சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!











சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 
"மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். 
ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய 
வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. 
அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று 
சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் 
அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக 
பல போராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக 
பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், 
மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் 
கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் 
ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக 
அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் 
யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி 
அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், 
யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. 
எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் 
நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். 
"ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் 
போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு 
தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே 
இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் 
உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து 
விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை 
மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு 
"ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். 
இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை 
கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. 
உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். 
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் 
ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். 
மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் 
மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. 
உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே 
தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின்
 பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. 
அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித 
குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. 
மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து 
போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி 
மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள்.
 நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே 
அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் 
ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல்
 வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு 
பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை 
ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய 
ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே 
பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது 
அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் 
கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது 
என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற 
இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் 
இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் 
ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் 
தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே 
ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய 
காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. 
மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், 
வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, 
இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று 
இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். 
வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா 
என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று 
பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. 
வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக 
பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு 
தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை 
தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு 
போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" 
இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார 
மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த 
படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் 
கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், 
புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை 
எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் 
என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், 
தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். 
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் 
அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி
 ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து 
பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் 
தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட 
ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு 
இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும்
 ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் 
மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான 
மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் 
மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு 
தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி
 நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து
 போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க 
முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோ
டு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் 
பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."























நன்றி :  http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=825&title=tamil-tops-the-series-of-languages-digged-in


திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சாரியை

சாரியை

சாரியை என்பது தமிழில் ஒரு சொல் தானே நின்று பொருள் தராமல் பிறசொற்களோடு சேர்ந்து வரும்பொழுது மட்டும் பொருள்தரும் ஒரு வகைச் சொல் ஆகும். தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குச் சற்று எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும். எடுத்துக்காட்டுகள்:

மரம் என்னும் சொல்லொடு இரண்டாம் வேற்றுமையாகிய ஐ சேரும் பொழுது இடையே அத்து என்னும் ஒரு சொல் இட வேண்டும். இந்த அத்து என்னும் சொல் சாரியை எனப்படும். எனவே

மரம் + அத்து + ஐ = மரத்தை

படம் + அத்து + க்+ கு = படத்துக்கு.

இந்த அத்து என்னும் சாரியை ஒரு சொல்லின் இறுதியில் மகர ஒற்று இருந்தால், அதனுடன் சேரும் வேற்றுமை உருபுக்கு முன்பு வரும் சாரியை. பிற இடங்களில் வேறு சொற்கள் சாரியையாகப் பயன்படும்

பல + வற்று + ஐ = பலவற்றை (வற்று என்னும் சாரியையின் பயன்பாடு).

தமிழில்பொதுவாக சாரியையாகப் பயன்படும் சொற்கள்:அக்கு, அத்து, அம், அன், ஆன், இக்கு, இன், ஒன் என்பனவும் பிறவும் ஆம். இவற்றைச் சொற்களுக்கு இடையே வரும் சொற்சாரியை என்பர். இது தவிர எழுத்துச் சாரியை என்றும் ஒருவகை உண்டு. அவை கரம், காரம், கான் ஆகிய மூன்று சொற்கள். இவ் எழுத்துச் சாரியைகள் எழுத்துக்களை எளிதாகக் கூறுவதற்காகப் பயன்படுத்துவன. குறில் எழுத்துக்களாகிய அ, க முதலியவற்றைக் குறிக்க அகரம், ககரம் என்று "கரம்" என்னும் சாரியை சேர்த்துச் சொல்ல உதவுகின்றது. நெடில் எழுத்துக்களாகிய ஆ, ஊ, கா ஆகிய சொற்களைக் குறிக்க ஆகாரம், ஊகாரம், காகாரம் என்று காரம் என்னும் சாரியை சேர்த்து வழங்குவர். இதே போல கான் என்னும் சாரியை , ஐ, ஔ என்னும் எழுத்துக்களைக் குறிக்க ஐகான், ஔகான் என்று பயன்படுத்துவர்.

எழுத்தின் சாரியைப் பற்றி தொல்காப்பிய நூற்பா (புணரியல் 135):

காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை


சாரியை பற்றி தொல்காப்பியம் புணரியல் நூற்பா 120:

அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே


ஒன்றுக்கு மேலான சொற்கள் சாரியைகளாக வருதல்

சில இடங்களில் தமிழில் ஒன்றுக்கு மேலான சொற்களும் சாரியையாக வரும். எடுத்துக்காட்டு:

மரம் + அத்து + இன் + உ +க்+ கு = மரத்தினுக்கு (கு என்பது நான்காம் வேற்றுமை உருபு




































































நன்றி :  www.ta.wikipedia.org 

புதன், 18 ஆகஸ்ட், 2010

வேற்றுமையுருபு

வேற்றுமையுருபு

தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன.
அவை,

முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை

முதலாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.
(எ-டு) மரம், மனிதன், பறவை.

இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.
(எ-டு) மரத்தை, மனிதனை, பறவையை.

மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமையின் உருபு 'ஆல்' ஆகும்.
(எ-டு) மரத்தால், மனிதனால், பறவையால்.

நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமையின் உருபு 'கு' ஆகும்.
(எ-டு) மரத்திற்கு, மனிதனுக்கு, பறவைக்கு.

ஐந்தாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமையின் உருபு 'இன்' ஆகும்.
(எ-டு) மரத்தின், மனிதனின், பறவையின்.

ஆறாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' ஆகும்.
(எ-டு) மரத்தினுடையது, மனிதனது, பறவையினுடையது.

ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமையின் உருபு 'கண்' ஆகும்.
(எ-டு) மரத்தின்கண், மனிதன்கண், பரவையின்கண்.

எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. இது, 'ஐயோ', 'ஆகா' போன்ற விளிச் சொற்களையே கொண்டு வரும்.
(எ-டு) ஓ மரமே, ஓ மனிதனே, ஓ பறவையே.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

செம்மொழியின் தகுதிகள்




செம்மொழியின் தகுதிகள்
 

செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :



1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு



1. தொன்மை
செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.



2. தனித் தன்மை
பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.
7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.



9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு


















































நன்றி : http://kaniyatamil.com/semmozhi.htm

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நண்பர்களே!!!



தமிழகத்தில்

பெயரளவில் தமிழ்

என கொதிக்கின்றேன்!

அடடா!

தமிழரின்

பெயரிலும் தமிழ் இல்லை!



இதோ... தமிழில் பெயர்கள் சில உங்களுக்காக...


http://www.indusladies.com/forums/indian-baby-names/51211-a.html
இங்கே சொடுக்கவும்.

தமிழ்மொழியின் சிறப்பு



தமிழ்மொழியின் சிறப்பு
ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்

2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்

3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்

4. இலக்கியச் சான்றுகள்

5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்

6. பழைய நாணயங்கள்

7. அரசு சாசனங்கள்

8. அரசர்களின் ஆவணங்கள்

9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)

10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவைகள்:

1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை,

என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்
தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.


அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.

3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.

5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.

6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.

7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.

நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.

9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.

10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….

11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.

12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.

13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

புகழ்க்கொடி நாட்டியது

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.

முக்கியக் குறிப்பு

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே! இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.


























































இதன் மூலம் http://www.saahithyan.de/index.php?option=com_content&view=article&id=45:joomla-community-portal&catid=1:aktuelle-nachrichten&Itemid=50 இங்கிருந்து எடுக்கப்பட்டது