ரிலாக்ஸ் மாம்மு
அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
பல்லு வலின்னா
பல்ல பிடுங்கலாம்
ஆனா
கண்ணு வலின்னா
கண்ண பிடுங்க முடியுமா?
என் ஜீனியரிங் காலேஜில
மெடிக்கல் லீவு எடுக்கலாம்.
ஆனா
மெடிக்கல் காலேஜில
என்ஜீனியரிங் லீவு எடுக்க முடியுமா?
காதலியோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடின அருமை,
காதலியோட அண்ணன் "வூடு கட்டி" அடிக்கும் போது தான் தெரியும்!
கண்ணீருக்குச் சொந்தமானது
காதல் மட்டுமல்ல...
மின்னலை பார்த்தா கண்ணு போய்டும்.
பார்க்கலைன்னா மின்னல் போய்டும்
இட்லி சாஃப்டா இருக்குமா?
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
கடலுக்கடியிலே கொசுவே இல்லை ஏன் தெரியுமா?
கடலுக்கடியிலே தான் டார்டாய்ஸ் இருக்குல்ல
காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை?
ஏன்னா? அது கரையுமே!!!
தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
ஏன்னா? அதை தோய்க்கிறதாலே!!!
காதலர்கள் ஏன் எப்பவுமே பொய்யே பேசுறாங்க?
ஏன்னா? அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறாங்கலாம்!!!
மும்தாஜ் ஜோக்
காதலன் : மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி
உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்
காதலி : இந்தக் கதையெல்லாம் வேணாம்.
முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"
கொஞ்சல் ஜோக்
அக்கா : நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல
கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ?
தங்கை : குழந்தைகிட்ட இல்ல...
என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு
அக்கா : அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...
பெட் ரூம் என்னாச்சு ?
தங்கை : என்னது ?
சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா...? "
நன்றி : தமிழ் நெஞ்சம்
அர்ச்சனை ஜோக்
உங்க குடும்பம் ஒரு கோவிலா,
ஆமாம்
அவ்வளவு மரியாதையா ?
எப்போ போனாலும் கண்டிப்பா அர்ச்சனை இருக்கும்.
போலீஸ்காரர் ஜோக்
போலீஸ்காரர் : வண்டிக்கு லைசென்ஸ் இருக்கா ?
வாகன ஓட்டி : இருக்கு சார்
போலீஸ்காரர் : ஆர்.சி புக் ?
வாகன ஓட்டி : இருக்கு சார்
போலீஸ்காரர் : அப்போ ஏன்யா நிறுத்தாம போனே
வாகன ஓட்டி : பிரேக் தான் சார் இல்லை
பூகோளம் ஜோக்
நம்ம மாலா பூகோளத்துல ரொம்ப "வீக்’கா இருக்கா”
அவங்கப்பா, அம்மா அவளை "உலகமே தெரியாம" வளர்த்துட்டாங்க
சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜி ஒருவர் தன் பயணத்துக்கான விமான டிக்கெட்டை பதிவு செய்தார்.
அந்த விமானத்துக்கான விமான பயண நிமிடம் பற்றி அறிந்துக்கொள்ள கஸ்டமர் கேர் நம்பருக்கு தொடர்பு கொண்டு
தில்லியிலிருந்து மும்பைக்கு பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார்
அதற்கு கஸ்டமர் கேர் கேல், ஒரு நிமிடம் சார் என்று பயணப்பதிவேட்டை பார்ப்பதற்குள் சர்தார்ஜி தேங்க் யூ என்று கூறி தொலைப்பேசியை வைத்துவிட்டார்.
கடி ஜோக்
நாற்காலி மேலே உட்கார முடியும்
மலை மேலே உட்கார முடியும்...
குண்டூசி மேலே உட்கார முடியுமா?
பொட்டு ஜோக்
போலீஸ்காரர் மனைவி : என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்
தோழி : ஐயையோ.. அப்பறம்?
போலீஸ்காரர் மனைவி : நல்லவேளை, நெத்திப்பொட்டை மேக் அப் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்.
காதல் ஜோக்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு...
கல்யாணமே வந்திருச்சு. பிடி இன்விடேஷ்ன்.
உயிரோட இருந்தால் மொய் அனுப்பு...!
லோன் ஜோக்
வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!
கைதி ஜோக்
ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
சமையல் ஜோக்
அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.
மகள் : போதும் நிறுத்துங்கப்பா.
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.
தலைவர் ஜோக்
தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.
எப்படி?
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!
எறும்பு ஜோக்ஸ்
ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல "டபக்"குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம்.
என்ன கத்துச்சு?
"டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே"
அழகான பொண்ணு ஜோக்ஸ்
உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
வேலை ஜோக்ஸ்
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
சமையல் ஜோக்ஸ்
ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
புதன், 31 மார்ச், 2010
ரிலாக்ஸ் மாம்மு


0 comments:
கருத்துரையிடுக