சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

செவ்வாய், 30 மார்ச், 2010

வேற்றுமை (தமிழ் இலக்கணம்)

பெயர்ச்சொற்கள் உருபு மருபி வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும். தமிழில் எட்டு வேற்றுமைகள் உண்டு

முதல் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை
"பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த [உருபுஉருபும்] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

இரண்டாம் வேற்றுமை/செயற்படுபொருள் வேற்றுமை
பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அது இரண்டாம் வேற்றுமை எனப்படும். "யாரை அல்லது எதை என்னும் கோள்விக்கு விடையாக அமைவதுதான் செயற்படுபொருள். இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் செல்கிறோம்."
எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

மூன்றாம் வேற்றுமை
ஆல், ஆன். ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.
எ.கா: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.

நான்காம் வேற்றுமை
கு என்பது நான்காம் வேற்றுமையின் உருபு.
எ.கா: பொன்னுக்குப் பாடுபவர் உண்மைப் புலவர் அல்லர்.

ஐந்தாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை - உருபு - இல், இன்


ஆறாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை - உருபு - அது, ஆது, அ


ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை- உருபு - இல், கண், இடம்


எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை - உருபு - விளிப் பொருளில் வரும்


"ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை"
நன்னூல்

1 comments:

Anonymous சொன்னது…

very fantastic

கருத்துரையிடுக

Pages 181234 »