சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

வியாழன், 29 ஏப்ரல், 2010

நோய் தீர்க்கும் நெல்லிக்காய்



தினமும் வைத்தியசாலைகளைத் தேடி அலையும் நாம் மருத்துவக் குணம் நிறைந்த பல உணவுகளை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.
கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

புதன், 28 ஏப்ரல், 2010

வினைச்சொல்

    வினைச்சொல்லைப் பொறுத்தவரை சங்ககாலத் தமிழ் சில
குறிப்பிடத்தக்க மாற்றங்களைத்     தவிரப் பெரும்பாலும்
தொல்காப்பியர் காலத் தமிழாகவே உள்ளது. தெல்காப்பியர்
ஒவ்வொரு வினைமுற்றுக்கும் உரிய விகுதிகள் பற்றி மிகவும்
விரிவாகக் கூறுகிறார். சங்ககாலத் தமிழில் அவ்விகுதிகளுள் பல
வழங்குவதையும் ஒரு சில வழக்கிழந்து போனதையும் அறிய
முடிகிறது. மேலும் சில புதிய வினைமுற்று விகுதிகளும்
காணப்படுகின்றன. தமிழ்மொழியின் தொடர் அமைப்பி்ல்
வினையெச்சம், பெயரெச்சம் ஆகியன இன்றியமையாத இடம்
பெறுகின்றன. இவற்றிற்கு உரிய வாய்பாடுகள் பற்றித்
தொல்காப்பியர் விரிவாகக் குறிப்பிடுகிறார். இவை யாவும்
சங்கத்தமிழில் காணப்படுகின்றன. மேலும் சில புதிய
வாய்பாடுகளும் காணப்படுகின்றன.

5.4.1 தன்மை வினைமுற்று
    தொல்காப்பியர், தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளாக,
கு, டு, து, று, என், ஏன், அல் ஆகிய ஏழு விகுதிகளைக்
கூறுகிறார். இவை யாவும் சங்கத் தமிழில் வழங்குகின்றன. டு, து,
று 
ஆகிய விகுதிகள் இசின் என்ற அசைச்சொல்லோடு சேர்ந்து
வழங்குகின்றன. மேலும் தொல்காப்பியர் கூறாத அன் என்னும்
புதிய விகுதியும் சங்ககாலத் தமிழில் வந்து வழங்குகிறது.


டு
- பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசின் 
        (புறநானூறு, 150 : 24)
து
- ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே        (அகநானூறு, 38: 18)
று
- கண்ணும் படுமோ என்றிசின் யானே 
        (நற்றிணை, 61 : 10)

கேட்டிசின்= கேட்டேன் ;
மறந்திசின்மறந்தேன் ;
என்றிசின்= என்றேன் ;

  • அன்

  •     அன் என்பதைத் தொல்காப்பியர் படர்க்கை ஆண்பால்
    ஒருமை வினைமுற்று விகுதியாக மட்டுமே கூறுகிறார். ஆனால்
    இது, சங்ககாலத் தமிழில் தன்மை ஒருமை வினைமுற்று
    விகுதியாகவும் வழங்கப்படுகிறது.


    உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
    உரைக்கல் உய்ந்தனனே    
    (நற்றிணை, 17: 8-9)

  • ஓம்

  •     தன்மைப்     பன்மை     வினைமுற்று விகுதிகளாகத்
    தொல்காப்பியர் கும், டும், தும், றும், அம், ஆம், எம், ஏம் 
    ஆகிய எட்டு விகுதிகளைக் கூறுகிறார். இவற்றுள் சங்ககாலத்
    தமிழில் டும் என்பது மட்டும் வழங்கவில்லை. பிற ஏழு
    விகுதிகளும் வழங்குகின்றன. மேலும் ஓம் என்ற புதிய விகுதி
    இரண்டு இடங்களில் வழங்குகிறது.


    ஓம் - மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே 
             (ஐங்குறுநூறு, 112: 4)

    5.4.2 முன்னிலை வினைமுற்று
        தொல்காப்பியர், முன்னிலை ஒருமை வினைமுற்று
    விகுதிகளாக இ, ஐ, ஆய் ஆகிய மூன்றையும் பன்மை
    வினைமுற்று விகுதிகளாக இர், ஈர், மின் ஆகிய மூன்றையும்
    குறிப்பிடுகிறார். இவை சங்ககாலத் தமிழிலும் வழங்குகின்றன.
    மேலும் ஈம்என்பது ஒரு புதிய விகுதியாக வழங்குகிறது.

        செய்யுளுள் ஆய் விகுதி ஓய் எனத்திரிந்து வழங்கும்.
    மொழியியலார் இதனைத் தனி விகுதியாகக் கொள்வர்.

    ஓய்- பிறந்தோய் (பிறந்தாய்) (புறநானூறு, 164 : 13)
    ஈம்- தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே 
            (அகநானூறு, 218 : 22)

    இகர விகுதியோடு இசின் எனும் அசைச் சொல் சேர்ந்து வரும்
    வினைமுற்றுகள் பல காணப்படுகின்றன.

    கண்டிசின் (காண்பாய்) (அகநானூறு, 99 : 11)

    5.4.3 படர்க்கை வினைமுற்று
        தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள படர்க்கை ஐம்பால்
    வினைமுற்று     விகுதிகள் அனைத்தும்     சங்ககாலத்தில்
    வழங்குகின்றன. அவை அன், ஆன், அள் ஆள், அர் ஆர், ப, 
    மார் 
    என்பனவாகும். இவற்றுடன் இவற்றின் திரிபுகளாகிய 
    ஓன், ஓள், ஓர்
     என்பனவும் சங்கத்தமிழில் வழங்குகின்றன.

        (எ.டு)

    வந்தோன்(நற்றிணை, 114 : 6)
    நோக்கியோள்(நற்றிணை, 55 : 9)
    சென்றோர்(அகநானூறு, 387 : 20)

    இத்திரிபுகள் இசின் என்ற அசைச் சொல்லுடன் சேர்ந்தும் வரும்.
        (எ.டு)

    புகழ்ந்திசினோனே (புகழ்ந்தான்) 
            (அகநானூறு, 210 : 10)


  • இரட்டைப் பன்மை விகுதி - அர் - கள்

  •     சங்ககாலத் தமிழில் அரசர்கள், ஐவர்கள் போன்ற
    உயர்திணைப் பெயர்ச்சொற்கள் அர்-கள் என்னும் இரட்டைப்
    பன்மை விகுதிகள் பெறவே. அச்சொற்கள் கொண்டு முடியும்
    வினைமுற்றுகளும் ஆர்-கள் என்னும் இரட்டைப் பன்மை
    விகுதிகள் பெற்று வழங்கத்தொடங்கின. இத்தகு வினைமுற்று,
    கலித்தொகையில் மட்டும் ஓரிடத்தில் வழங்குகிறது. 
        
    வாழ்வார்கள்     (கலித்தொகை, 145 : 17)


  • அஃறிணை ஒருமை, பன்மை விகுதிகள்

  •     அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதிகள் - து, டு, று ;
    பன்மை விகுதிகள் அ, ஆ, வ என்பன. இவற்றில்
    தொல்காப்பியர்காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும்
    இடையே மாற்றம் இல்லை.

    5.4.4 வியங்கோள் வினைமுற்று
        வியங்கோள் வினைமுற்று, படர்க்கையில் மட்டுமே வரும்.
    தன்மையிலும் முன்னிலையிலும் வாராது என்கிறார் தொல்காப்பியர்
    (தொல்.சொல். 228), ஆனால் சங்ககாலத்தில் படர்க்கையில்
    மட்டுமன்றித் தன்மை, முன்னிலை ஆகிய இடங்களிலும் வருகிறது.
    க, இய, இயர் ஆகியன வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக
    வந்துள்ளன. வாழ்த்தல், வைதல், வேண்டுதல், விதித்தல் ஆகிய
    பொருள்களில் வியங்கோள் வினைமுற்று வருகிறது. 
        
    இவள் தந்தை வாழியர் (நற்றிணை, 8 : 4)

    என்ற வரியில் வாழியர் (வாழ்க) எனும் வியங்கோள் வினைமுற்று
    படர்க்கையில் வந்துள்ளது.

        
    பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக 
            (புறநானூறு, 71 : 5-6)

        (பிரிக = பிரிவேனாக)
        இங்குப் பிரிக என்பது தன்மையில் வந்துள்ளது.     
    வல் விரைந்து செல்க பாக ! நின் நெடுந்தேர்        (அகநானூறு, 204 : 8-9)

    இங்குச் செல்க என்பது முன்னிலையில் வந்துள்ளது.
    5.4.5 வினையெச்சம்
        தொல்காப்பியர் சொல்லதிகாரம் வினையியலில், செய்து,
    செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின்,
    செய, செயற்கு
     என்னும் ஒன்பது வினையெச்ச வாய்பாடுகளைக்
    கூறுகிறார். (தொல்.சொல். 228) மேலும் அவர் பத்தாவது
    வினையெச்ச வாய்பாடாக, செய்யா என்னும் வாய்பாட்டையும்
    கூறுகிறார் (தொல்.எழுத்து. 223). இது அமைப்பில் எதிர்மறை
    போலக் காணப்படினும் உடன்பாட்டுப் பொருளையே தரும்.
    சங்ககாலத் தமிழில் இப்பத்து வாய்பாட்டு வினையெச்சங்களும்
    பயில்கின்றன. செய்து, செய என்னும் வினையெச்ச வாய்பாடுகள்
    மிகுதியாகப் பயில்கின்றன. 
        
    செய்து
    - இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே 
            (குறுந்தொகை, 34 : 3
    )
    செய்தென
    - மெல்லம் புலம்பன் பிரிந்தென 
            (குறுந்தொகை, 5 : 4)
    செயின்
    - வேம்பின் பைங்காய் என் தோழி தரினே     (குறுந்தொகை, 196 : 1-2)
    செய
    - அலமரல் வருத்தம் தீர (நற்றிணை, 9 : 3)

    (பிரிந்தென = பிரிந்ததால் ; தரின் = தந்தால்)
        செய்யா - இவ்வாய்பாடு சங்ககாலத் தமிழில் உடன்பாடு,
    எதிர்மறை என்னும் இரு பொருளிலும் வழங்குகிறது.

    உடன்பாடு

    - நுதிவேல் கொண்டு நுதல் வியர் துடையா(துடைத்து எனும் பொருள் - உடன்பாடு)    (புறநானூறு : 349)
    எதிர்மறை
    - பொழில் கொளக் குறையா மலர (குறையாமல் எனும் பொருள்- எதிர்மறை)         (பரிபாடல், 8 : 92)

        சங்ககாலத் தமிழில் தொல்காப்பியர் குறிப்பிடாத அல்லது
    அவர் காலத்தில் வழங்காத வினையெச்ச வாய்பாடுகள் சிலவும்
    காணப்படுகின்றன.

    (1) செய்வான், செய்பான் என்னும் இருவகை வாய்பாட்டு
        வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

    நீ்க்குவான் பாய்வாள்     (பரிபாடல், 7 : 57) 
    காண்பான் யான் தங்கினேன் (கலித்தொகை, 97 : 7)

    (2) வினையடியோடு மார் என்னும் ஈறு சேர்ந்து வரும் செய்மார்
        என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காணப்படுகின்றது.

        
    அவரே, கேடில் விழுப்பொருள் தருமார்     வாடா வள்ளி அம் காடு இறந்தோரே 
             (குறுந்தொகை, 216 : 1-2)

        (தருமார் = கொண்டு வரும் பொருட்டு)
    (3) சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ஆயின் என்னும்
        சொல வினைமுற்றைத் தொடர்ந்து நின்று வினையெச்சமாகி
         நிபந்தனைப் பொருளில் செயல்படுகிறது. 
        
    செல்வை ஆயின் செல்வை ஆகுவை 
             (புறநானூறு, 70 : 16)

        (செல்வை ஆயின் = செல்வாய் ஆனால்; செல்வை     ஆகுவாய் = செல்வத்தை உடையவன் ஆவாய்)
    (4) தொல்காப்பியர்     பெயரெச்சமும்     வினையெச்சமும்
         எதிர்மறைப் பொருளில் வரும் என்கிறார். (தொல்.சொல்.
         238) ஆனால் அதற்குரிய வாய்பாடுகளை அவர்
         கூறவில்லை. சங்கத் தமிழில் செய்யாது, செய்யாமல்,     செய்யாமை என்னும் வாய்பாடுகளைக் கொண்ட
         எதிர்மறை வினையெச்சங்கள் காணப்படுகின்றன.

    யானும் தன்னை அறியாது சென்றேன் 
            (கலித்தொகை, 51 : 8)
    கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடும் கூளி
             
    (கலித்தொகை, 1 : 3)
    சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்         (நற்றிணை, 61 : 6)
    (சொல் வெளிப்படாமை = சொல்வது வெளியில்          கேட்காதபடி)


  • வினைமுற்று வினையெச்சம் ஆதல்

  •     சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் இரண்டு
    வினைமுற்றுகள் அடுத்தடுத்து வருகின்றன. அவ்வாறு வரும்போது,
    முதலில் வரும் வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருகிறது.
    இத்தகு வினையெச்சம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
    பிற்காலத்தில் வந்த நன்னூலார் இதனை முற்றெச்சம் என்கிறார்.

    கண்டனம் வருகம் (கண்டு வருவோம்) 
                  (நற்றிணை, 182 : 7)
    தந்தனை சென்மோ (தந்து செல்வாயாக) 
             (ஐங்குறுநூறு, 159 : 5)

    5.4.6 பெயரெச்சம்
        தொல்காப்பியர் காலத்தில் செய்த, செய்யும் என்னும்
    இருவகை வாய்பாட்டுப்     பெயரெச்சங்களே     வழங்கின.
    சங்ககாலத்தில் இவ்விரு வகைகளோடு, செய்கின்ற என்னும்
    வாய்பாட்டுப் பெயரெச்சமும் வழங்குகிறது. இது நிகழ்காலத்திற்கு
    உரியது. முதன்முதலாகப் பரிபாடலில் ஒரே இடத்தில் மட்டும்
    வருகிறது.

    செய்த விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே 
             (குறுந்தொகை, 210 : 6)
    செய்கின்ற தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின் 
             (பரிபாடல், 22 : 35)
    செய்யும் கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் 
             (நற்றிணை, 132 : 5)

        பெயரெச்சம் எதிர்மறைப் பொருளில் வரும்போது,
    செய்யாத, செய்யா என்னும் வாய்பாடுகளில் வருகிறது. சங்க
    இலக்கியத்தில் செய்யா என்னும் வாய்பாடே     மிகுதியாக
    வழங்குகிறது. இதனை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர். செய்யாத என்னும் வாய்பாடு ஒரு சில இடங்களில்
    மட்டுமே வழங்குகிறது.

        
    செய்யாத - வெயில் ஒளி அறியாத விரிமலர்த் தண்கா        (கலித்தொகை, 30 : 7)
    செய்யா - பல் ஆ தந்த கல்லாக் கோவலர் 
                 (நற்றிணை, 364 : 9)

    5.4.7 காலம் காட்டும் இடைநிலைகள்
        வினைச்சொல்லின்     தலையாய இலக்கணம் காலம்
    காட்டுவது. வினைச்சொற்களில் வினை அடிச்சொல்லுக்கும்
    விகுதிக்கும் இடையே உள்ள இடைநிலைகள் என்னும் உருபுகள்
    காலம் காட்டுகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் பற்றித்
    தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.

        சங்ககாலத் தமிழில் த், ட், ற், இ ஆகியன இறந்தகால
    இடைநிலைகளாக வருகின்றன. இவற்றுள் ட், ற் ஆகிய இரண்டும்
    த் என்பதன் திரிபுகள் என மொழிநூலார் கூறுவர். த் என்பதன்
    மாற்று வடிவங்களாக த்த், ந்த் ஆகியன வழங்குகின்றன எனவும்,
     என்பது இய், இன் என்ற இரு வடிவங்களுடன்
    காணப்படுகிறது எனவும் மொழிநூலார் காட்டுகின்றனர்.


    - த்- தொழுதான்(கலித்தொகை, 55 : 19)
    - த்த்- கொடுத்த(நற்றிணை, 110 : 11)
    - ந்த்- வந்தனன்(நற்றிணை, 40 : 11)
    - ட்- கண்டனம்(குறுந்தொகை, 275 : 2)
    - ற்- சென்றார்(அகநானூறு, 31 : 12)
    - இய்- போகியோன்(குறுந்தொகை, 176 : 4)
    - இன்- அஞ்சினர்(அகநானூறு, 26 : 16)






        கின்று, ஆநின்று ஆகிய இரண்டும் நிகழ்கால
        இடைநிலைகளாக வழங்குகின்றன.

    - கின்று - ஆகின்றது 
        (நற்றிணை, 227 : 9, 
    அகநானூறு, 96 : 18)
        சேர்கின்ற (பரிபாடல், 22 : 35)
    - ஆநின்று - வாராநின்றனள் 
            (ஐங்குறுநூறு, 397 : 3)

    ப், வ், ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழங்குகின்றன.     
    ப் - காண்பேன்      (நற்றிணை, 259 : 8)
    - வ் - செல்வாள்      (ஐங்குறுநூறு, 234 : 4)

    திருச்சிராப்பள்ளி

    திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது.

         திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

         சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

         திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.

         கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.

         மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.

         மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், வெக்காளி அம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் சம்புகேசுவரர் திருக்கோயில், வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய திருத்தலங்கள் ஆகும்.

         மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், முக்கொம்பு, கல்லணை, வயலூர் முருகன் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றன.

         திருச்சியில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அவற்றுள், தேசிய தொழில்நுட்பக் கழகம், ஜமால் மொகமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, தூய வளனார் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இன்ஜினியரிங், உருமு தனலட்சுமி கல்லூரி, ஏ.ஏ. அரசு கலைக் கல்லூரி, கலை காவேரி கலை அறிவியல் கல்லூரி, காவேரி கலை அறிவியல் கல்லூரி, கிருத்துராஜ் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி, தூய சிலுவை கல்லூரி, தேசிய கல்லூரி, பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, ஜெ. ஜெ. காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்டு டெக்னாலஜி போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

    கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்..

    கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்..




    கணவன் மனைவி வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.

    அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?


    கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

    குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?



    1. வருமானம்

    2. ஒத்துழைப்பு

    3. மனித நேயம்

    4. பொழுதுபோக்கு

    5. ரசனை

    6. ஆரோக்கியம்

    7. மனப்பக்குவம்

    8. சேமிப்பு
    9. கூட்டு முயற்சி

    10. குழந்தைகள்


    கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

    1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
    2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

    3. கோபப்படக்கூடாது.

    4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

    5. பலர் முன் திட்டக்கூடாது.

    6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

    7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

    8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

    9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

    10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

    11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

    12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

    13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

    14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

    15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

    16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

    17. ஒளிவு மறைவு கூடாது.

    18. மனைவியை நம்ப வேண்டும்.

    19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

    20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

    21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

    22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

    23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

    24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

    25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

    26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

    27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

    28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

    29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

    30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

    31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

    32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

    33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

    34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

    36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

    37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும.
     
     
    மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

    1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

    2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.

    3. எப்போதும் சிரித்த முகம்.

    4. நேரம் பாராது உபசரித்தல்.

    5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

    6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

    7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

    8. அதிகாரம் பணணக் கூடாது.

    9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

    10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

    11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

    12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

    13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.


    14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

    15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

    16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

    17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

    18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

    20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.


    22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

    23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

    24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

    25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.


    26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

    27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

    28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

    31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

    32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.

    33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.



    பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

    தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்

    சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்

    குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்

    நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்

    பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்


    மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

    பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்
     
     
    பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

    1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

    2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

    3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

    4. விரும்பியதைப் பெற இயலாமை.

    5. ஒருவரையொருவர் நம்பாமை.

    6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.


    7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

    8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

    9. விருந்தினர் குறைவு.

    10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

    11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

    12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

    13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

    14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.



    உங்கள் பங்கு என்ன?

    உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


    1. அன்பாகப் பேசுவது

    2. பிறர் மீது அக்கறை காட்டுவது.

    3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

    4. குறை கூறாமல் இருப்பது.

    5. சொன்னதைச் செய்து கொடுப்பது.

    6. இன்முகத்துடன் இருப்பது.

    7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.

    8. பிறரை நம்புவது.

    9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.

    10. பணிவு
    11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.

    12. பிறர் வேலைகளில் உதவுவது.

    13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

    14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

    15. சுறுசுறுப்பு

    16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.

    17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.

    18. நகைச்சுவையாகப் பேசுவது.

    19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

    20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

    21. நேரம் தவறாமை.

    22. தற்பெருமை பேசாமல் இருப்பது.

    23. தெளிவாகப் பேசுவது.

    24. நேர்மையாய் இருப்பது.

    25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.


    எதற்கும் யார் பொறுப்பு?

    நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா?

    பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை?

    நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ...


    பத்து கட்டளைகள்

    1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

    2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

    3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

    4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

    5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

    6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

    7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

    8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

    9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

    10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

    "வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். "

    புதன், 21 ஏப்ரல், 2010

    லெனினும் சிவப்பு வன்முறையும்

    அக்டோபர் 1917 போல்ஷவிக்கு புரட்சி பிறகு, கம்யூனிஸுடு எதிர்ப்பாளர்கள் `வெள்ளை இயக்கம்` என அழைக்கப் படும் இயக்கத்தில் செயல்பட்டனர். 1918ல், `வெள்ளை இயக்கத்தினர்` புதிதாக ஆக்கப்பட்ட ரஷ்ய சோசோகு க்கு எதிராகா ரஷ்ய உள்நாட்டு போரை துவங்கினர். அது பலரை கைது செய்து, சுட்டது. அதனால், அது `வெள்ளை வன்முறை` என அழைக்கப் பட்டது. சிவப்பு வன்முறை வெள்ளை வன்முறைக்கு பதிலாக ஆரம்பிக்கப் பட்டதாக கம்யூனிஸ்டுகள் சொன்னர்கள். லெனின் மேல் கொலை முயற்சியை அடுத்து, ஸ்டாலின் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பகிரங்க, பாரிய வன்முறையை ஆரம்பிக்க வேண்டும் என கோரினார்.. மற்ற போல்ஷெவிக்குகளும் அதற்கு உடன்பட்டு, 1917ல் லெனின் ரகசிய போலீஸ் சேகாவின் தலைவராக நியமித்த ஃபீலிக்ஸ் டிசெர்சின்ஸ்கியை , `சிவப்பு வன்முறை`யை தொடங்குமாறு கேட்டுக் கொண்டனர்; அது கம்யூனிஸ்டு பத்திரைகையில் செப்டம்பர் 1, 1918ல் வெளியிடப்பட்டது.[1] . சில வரலாற்று ஆய்வுகள்படி, துப்பாக்கி ரவை அடியினால் படுத்திருந்த லெனின் .[2], “ரகசியமகவும், துரிதத்துடனும், சிவப்பு வன்முறையை தயார் செய்ய வேண்டியுள்ள்ளது” என ஆணை இட்டாராம். ரிசர்டு பைப்ஸ் என ஆய்வாளர் படி லெனின் 11 ஆகஸ்து 1918 அன்று வன்முறையை தொடங்க உத்தரவிட்டார். அது `லெனினின் தூக்கு ஆணை` என அறியப் படுகிறது.[3].


    சேகா ஈவிறக்கம் இன்றி மற்றவர்களை கொன்றது என்று வரலாறு ஆசிரியர் ராபர்ட் கெலேட்லி தனது நூல் “லெனின், ஸ்டாலின்,ஹிட்லர்” இல் கூறியுள்ளார்[4]. சந்தேகிக்கப்பட்ட நபர்கள் தீவிர சித்திரவதை, கம்படி, சுடப்படுதல், உடல் ஊனமாக்குதல் இவற்றை எதிபார்க்கலாம். சிலர் சுட்டு தள்ளப் பட்டனர்".[5], மற்றவ்ரக்ள் நீரில் மூழ்கப்பட்டனர், குளிரில் உறையப்பட்டனர், அல்லது கத்தில்யால் வெட்டப்பட்டனர்,மேலும் கொல்லப்பட்டவர்கள் தங்கள் சாவுகுழிகளை தாங்களே தோண்ட வேண்டியிருந்தது.பல சரிதிர ஆய்வாளர்கள் சிவப்பு அட்டுழியங்களை பற்றி படித்து ஆவணம் செய்துள்ளனர். .[6][7][8] [9]

    சோவியத் அரசால் பிரசுரிக்கப் பட்ட ஒரு சுட்டு தள்ளல் புள்ளி விவரம், சேகாவினால் கொடுக்கப்பட்டது. அது ரஷ்ய சோசோகு பகுதியில் 1918-20 காலத்திற்கு மொத்தம் 12,,733 எனவும், அதில் 3082 பேர் கலத்தில் பங்கு எடுத்தனர், 2024 எதிர்-புரட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தனர் என்றும், 643 ரௌடிகள் என்றும், 455 புரட்சிக்கு ஊக்கு கொடுத்தனர் என்றும், 206 ஊழல் காரர்கள் எனவும், 102 உளவினர் என்வும், 102 பேர் ராணுவத்தை கைதுறந்தவர் எனவும் சுடப்பட்ட்னர்[10]. இந்த புள்ளி விவரங்கள் உண்மைக்கு மிகக் குறைவான மதிப்பீடு என நம்பம் படுகிரது. ஏனெனில் இது போர் பகுதிகளான கிரைமியாவையும், யுக்ரெயினையும் அடக்க வில்லை[11]. அப்பிர்தேசங்களில் ஜெனெரல் ரேங்கல் எனப்படும் கலகக் காரரின் கலகம் தடைவிதி செய்யப் பட்ட பிறகு 50,000 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்[12]. சில சரித்திர முனைவர்கள் கணக்குப் படி 1917-22 காலகட்டத்தில் 280,000 பேர் சேகாவினால் கொல்லப் பட்டனர், அதில் பாதி திடீல் சுட்டுக் கொல்லப்பட்டனர், மறு பாதி கலகம் அடக்கும் போது கொல்லப் பட்டனர்[13] .[14] . பேரா.ரும்மல் லெனினை 40 லட்சம் அகால மரணங்களுக்கு பொறுப்பாளி ஆக்குகிறார்[15] . கம்யூனிசத்தின் கருப்பு நூல் படி[16] , மே 1919` 16,000 ஜார் காலத்திய கடோர்கா என அழைக்கப் படும் பணி முகாம்களில் இருந்தனர். அது செப்டம்பர் 1921ல் 70000 ஆயிற்று. இந்த முகாம்களின் மிக மோசமான நிலைகளினால் இறப்பு வீதம் அதிகமக இருந்தது, அங்கு பல படுகொலைகள் செய்யப்பட்டன[17] . சில சமயம், மொத்த முகாம் வாசிகளும் சுட்டு கொல்லப்பட்டனர், ஏனெனில் அப்பொது `வெள்ளை படையினர் அப்பகுதியில் வெற்றி பெறுவர் என வாய்ப்பு இருந்தது[18][19] .

    பேரா.ஒர்லாண்டோ பியுக்படி லெனின் பொதுவாக பயங்கர அடக்கு முறைகளை புரட்சிக்கு எதிர்ப்பு கொடுப்பவர்கள் மீது தொடுக்க ஆவலாயிருந்தார்.[20] ; மேலும் பிராலடேரியன் தேசம் - அதாவது தொழிலாளர் தேசம் என்பது முதலாளித்துவவாதிகள் மீது பாரிய வன்முறையை செலுத்துவதாகும் என்பதில் உறுதியாக இருந்தார்.. காமனேவ், புகாரின் போன்ற தலைவர்கள் செகாவின் மிகை வன்முறையை அடக்க முயன்ரபோது, லெனின் சேகாவிற்கு ஆதரவு கொடுத்தார்[21] . 1921ல், லெனின் தலைமையில் இருந்த அரசு கூட்டம், சேகாவின் மரண தண்டனை வரைகளை அதிகமாக்கியது[22] .

    பேரா.ரிசர்டு பைப்ஸ்படு லெனின் பயங்கர வன்முறை அடக்கு முரைகளை ஆதரித்தவர். ஷூயா எனும் நகரில் சில மத குருக்கள் கலகம் செய்தனர், அதனால் மார்ச் 19, 1922 மடலில் , லெனின் அரசு ஆணைப்படி தேவாலயங்களின் உடைமைகளை தராத மதகுருக்கள் மீது பயங்கரமான அட்டுழியங்களை திட்டமிட்டார். ”நம் எலா மத பூசாரிகள் எதிர்ப்புகளையும் ஆணித்தரமாக அடித்தொழித்து, அதை அவர்கள் பல சதாப்தங்களுக்கு மறக்கக் கூடாது. இன்னும் அதிக எண்ணிக்கையில் மதகுருக்க்ளையும், பூர்ஷ்வாக்களையும் மரணத்திற்கு அனுப்புவதே மேல்”[23] . அதனால் அந் நகரில் 2691 பூசாரியர், 1962 துறவிகள், 3447 பெண் பூசாரிகள் லெனின் ஆனைக்கு நேரடியாக சுட்டுக் கொல்லப் பட்டனர்[24] [25]. 1980ல் கொர்பச்சாவின் “ஜனாதிபதியின் அரசியல் அடக்கு முறைகளில் பலியானவர்களின் நினைவு கமிடி’ தலைவர் அலெக்சாண்டர் யாகாவ்லேவ், படி 1918ல் மட்டுமே 3000 சுட்டுக்கொல்லப் பட்டனர். அவர்படி “லெனின் சர்வதேச நீதிகள்படி மானுடத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தவர் என குற்ற, சாட்டப் படலாம்`.[26] [27]

    செப்டம்பர் 1918, சிவப்பு வன்முறை போது 25 முன்னாள் ஜாரின் மந்திரிகள், உயர் அதிகாரிகள், மற்றும் 765 `வெள்ளை காப்பாளர்` என சொல்லப் பட்டவரக்ள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் மரண ஆணையை லெனினே கையெழுத்திட்டார். டைம் மாகசீன் கட்டுரை படி லெனின் வாரிசுகள் ஸ்டாலின், மாவோ, ஹிட்லர், போல்-போட் ஆவர்]][28].

    உள்நாட்டு போர் போது, அட்டூழியங்கள் இரு தரப்பினராலும் செய்யப் பட்டன[29] . சிலர் `வெள்ளை வன்முறை` `சிவப்பு வன்முறை` அளவு இருந்தனர் என்கிறனர்[30] . ஆனால் பல சரித்திர ஆசிரியர்கள் இரு அட்டுழியங்களும் ஒரே அளவல்ல[31] ; `வெள்ளை வன்முறை` தனிப்பட்ட ராணுவ தளபதிகளால் செய்யப் பட்டது, மேலும் அவை சொந்த பழி தீர்ப்புகளீனால் ஏற்பட்டவை[32]; ஆனால் `சிகப்பு வன்முறை` அரசின் கொள்கை - அதை எல்லா அரசு ராணுவ தளபதிகளும் நிறைவேற்ற கடமை பட்டவர்கள்[33] . லெனின் தன் ராணுவ தளபதிகளுக்கு அனுப்பிய தந்திகளில், ஈவு, இரக்கமற்ற அட்டூழயங்களை செய்ய்மாறு தூண்டினார். அவர் தந்திகள் வன்முறை, நாடு பிரஷ்டம், சுட்டு கொலை இவற்றை கேட்டு தேவை ஆக்கின உதாரணமாக ஆகஸ்து 9, 1918 அன்று நிழ்னி-நோவ்கோராட் நகரத்தில் இருந்த தன் தளபதிக்கு அனுப்பிய தந்தியில் “நீ, மார்கின், முதலியவர்கள் கூட்டு செர்ந்து பொது பயங்கர வாதத்தை அனுஷ்டித்து, நூற்றுக் கணக்கான வேசிகளை சுட வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், ஏனெனில் அவர்கள் பல ராணுவ வீரர்களை குடி போதைக்கு உள்ளாக்கி விட்டர்கள். நேரத்தை விரயமக்க வேண்டாம்.... ..........இப்பொழுதே செய்வோம், பொது தேடல்கள், ஆயுதங்களை ஒளித்து வைப்பதற்கு சூடுகொலை, மென்ஷவிக்குகளை நாடு கடத்துதல்[34] .”. சிலர் லெனினை பிரெஞ்சு புரட்சி பயங்கரவாதி ரோப்ஸ்பியருக்கு ஒப்பிட்டனர்]]."[35]


    லெனினின் இறுதிக் காலம்
    போருக்கு பிறகு நாட்டைச் சீர்படுத்தும் முயற்சி தொடங்கியது சோசலிசத்தைத் துணையாகக் கொண்டு இதற்கான திட்டத்தை லெனின் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. நிலைமை சீராகத் தொடங்கியது இந்த நேரத்தில் லெனின் கடுமையாக நோய் வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத் தொடங்கினார். ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார். ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல் முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் அறிவியலாளர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். வேதிப்பொருட்களின் உதவியுடன் ஒரு கண்ணாடிப் பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அகற்றப்பட்டது. எனினும் உலக வரலாற்றில் லெனினது பெயர் நிலைத்து நிற்கும்.

    மேற்கோள்கள்

    ↑ "Red Terror".


    ↑ Christopher Read (2005) Lenin: A Revolutionary Life: 250

    ↑ Christopher Andrew and Vasili Mitrokhin (2000). The Mitrokhin Archive: The KGB in Europe and the West. Gardners Books. ISBN 0-14-028487-7, page 34.

    ↑ Barry Ray. FSU professor's 'Lenin, Stalin, and Hitler' sheds new light on three of the 20th century's bloodiest rulers. Florida State University

    ↑ Evan Mawdsley (2008). The Russian Civil War. Birlinn, Edinburgh: 264

    ↑ Serge Petrovich Melgunov, Red Terror in Russia, Hyperion Pr (1975), ISBN 0-88355-187-X. See also: The Record of the Red Terror

    ↑ Lincoln, W. Bruce. Red Victory: A History of the Russian Civil War. Da Capo Press, 1999. pp. 383-385 ISBN 0-306-80909-5

    ↑ Leggett, George (1987). 'The Cheka: Lenin’s Political Police'. Oxford University Press. பக். pp. 197–198. ISBN 0198228627.

    ↑ Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. பக். p.646. ISBN 0-14-024364-X.

    ↑ Ronald Clark (1988) Lenin: The Man Behind the Mask: 356

    ↑ Leggett, George (1987). 'The Cheka: Lenin’s Political Police'. Oxford University Press. பக். p. 464. ISBN 0198228627.

    ↑ Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. பக். p. 72. ISBN 1400040051.

    ↑ Leggett, George (1987). 'The Cheka: Lenin’s Political Police'. Oxford University Press. பக். pp. 466–467. ISBN 0198228627.

    ↑ Figes, Orlando (1997). A People’s Tragedy: The Russian Revolution 1891–1924. Penguin Books. பக். p. 649. ISBN 0198228627.

    ↑ Rummel, R.J. (1994) Death by Government. Transaction Publishers. ISBN 1-56000-927-6 pg 8. See also: This Century's Bloodiest Dictators

    ↑ Black Book of Communism, p. 80

    ↑ Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. பக். 58–59. ISBN 1400040051.

    ↑ Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. பக். 59. ISBN 1400040051.

    ↑ Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. பக். 647. ISBN 0-14-024364-X.

    ↑ Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. பக். pp. 524–525. ISBN 0-14-024364-X.

    ↑ Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. பக். p. 649. ISBN 0-14-024364-X.

    ↑ Volkogonov, Dimitri. Lenin – A New Biography. New York: Free Press. பக். 238. ISBN 0-02-933435-7.

    ↑ Pipes, Richard (1996). The Unknown Lenin: From the Secret Archive. Yale University Press. பக். pp. 152–154. ISBN 0-300-06919-7.

    ↑ Figes, Orlando (27 October 1996). Censored by His Own Regime. The New York Times.

    ↑ Courtois, Stephane (1999). The Black Book of Communism: Crimes, Terror, Repression. Harvard University Press. பக். p. 126. ISBN 0674076087.

    ↑ Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 156

    ↑ Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 15

    ↑ Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. பக். p. 57. ISBN 1400040051.

    ↑ "Twentieth Century Atlas – Death Tolls".

    ↑ Christopher Read (2005) Lenin: A Revolutionary Life: 250

    ↑ Stalin and His Hangmen: The Tyrant and Those Who Killed for Him by Donald Rayfield, pg 84

    ↑ Black Book of Communism, p. 82

    ↑ Robert Conquest (1990) The Great Terror - A Reassessment: 251

    ↑ Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 21

    ↑ Volkogonov, Dimitri. Lenin – A New Biography. New York: Free Press. பக். 343. ISBN 0-02-933435-7.

    விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin)

    விளாடிமிர் லெனின்





















    விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin)

    ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

    "லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.

    லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

    வாழ்க்கைக் குறிப்பு
    லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது. இவரது மூதாதையர்கள் ரஷ்யர், மோர்டோவியர், கல்மியர், யூதர், வொல்கானிய ஜேர்மானியர், சுவீடியர் எனப் பலவிதமான இனப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என இவரது வரலாற்றை எழுதியவரான டிமிட்ரி வொல்க்கோகோனோவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார். சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார். 1886 ஆம் ஆண்டு ஜனவரியில் மூளையில் ஏற்பட்ட நோயினால் லெனினின் தந்தையார் இறந்தார். 1887 மே மாதத்தில் லெனினுக்குப் 17 வயதாக இருக்கும்போது, ரஷ்யாவின் ஜார் மன்னனைக் கொல்வதற்கான சதிமுயற்சியில் பங்கு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கைதானபோது அவருடன் இருந்த சகோதரி கிசானிலிருந்து 40 கிமீ தொலைவிலிருந்த கொக்குஷ்கினோ என்னும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகள் லெனினைத் தீவிரவாதி ஆக்கின. இவரது வரலாறுகள், லெனினது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தீவிரவாதப் போக்குக்கு இதையே அடிப்படையாகக் கூறுகின்றன. பிற்காலத்தில் கோடிக்கணக்கான ரஷ்யப் பாடநூல்களில் இடம்பெற்ற, நாங்கள் வேறு பாதையைப் பின்பற்றுவோம் என்னும் தலைப்பிட்டு, பியோட்டர் பெலூசோவ் என்னும் ஓவியர் வரைந்த புகழ் பெற்ற ஓவியத்தில் லெனினும் அவரது தாயாரும் அலெக்சாண்டரின் இழப்புக்காகத் துயரப்படுவது காட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.


    அரசியல் ஈடுபாடு
    லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட லெனினும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டார். இதனால் லெனின் பின்னர் கைது செய்யப்பட்டார். இவரது அரசியல் கருத்துக்களுக்காக இவர் பல்கலைக் கழ்கத்திலிருந்தும் விலக்கப்பட்டார். எனினும் படிப்பை அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்ட லெனின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். லெனினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே சட்டம்பயின்ற அவர் 1891 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். 1892 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிப் பட்டம் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்ததோடு, ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றையும் ஓரளவு கற்றிருந்தார். எனினும் பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது பயிற்சி குறைவாகவே இருந்தது. அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.

    லெனின் தேர்வு செய்த பாதை
    லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் கார்ல் மார்க்ஸ் என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது. மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக கார்ல் மார்க்சும் அவருடைய நண்பர் ஏங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்

    கம்யூனிசப் பிரசாரம்
    லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர். லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.

    சைபீரியச் சிறைவாசம்
    1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அதிகாரிகள் அவரைப் 14 மாதங்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் தடுப்புக்காவல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட லெனின் சைபீரியாவில் உள்ள சுஷென்ஸ்கோயே என்னும் ஊருக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு, ரஷ்யாவில் சோசலிசத்தை அறிமுகப்படுத்திய ஜார்ஜி பிளெக்கனோவ் போன்ற குறிப்பிடத்தக்க மார்க்சியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது. 1898 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லெனின் தான் காதலித்த நடேஷ்டா கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு. சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். ரஷ்யாவின் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலொன்றையும் அவர் எழுதி வெளியிட்டார். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை.

    முதல் ரசியப் புரட்சி

    லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிகையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்.1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம்.தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டிப் பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.
    அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.

    போல்ஷ்விக்குகள் மீது அடக்குமுறை


    1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்களிக்குப் பயந்து கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படி சிலர் கூறினர். இந்தக் கோழைகளுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார். இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப் போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது

    ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி


    லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டிப் பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோத்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
    வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.

    சதியை முறியடித்த லெனின்
    ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் சாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. சாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்கப் போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.

    லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்குக் கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.புல் அறுப்பவராக, கூலி உழவராக, ஓட்டுநராக‌ எனப் பல வேடங்கள் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்நகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். இரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாகத் தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்குத் தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.ஆனால் மையக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிகக் கமுக்கமான இந்தத் திட்டத்தை செய்தித்தாள்களிடம் வெளிப்படுத்தி இரண்டகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ஆம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்குக் கமுக்கமாகக் கொண்டு செல்லப்பட்டன.

    நவம்பர் புரட்சி
    1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாகச் சுரண்டல் ஒழிக்கப்பட்டது அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். தொடர்வண்டி நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. இரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசுத் தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இரசியாவின் அனைத்து நிலங்களும் வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.


    உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிருவாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிருவாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிருவாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே அனைத்து அதிகாரம் படைத்தவர்கள். தொழிற்சாலைகளின் நிருவாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்திற்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் நொடியில் மறைந்தது.நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனத்தில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. சார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக முன்னேறியது.பொருளாதார சீரைமைப்பு வெகுவாக அமல் படுத்தப்பட்டது.

    உள்நாட்டுப் போரும் வெளிநாட்டுத் தலையீடும்
    இரசியாவில் நாடு தழுவிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பல‌ வகையான அரசியல் இயக்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆயுதங்களை எடுத்துப் போராடினர். சிலர் சோவியத் அரசுக்கு ஆதரவாகவும் வேறுசிலர் அவ்வரசை வீழ்த்தும் நோக்கிலும் போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும் முக்கியமான இரண்டு பிரிவுகள் கம்யூனிஸ்டுகளின் செம்படைகளூம், மரபுவாதிகளான வெண்படைகளும் ஆகும். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் சோவியத்துக்கு எதிராக வெண்படைகளுக்கு ஆதரவு நல்கினர். இரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்துத் தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்துக் கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.விரைவில் தலைநகரைக் கைப்பற்றி லெனினைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் இரசியாவைப் பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி வெளிப்படையாகப் பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.இந்த அபாயகரமான சூழலில் லெனின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்கப் படையில் சேருங்கள்.எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று இரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெறப் பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் லெனின். செம்படையினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போரிட்டனர் எதிராளிகளிடம் இத்தகைய ஒழுங்கமைவு காணப்படவில்லை இதனால், லியொன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போரிட்ட செம்படையினர் 1920 ஆம் ஆண்டு எதிராளிகளைத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். எனினும் ஆங்காங்கே சிறுசிறு குழப்பங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்துவந்தன. வெளிநாட்டுத் தூண்டுதல்களுடன் நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இரு பகுதியினருமே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கொடுமைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. கும்பல் கும்பலாக மக்கள் கொலை செய்யப்பட்டனர். போர்களுக்கு இடையே பஞ்சங்கள், தொற்றுநோய்கள் என்பவற்றினாலும் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோயினர்.
    வெண்படைகளுக்கும் அதன் வெளிநாட்டு, உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் எதிரான‌ போரில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கம்யூனிசப் புரட்சியை மேற்குநாடுகளுக்கும் பரவலாக்க லெனின் விரும்பினார். இதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் அவர் தயாராக இருந்தார். புதிதாக விடுதலைபெற்ற இரண்டாவது போலிஷ் குடியரசு, 18 ஆம் நூற்றாண்டில் போலந்துப் பிரிவினைக்குப் பின்னர் ரஷ்யாவுடன் இணக்கப்பட்ட போலந்தின் கிழக்குப் பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. அது இப் பகுதிகளில் போல்ஷெவிக்குகளுடன் சண்டைகளில் ஈடுபட்டது. இது போலந்து-சோவியத் போருக்கு வித்திட்டது. ஜேர்மனியில் ஏற்பட்ட புரட்சி, மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தைப் பரப்புவதற்காக சரியான வேளை அதுவே என எண்ணத்தூண்டியது. சோவியத்தையும், ஜேர்மனியிலுள்ள கம்யூனிச ஆதரவாளர்களையும் இணைப்பதற்கும் அதன் மூலம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பாலமாகப் போலந்தை லெனின் கணித்திருந்தார். எனினும், சோவியத்-போலந்துப்போரில் தோல்வியடைந்ததனால் சோவியத்தின் இந்தத் திட்டம் பயனற்றுப் போயிற்று.

    இரசியாவில் நாடு தழுவிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பல‌ வகையான அரசியல் இயக்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆயுதங்களை எடுத்துப் போராடினர். சிலர் சோவியத் அரசுக்கு ஆதரவாகவும் வேறுசிலர் அவ்வரசை வீழ்த்தும் நோக்கிலும் போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும் முக்கியமான இரண்டு பிரிவுகள் கம்யூனிஸ்டுகளின் செம்படைகளூம், மரபுவாதிகளான வெண்படைகளும் ஆகும். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் சோவியத்துக்கு எதிராக வெண்படைகளுக்கு ஆதரவு நல்கினர். இரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்துத் தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்துக் கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.விரைவில் தலைநகரைக் கைப்பற்றி லெனினைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் இரசியாவைப் பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி வெளிப்படையாகப் பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.இந்த அபாயகரமான சூழலில் லெனின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்கப் படையில் சேருங்கள்.எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று இரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெறப் பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் லெனின். செம்படையினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போரிட்டனர் எதிராளிகளிடம் இத்தகைய ஒழுங்கமைவு காணப்படவில்லை இதனால், லியொன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போரிட்ட செம்படையினர் 1920 ஆம் ஆண்டு எதிராளிகளைத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். எனினும் ஆங்காங்கே சிறுசிறு குழப்பங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்துவந்தன. வெளிநாட்டுத் தூண்டுதல்களுடன் நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இரு பகுதியினருமே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கொடுமைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. கும்பல் கும்பலாக மக்கள் கொலை செய்யப்பட்டனர். போர்களுக்கு இடையே பஞ்சங்கள், தொற்றுநோய்கள் என்பவற்றினாலும் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோயினர்.

    வெண்படைகளுக்கும் அதன் வெளிநாட்டு, உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் எதிரான‌ போரில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கம்யூனிசப் புரட்சியை மேற்குநாடுகளுக்கும் பரவலாக்க லெனின் விரும்பினார். இதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் அவர் தயாராக இருந்தார். புதிதாக விடுதலைபெற்ற இரண்டாவது போலிஷ் குடியரசு, 18 ஆம் நூற்றாண்டில் போலந்துப் பிரிவினைக்குப் பின்னர் ரஷ்யாவுடன் இணக்கப்பட்ட போலந்தின் கிழக்குப் பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. அது இப் பகுதிகளில் போல்ஷெவிக்குகளுடன் சண்டைகளில் ஈடுபட்டது. இது போலந்து-சோவியத் போருக்கு வித்திட்டது. ஜேர்மனியில் ஏற்பட்ட புரட்சி, மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தைப் பரப்புவதற்காக சரியான வேளை அதுவே என எண்ணத்தூண்டியது. சோவியத்தையும், ஜேர்மனியிலுள்ள கம்யூனிச ஆதரவாளர்களையும் இணைப்பதற்கும் அதன் மூலம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பாலமாகப் போலந்தை லெனின் கணித்திருந்தார். எனினும், சோவியத்-போலந்துப்போரில் தோல்வியடைந்ததனால் சோவியத்தின் இந்தத் திட்டம் பயனற்றுப் போயிற்று.

    லெனின் ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். 1917 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மை இனங்களுக்கும், அடக்கப்பட்ட நாட்டினங்களுக்குமான நிபந்தனை எதுவுமற்ற பிரிந்துபோகும் உரிமையை அறிவித்தார். எனினும் உள்நாட்டுப் போரை அடக்கியபின், புதிதாக விடுதலை பெற்ற ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளை படைப்பலத்தைப் பயன்படுத்தி, சோவியத்துடன் இணைத்துக் கொண்டார். இவ்வாறு இணைத்துக்கொண்டது, அந் நாடுகளை முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கே என அவர் வாதிட்டார்.
    லெனின் ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். 1917 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மை இனங்களுக்கும், அடக்கப்பட்ட நாட்டினங்களுக்குமான நிபந்தனை எதுவுமற்ற பிரிந்துபோகும் உரிமையை அறிவித்தார். எனினும் உள்நாட்டுப் போரை அடக்கியபின், புதிதாக விடுதலை பெற்ற ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளை படைப்பலத்தைப் பயன்படுத்தி, சோவியத்துடன் இணைத்துக் கொண்டார். இவ்வாறு இணைத்துக்கொண்டது, அந் நாடுகளை முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கே என அவர் வாதிட்டார்.

    லெனினைக் கொல்ல முயற்சி
    லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறி வந்தார். அப்போது அவர்மீது துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்டவனை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதற்றப்படாமல் தானே நடந்து சென்று வண்டியில் உட்கார்ந்தார். அவருடைய உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விடக்கூடிய ஆபத்துக் குறித்து மருத்துவர்கள் பயந்தார்கள். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளைப் பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். எதிரிப் படைகளை முறியடிக்கச் செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி தொடங்கியது.

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More