடத்திற்கு கொண்டு போவது[215], மற்றும் யுக்தி குண்டடித்தல் அதாவது எதிரியின் தொழில், உற்பத்தி பலம், மனோ பலம் குறைக்கும் படி இலக்கு தாக்குதல்கள், ஏற்பட்டன [216]. விமான எதிர் ஆயுதங்களும்,குறிப்பாக ஜெர்மானிய 88 மிமி துப்பாக்கி, முன்னேறி, ராடார் வளர்ந்தது. ஜெட் விமானங்களும் சிறிய அளவு பயன்படுத்தப்பட்டன..[217]

கடலில், எல்லா கப்பல் போர் துறைகளிலும் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன; குறிப்பாக விமான தூக்கிகள், மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள். டரண்டோ, பேர்ல் துறைமுகம், தெற்கு சீன கடல் , கோரல் கடல் இவற்றில் விமான தூக்கி கப்பல்கள் பெரும் பங்கு வகித்து, வெற்றிக்கு ஏதுவாயின.[218][219]. அட்லாண்டிக்கில் துணை கப்பல்கள் நேசநாடு கப்பல்கலை காப்பாற்ற நல்ல பங்கு வகித்தன[220].மேலும் விமானம் தூக்கி கப்பல்கள் போர்கப்பல்களை விட சிக்கனமானவை[221]. நீர்மூழ்கி கப்பல்கள் முதல் உலகப்போரிலேயே பெரும் பங்கு வகித்ததால்[222] , எல்லா நாடுகளும் இரண்டாம் போரிலும் அதன் முக்கியத்தை முதலிலேயே உணர்ந்தன. பிரித்தன் நீர்மூழ்கி கப்பல் எதிர் ஆயுதங்களை வளமாகியது - இதில் பேரொலி அலைகலை வைத்து எதிரி கப்பல்களை தேடும் சோனார் ஆயுதமும் அடங்கும். ஜெர்மானியர் முன்னடிப்பு ஆயுதங்களில் கவனம் செலுத்தி.[223] , டைப் 4 நீர்மூழ்கி டிசைஙளை செய்து, ஓநாய் கூட்ட தாக்குதல் போன்ற முறைகளை கையாண்டனர். இதற்கு பதிலாக நேச நாடுகள் பல புது வித டார்பீடோக்களை உருவாக்கினர்.
தரைப்போர் முதல் உலக யுத்த அசையாத முன்னணி முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு, வேகமாக அசையும் அணிகளாகியது[224][225]. முதல் முறையாக கூட்டடித்த ஆயுதங்கள் , அதாவது பல வகை தளவாடங்களும் போர் துறைகளும் ஒன்றுபட்டு செயல்படுவது அமலாகியது. டாங்கி இரண்டாம் உலகப் போரில் பெரும் முன்னேற்றம் கண்டது. ராணுவ சிந்தனையாளர்கள் முதலில் டாங்கியை கொண்டு டாங்கி தாக்குதலுக்கு பதுகாப்பு தேடலாம் என நினைத்தனர். ஆனால் பல போர்கள் இக்கருத்தை வழக்கொழிய செய்து விட்டன. உதாரணமாக ஜெர்மானியர் டாங்கி - டாங்கி போரை தவிர்தனர் .அதனால் பிளிட்ஸ்கிரீக் போன்ற முறைகளில் பெரும் வெற்றி கண்டனர்.
தன் துருப்புகளுக்கு அரை தானியங்கி ரைபிள்களை கொடுத்த ராணுவம், அமெரிக்க ராணுவம். M1-Grand. மெஷின் கன்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எ.கா ஜெர்மானிய MG42. பல உப மஷின் கன்களும் , நகர, காட்டு,ஆள் சமீப சண்டைகளுக்காககண்டுபிடிக்கப் பட்டன. தாக்கு ரைபிள் , போரின் கடைசி கட்டத்தில் வந்தது, அது ரைபிள்மற்றும் உபமஷின் கன்னின் சிறந்த குணங்களை உள் கொண்டது. போருக்கு பின் எல்லா ராணுவங்களும் துருப்புகளுக்கு தாக்கு ரைபிள்களை கொடுத்தன.
தூரதொடர்பு துறையில் பாதுகாப்பு பிரச்சினைகளை சமிஞ்னை , கிரிப்டாகிராபி, உளவுப் பொறிகள் இவற்றல் சமாளிக்கப் பார்த்தார்கள். ஜெர்மனியரின் எனிக்மா பொறி புகழ் பெற்றது[226]. மேலும் ராணுவ உளவுத்துரை பல ஏமாற்றல் செய்கைகலை செய்து, எதிரிக்கு தன் பலம், பலவீனங்களை மறைத்தது. அதில் மிகச் சிறந்தது நேசநாடுகளின் நார்மண்டி தரையிரக்கம், சிசிலி தரையிரக்கம் முன்பு ஜெர்மானியர்களை தன் இலக்குகலை பற்றியும், பலங்களை பற்றியும் ஏமாற்றியது.
இதற்கு மேல் முதல் கணினிகள், ஜெர்மானியரின் V1 ,V2 ராக்கெட்டுகள், அமெரிக்கவின்அணுகுண்டு முதலியவை மாபெரும் முன்னேற்றங்கள் ஆகும்.


நன்றி : www.ta.wikipedia.org


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More