சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 20 நவம்பர், 2010

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு!!

திருவரங்கம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.
இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.


இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.
கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.
வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.
இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”, என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.
வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.
இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,
“தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!”
என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.














அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!






தகவல், புகைப்படங்கள்:
ம.க.இ.க, திருச்சி. & வினவு

வெள்ளி, 29 அக்டோபர், 2010

வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள்

வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு:
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்:
கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.


கொடூரமும், கோரமும்:
பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை!
நிலத்தடி நீரை பால்படுத்தும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்!
உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். இம்மாவட்டத்தில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம்' கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம்,' என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்.


வெளிநாட்டில் "கெட் அவுட்':
உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.


கேரள குளுமைக்கு காரணம் என்ன? ராமநாதபுரம் மாவட்டவாசிகள் கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. இங்குள்ள கருவேல மரங்களை அகற்றினால், நமது மாவட்டமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.

காசு செய்யும் வேலை:
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­


வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...:
தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.


கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை:
மாவட்டத்தில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல மரங்களின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...:
வறட்சி, பின்தங்கி மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, எடுத்து தருவதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.


விவசாயிகள் சொல்வதென்ன...

ஸ்ரீதர்(உத்தரகோசமங்கை):
கீழக்கரை, திருப்புல்லாணி உள்ள அதிகமான கருவேல மரங்களால், விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு மாறி விட்டனர். இவற்றின் வேர் பூமியின் கடைசி பகுதி வரை செல்வதால் நிலங்கள் கடுமையான வெப்பத்தை சந்திக்கிறது. நிலத்தடி நீரை காப்பாற்ற கருவேல மரங்களை ஒழிக்க வேண்டியது அவசியம்.


சேக்அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்):
திருவாடானை தாலுகாவின் கடற்கரை பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். கருவேல மரங்களை அப்புறப்படுத்திவிட்டு நல்ல மரங்களை நடுவு செய்தால், அதன் பலனை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கலாம்.

சுகுமாறன்(பரமக்குடி):
கருவேல மரங்களால் காற்று மாசுபடுகிறது. இதைதடுக்க கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை தடுக்கவும், ராமநாதபுரத்தை வறட்சியிலிருந்து மீட்கவும் கருவேலமரங்கள் ஒழிப்பு கோஷம் ஓங்க வேண்டும்.


ராசு(கமுதி):
கருவேலமரங்களால் வெயில்காலத்தில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. கருவேல மரங்களை வெட்டி எத்தனையோ பேர் பிழைப்பு நடத்துகின்றனர். இருந்தாலும் , இதை அழித்தால் விவசாயம் கைகொடுக்கும் என்பதால் பாதிப்பு வராது.


திருநாவுக்கரசு (எஸ். எம். இலந்தைக்குளம், கடலாடி):
மித மழையில் விளையும் மிளகாய், குறுகியகால பயிரான தக்காளி, கத்தரிக்காய் போன்றவையும் கருவேல மரங்களால் பாதித்துவிட்டது. இவற்றை அகற்றவில்லை என்றால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் இடம் பெயருவதை தவிர வேறுவழியில்லை.


அழிக்க வேண்டியது அவசியம்...:
மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம் துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.















நன்றி : தினமலர்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கவிதை போட்டி

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு குழுமத்தின் கவிதை போட்டிக்காக தோழி ரம்பை அனுப்பிய கவிதை.... உங்கள் பார்வைக்காக....


தேடல்கள்

தேடித் தேடி தேயந்து போனது
எனது பாதங்கள் அல்ல
     என் மனசு
பார்த்துப் பார்த்துப் பூத்துப் போனது
எனது விழிகள் அல்ல
என் இதயம்
கேட்டுக் கேட்டுக் கிழிந்து போனது
எனது செவிகள் அல்ல
      என் உள்ளம்
பேசிப்பேசி வலித்துப் போனது
எனது வாய்கள் அல்ல
மறுபடியும் என் மனசே
பட்டுப் பட்டு கெட்டுப் போனது
எனது குடிகள் அல்ல
வெந்து போன என் இதயமே

                   -அற்புதாரம்பை








ரம்பை அவர்களுக்கு எங்கள் குழுமத்தின் பாராட்டுகள்,....

வெள்ளி, 15 அக்டோபர், 2010

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன









சனி, 2 அக்டோபர், 2010

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?

காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன.  கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.


















ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.
  என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..
……..
அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,
சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.
த‌ங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.
(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)


















இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது.  அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
  பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து  காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.













இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
  காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.  அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.












அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
 இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.





















நட்புடன்......

ப.நற்றமிழன். 

http://natramizhan.wordpress.com/2010/10/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/

புதன், 15 செப்டம்பர், 2010

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு
சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புர மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிட்டது.அதனை தடுத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது இந்த இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விகூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது.


தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
 இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.

நலிந்த மக்களின் உரிமைதான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு. இதை மையமாக வைத்துதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917ல் துவக்கப்பட்டு, நாளடைவில் அது நீதிக் கட்சியாக மாறியது.  ஆண்டாண்டு காலமாக அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவினருக்கும் அரசாங்கத்தில், நிர்வாகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம். பின்தங்கியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம.


சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா? அப்படி பார்க்கும் பார்வை சரியானதா? என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது. எனவே தான் பெண்களும் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக செயல்பட இட ஒதுக்கீடு வழிவகை செய்கிறது.

ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

தமிழகத்தில் மாற்றுத் திறனுடையோருக்கு தனித் துறை ஏற்படுத்தி அதனை தமிழக முதல்வர் தனிக்கவனம் ‎செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாற்றுத்திறன் என்பது உடல் ‎ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் ‎அடங்குவர்.
சாதாணமாக மேற்கண்ட உடல் பாதிப்புள்ளோர் பிறவியிலோ, உடல் நோவினாலோ, விபத்துக்காரணமாகவோ, ‎பரம்பரை(ஜெனி) கேளாறு காரணமாகவோ ஏற்படலாம். அதனால் வாழ்வில் மனிதர்கள் முடங்கி விடக்கூடாது ‎என்பதினை வலியுறுத்தவே இவர்களுக்கான் இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக உத்தரிப்பாக (??) ஆகும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் L. அனிதா ரிச்சர்ட்சன்  என்பவர் கூறுகிறார்.
எது எப்படியோ நம் நாட்டைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு என்பது நம் மக்கள் சுதந்திரமாக அனைத்து பொறுப்பிலும் நடமாட தேவையான ஒன்று.



வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தமிழர் நிலத்திணைகள்

தமிழர் நிலத்திணைகள் என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும். இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.




காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை

இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.

வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,

கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.

இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன



















நன்றி :  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!











சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 
"மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். 
ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய 
வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. 
அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று 
சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் 
அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக 
பல போராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக 
பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், 
மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் 
கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் 
ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக 
அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் 
யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி 
அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், 
யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. 
எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் 
நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். 
"ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் 
போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு 
தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே 
இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் 
உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து 
விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை 
மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு 
"ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். 
இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை 
கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. 
உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். 
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் 
ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். 
மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் 
மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. 
உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே 
தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின்
 பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. 
அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித 
குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. 
மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து 
போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி 
மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள்.
 நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே 
அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் 
ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல்
 வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு 
பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை 
ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய 
ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே 
பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது 
அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் 
கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது 
என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற 
இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் 
இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் 
ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் 
தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே 
ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய 
காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. 
மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், 
வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, 
இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று 
இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். 
வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா 
என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று 
பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. 
வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக 
பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு 
தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை 
தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு 
போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" 
இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார 
மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த 
படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் 
கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், 
புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை 
எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் 
என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், 
தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். 
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் 
அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி
 ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து 
பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் 
தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட 
ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு 
இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும்
 ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் 
மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான 
மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் 
மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு 
தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி
 நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து
 போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க 
முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோ
டு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் 
பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."























நன்றி :  http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=825&title=tamil-tops-the-series-of-languages-digged-in